தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க காலம் - புகழூர் சேரர் கல்வெட்டும் செப்பு காசுகளும்.


Guru

Status: Offline
Posts: 898
Date:
சங்க காலம் - புகழூர் சேரர் கல்வெட்டும் செப்பு காசுகளும்.
Permalink  
 


சங்க காலம் -  புகழூர் சேரர் கல்வெட்டும் செப்பு காசுகளும்.

சங்க இலக்கியம் என்பது பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்ற 18 நூல்களை கொண்டது. இதில் எட்டுத்தொகை என்பது பல்வேறு புலவர்கள் பாடிய சிறுசிறு பாடல்களை தொகுத்த எட்டு நூல்கள் ஆகும் இவற்றில் முக்கியமானவை புறநானூறு பதிற்றுப்பத்து அகநானூறு போன்றவை ஆகும் இதில் உள்ள கலித்தொகை பரிபாடல் பிற்காலத்தது என்பது அறிஞர்கள் முடிவு. 

_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0

பத்துப்பாட்டு என்பது 10 புலவர்கள் 10 தலைவர்கள் மீது பாடிய பாடல்கள் இதில் உள்ள எல்லா தலைவர்களுமே, சேரன் செங்குட்டுவனுக்கு பிற்கால மாணவர்கள் அதாவது பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துக்கு பெரும்பான் அவர்கள் எனவே சேரன் செங்குட்டுவன் காலம் மிகவும் முக்கியமாக ஆகிறது அவற்றை நாம் அறிந்தால் பெரும்பாலாக சங்ககாலத்தை தீர்மானிக்க இயலும் இப்பொழுது நாம் காண்போம்



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
RE: சங்க காலம் - புகழூர் சேரர் கல்வெட்டும் செப்பு காசுகளும்.
Permalink  
 


கரூர் அருகே உள்ள புகழூரில் கிடைத்துள்ள கல்வெட்டில் மூன்று சேர மன்னர்களின் பெயர்கள் உள்ளன அந்த கல்வெட்டினை பற்றி காண்போம் ]Senguttovan%2011.jpgSenguttovan%2001.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

புகழூர் (கரூர் அருகே) கல்வெட்டு சங்க கால சேர மன்னர்கள் மூன்று தலைமுறையை(சேரன் செங்குட்டுவன் முன்னோர்) வரிசையாக கூறுவதாக வரலாற்று அறிஞர்கள் இடை கருத்து ஒற்றுமை உள்ளது. இந்த சேர அரசர்கள் வெளியிட்ட பிராமி எழுத்து பொறித்த காசுகள் உள்ளதையும் நாம் இந்த இணைப்பில் காணலாம்

  https://www.tamilvu.org/ta/tdb-titles-cont-inscription-html-kollirumpurai-coins-280455 

318428813_665482218407095_84120594981860kollirumporai.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

இந்த கல்வெட்டு & காசுகள் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ. 188 முதல் 243(CE) என்பதாக அறிஞர்கள் குறிக்கிறார்கள் https://en.wikipedia.org/wiki/Cenkuttuvan

x%20KaL%20a1s0a.jpg
சேரன் செங்குட்டுவன் காலம் 243 முடிகிறது என்றால் அதற்குப் பிறகு 10 தலைமுறைகள் ஆட்சி செய்தனர் எனில் மேலும் 250 ஆண்டுகள் வருகிறது அதாவது 5ம் நூற்றாண்டு இறுதிவரை செய்த சேர அரசர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இதற்கு பிறகான  சில அரசர்களைப் பற்றியும் மற்ற பாடல்களில் உள்ளது என்று அறிஞர்கள் கருத்து, எனில் சங்க காலம் 6ம் நூற்றாண்டு தாண்டி தொடர்ந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

சேர மன்னன் மாக்கோதைக் காசு

Sangamkothaicoins.jpg

உலோகம் :வெள்ளி
எடை :1.1 - 2.1 வரை கிடைத்துள்ளன
வடிவம் : வட்டம்
அளவு :1.5 - 1.9
காலம் :பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு 

குறிப்பு:

நாணயவியலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இக்காசுகளில் 11 வகையான காசுளைத் தமது நூலில் வெளியிட்டுள்ளார். காசுகளின் எடையும், அளவும் எல்லாக் காசுகளுக்கும் ஒன்று போல் இல்லை. எனவே, இக்காசுகளின் எடை சராசரியாக 1 கிராம் முதல் 2கிராம் வரை எனக் கொள்ளலாம்.

மாக்கோதை பற்றிய இலக்கியக் குறிப்பு

இலக்கியங்களில் "மாக்கோதை" என்ற பெயர் நேரிடையாகக் குறிப்பிடப்பெறவில்லை. இருப்பினும் கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை என்ற மன்னன் குறிப்பிடப்பெறுகிறான். இவனே "மாக்கோதை" நாணயத்தை வெளியிட்ட மன்னன் எனக்கருதலாம். கோட்டம்பலம் என்பதை கோட்டம் + அம்பலம் எனப் பிரிக்கலாம். கோட்டம் என்பது கேரளாவில் உள்ள கோட்டயம் என்பதைக் குறிக்கும். அம்பலம் என்பது கோயில். இவ்வரசர் கோட்டம்பலம் என்னும் இடத்தில் இறந்திருக்கலாம். அதனால் அப்பெயர் பெற்றிருக்கலாம் எனச் சிதம்பரனார் கூறுகின்றார். கேரளத்தில் அம்பலப்புழை பகுதியில் மாக்கோதை மங்கலம் என்றொரு ஊர் உள்ளது. இதுவே கோட்டம்பலமாக இருக்கலாம் எனப் புருஷோத்தமும் குறிப்பிடுகின்றனர்.

