சங்கப் இலக்கியப் பாடல்கள் எட்டுத்தொகை & பத்துப்பாட்டு எனும் தொகுப்புக்கள்; பதினெண்மேல்கணக்கு என்றும் கூறுவர், இவை மனித வாழ்வை அகம் - உள்ளே தனி மனிதன் காதல் வாழ்வையும் புறம் - வெளியே அரசன் போர் வாழ்வைப் பற்றிய பாடல்கள் ஆகும்.
1.3.2 எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை. இவற்றுள் நற்றிணை,குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகநூல்களாகும். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்களாகும். பரிபாடல் அகமும், புறமும் கலந்த நூலாகும்.
மேற்கண்ட எட்டுத்தொகை நூல்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
1.அகப்பொருள் நூல்கள் : 5 நூல்கள் உள்ளம் ஒத்த தலைவனும் தலைவியும் ஊடல் ஏற்பட்டுப் பின்பு காதலால் இன்பம் துய்ப்பது ஆகும். காதல் இன்பம் இத்தகையது என்று பிறருக்குச் சொல்ல முடியாதபடி உள்ளத்தினுள் (அகம்) அனுபவிக்கும் உணர்ச்சியே அகப்பொருள் ஆகும். 1.நற்றிணை 2.குறுத்தொகை 3.ஐங்குறுநூறு 4.கலித்தொகை 5.அகநானூறு
2.புறப்பொருள் நூல்கள் : 2 நூல்கள்- இருபெரும் மன்னர்களின் மண்ணாசையினால் ஏற்படுகின்ற போர்ச்செய்திகளைக் கூறுவது. போர் எவ்வாறு ஆரமிக்கும் என்பதிலிருந்து மனித கற்பனைகளுக்கு எட்டாதவாறு இவ்வாறெல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளது பாராட்டத்தக்கது. படிப்பவர்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப ஒன்றுவிடாமல் வரிசையாக அனைத்தும் சொல்லியுள்ளது ஆகும். இத்தகையது என்று பிறருக்குப் புலப்படுத்தும் உணர்ச்சியே புறப்பொருள் ஆகும். 1.பதிற்றுப்பத்து 2.புறநானூறு இங்கு, அகம்புறம் ஆகிய இரண்டும் சேர்ந்து வருவது பரிபாடல் மட்டுமே நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு ஆகியவைகள் முதலில் தொகுக்கப்பட்டன. கலித்தொகை இறுதியில் தொகுக்கப்பட்டது. பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் ஆகியவற்றைத் தொகுத்த விவரம் கிடைக்கவில்லை. அகப்பொருட்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்கள் அழிந்தும் சிதைந்தும் பாடவேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன. எட்டுத்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை 3 அடி ஆகும். பேரெல்லை 140 அடி ஆகும். எட்டுத்தொகையில் 700 புலவர்கள் பாடிய பாடல்கள் 2360கொண்டவையாக உள்ளன. அவர்கள் அனைவரும் பல ஊரினர், பலவாய தொழிலினைக் கொண்டவர்கள், பல்வேறு காலத்தவர்கள், அரசர்கள் முதல் சாதாரண புலவர்கள் வரை இவற்றில் அடங்குவர். ஆனால் எட்டுத்தொகை நூல்கள் அனைத்தும் பலபேர் பாடியபோதிலும் ஒருவரே பாடியது போன்று அமைந்துள்ளது சிறப்பாகும். ஒரே வகையான மரபுகள், ஒருதிற இலக்கியப்போக்கு, ஒருநெறியாய நாகரிகம், உண்மைத்தன்மை ஆகிய கொண்டு இலங்குகிறது. எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட பின்னர் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, புறநானூறு ஆகிய ஐந்தினுக்கும் அவ்வத்தொகை நூல் பாடலின் அமைப்பில் ஒவ்வொரு கடவுள் வாழ்த்துப்பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடி இணைத்தார். தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் காட்டும் ‘எரி எள்ளு அன்ன நிறத்தன’ எனத் தொடங்கும் பாடலை பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப்பாடலாகக் கொள்வர். பரிபாடல் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெயர் தெரியவில்லை. கலித்தொகையின் கடவுள் வாழ்த்தை நூலாசிரியர் நல்லந்துவனாரே இயற்றி உள்ளார். எட்டுத்தொகை நூல்களில் பாடலால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு. 1.கலித்தொகை ( கலிப்பா) 2.பரிபாடல் ( பரிபாட்டு) எட்டுத்தொகை நூல்களில் காலத்தால் முந்தியது புறுநானூறு ஆகும்.எட்டுத்தொகை நூல்களில் காலத்தால் பிந்தியது கலித்தொகை மற்றும் பரிபாடல் ஆகியன. எட்டுத்தொகை நூல்கள் பல்வகைப் பொருள் பற்றியன
அகப்பொருட் பாடல்களில் தலைவனின் பண்புகள், தலைவியின் கற்ப நெறி, மனம் சார்ந்த காதல் உணர்வுகள், உறவுநிலைகளின் வெளிப்பாடுகள், இல்வாக்கையின் தத்துவம், ஐந்திணை அறம், மக்களின் பழக்கவழக்கம் ஆகியனவும்.
இவ்வெண்பாவில் உள்ள முருகு என்று கூறப்படுகின்ற திருமுருகாற்றுப்படை, பொருநாறு என்று சொல்லப்படுகின்ற பொருநர் ஆற்றுப்படை, பாணிரண்டு என்று கூறப்படுகின்ற சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கடாம் என்று அழைக்கப்படுகின்ற மலைபடுகடாம் ஆகியவை ஆற்றுப்படை என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தவை. இவை புறப்பாடல்கள் ஆகும். இவை தவிர மதுரைக்காஞ்சியும் புறப்பாடல் ஆகும்.
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியவை அகப்பாடல்களாகும். நெடுநல்வாடை அக இலக்கியமா, புற இலக்கியமா என்ற ஆய்வு இன்னும் நிகழ்ந்து வருகின்றது. இவற்றுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய பாடலாகும். மதுரைக் காஞ்சி 782 அடிகளை உடைய மிகப் பெரிய பாடலாகும். இப்பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் இணைந்து பதினெண்மேற்கணக்கு எனவும் பெயர் பெறும்.