macao-cash.jpg

இந்நாணயத்தைப் பற்றி விளக்கும் இரா.கிருஷ்ணமூர்த்தி , நாணயங்களில் வரையப்பெற்றிருக்கும் உருவங்களைக் கொண்டு, இதில் இறுதியாகக் கொடுக்கப்பெற்றிருக்கும் உருவம் வயதான தோற்றமுடையதாக இருப்பதானால் இந்நாணயம் ஒரே வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்களால் வெளியிடப்பெற்றுள்ளது. இந்த அரசர்கள் ஒவ்வொருவரும் 25 வருடங்கள் ஆட்சி செய்து வந்தனர் என்று கணிக்கின்றனர். இவரது கருத்து குழப்பம் தருவதாக உள்ளது. எனவே, நாணயங்களின் உருவ ஒற்றுமையைக்கொண்டு, மாக்கோதையே தனது நடுத்தர வயதிலிருந்து முதிய வயதுவரை இந்நாணயங்களை வெளியிட்டிருக்கலாம் எனக் கருதலாம். மேலும், இந்நாணயத்தின் தலை உருவம் வழுக்கையாகவே காணப்பெறுகின்றது. இதில் மூக்கிற்குப் பின் குடுமி இருப்பதாக ஐ.கே. சர்மா குறிப்பிடுகின்றார். இதுபோன்ற நாணயத்தை இதுவரையில் காண இயலவில்லை.

காலம் குறித்த கருத்துக்கள்:

குறிப்பு:

காசுகள் எவற்றிலும் காலம் குறிக்கப்பெறுவதில்லை. எழுத்தமைதி, இலக்கியக் குறிப்புகளோடு பிற சான்றுகளையும் ஒப்பிட்டே காசுகளுக்குக் காலம் கணிக்க இயலும்.

கருவூரில் கிடைத்த இக்காசிற்குக் கிருஷ்ண மூர்த்தி பொ.ஆ.மு. 100 - பொ.ஆ.100 எனக் காலம் கணிக்கிறார். இவர் தலைபொறிக்கப் பெற்ற காசுகள் கிரேக்கர்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டது எனக் கருதுகிறார். கிரேக்கர்கள் தமிழகத்தோடு செய்த வணிகத்தை அடியொட்டி அக்காலத்தைக் கணிக்கிறார். துவக்கத்தில் தலை உருவம் பொறிக்கப்பெற்ற வெள்ளிக் காசுகளை வெளியிட்டது மேற்கத்திய ஷத்திரபர்களே. இவர்கள் இந்தோ கிரேக்க மன்னர்களின் "ட்ரெச்சம்" என்ற காசு வகைகளைப் பின்பற்றி இவ்விதம் வெளியிட்டுள்ளனர். இவர்களைப் பார்த்து சாதவாகனர்கள் பின்பற்றியுள்ளனர். உள் நாட்டு அரசுகளில் குறிப்பாக இந்தியாவிற்குள் முதன் முதலில் தலைப் பொறிப்பு வெள்ளிக் காசுகளை வெளியிட்ட பெருமை சேர அரசர்களை அதுவும் மாக்கோதையையே சாரும் என்கிறார் . அத்துடன் இதுவரைச் சாதவாகனர்களே கிரேக்கர்களைப் பின்பற்றித் தலை உருவம் பொறித்த காசுகளைப் பொறித்தனர் என்றும், இப்பொழுது அக்கருத்து மாற்றத்தக்கது என்றும் கூறுகின்றார். சங்க காலத்தின் அடிப்படைச் சான்றாக விளங்கும் இலக்கியங்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. எனவே, இவரது கருத்தோடு இலக்கிய ஆசிரியர்களின் கருத்துக்களும் இங்கு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஓன்றாகிறது. சங்க இலக்கியங்களைத் திறம்பட ஆய்வு செய்துள்ள வ. குருநாதன் இம்மன்னனுக்கு பொ.ஆ. 50 - 75 எனக் காலம் கணித்துள்ளார். இக்காலக் கணிப்பு எழுத்தமைதியோடும் ஒத்துச் செல்வதால் இக்கருத்தினை ஏற்கலாம்.

மாக்கோதை காசிற்கு ஐராவதம் மஹாதேவன் பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டென்று காலம் கணிக்கிறார். பதிற்றுப் பத்து இலக்கியங்களின் அடிப்படையில் மாக்கோதை மன்னன் கொல்லிப்புறை என்ற காசுகளை வெளியிட்டுள்ளதாகக் கருதப்படும் அரசர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை மாக்கோதைக்கு முன்னர் ஆண்ட மன்னராவார். கொல்லிப்புறை காசிற்கு பொ.ஆ.1ஆம் நூற்றாண்டு எனக் காலம் கணிக்கும் இவர் மாக்கோதைக்கு பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு எனக் கணிப்பது ஏற்க இயலாததாக உள்ளது. எனவே, அறிஞர்கள் எழுத்தமைதியை மட்டுமன்றி இலக்கியங்களையும் உற்றுநோக்கி தமது கருத்துக்களை வெளிப்படுத்தினால் வளரும் ஆய்வாளர்களுக்கு உறுதுணையாக அமையும் எனக் கருதுகிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard