சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர் 15
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்
ஈங்கு நீர் அளிக்கும்_கால் இறை சிறந்து ஒரு நாள் நீர்
நீங்கும்_கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ
செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர்
ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல் 20
ஒரு நாள் நீர் அளிக்கும்_கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர்
பாராட்டா_கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை
பிரிந்த_கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்
என ஆங்கு 25
சிறப்புகள் பல செய்து அருகிலிருந்து புகழ்ந்து பாராட்டிவிட்டு, அவர்
புறத்தே அகன்றவுடன் பழி தூற்றுகின்ற புன்மையாளர் போல -
அருகிருந்து நீர் அன்புசெய்யும் காலத்தில் கைகளில் செறிந்திருந்து, ஒரே ஒரு நாள் நீர்
பிரிந்திருக்கும்போதும் உடல் மெலிய கைகளினின்றும் கழன்றோடும் வளைகள் என்றும் இருக்கின்றனவே!
ஒருவர் செல்வத்துடன் வாழுங்காலத்தில் அவருடன் சேர்ந்து அவருடைய வளத்தை உண்டுவிட்டு, அவர்
வறுமையுற்ற காலத்தில் எந்த வித உதவியும் செய்யாத உணர்வில்லாதவரின் தொடர்பு போல -
ஒருநாள் நீர் அன்புசெய்யும்போது சிறந்த ஒளியுடன் விளங்கி, ஒருநாள் நீர்
பாராட்டாமல் இருக்கும்போதும் ஒளியிழந்து பசந்துபோகும் நெற்றி என்றும் இருக்கின்றதே!
உள்ளம் பொருந்திய நட்பினால் ஒருவரின் அந்தரங்கமான செய்தியைத் தெரிந்துகொண்டு, அதனை
அவரை விட்டுப் பிரிந்துவிட்ட போது பிறர்க்கு உரைக்கும் பண்பில்லாதவர்கள் போல் -
என்றெல்லாம் இங்கே
#10 வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்
சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின்
அலவு_உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி 5
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம்
வறுமைப்பட்டவனின் இளமை வீணே கழிவதுபோல, வாட்டும் கோடையால் மரக்கிளைகள் வெறுமையுற்றுக் கிடக்க,
அறிவற்ற ஒருவனின் செல்வம் பிறர்க்குப் பயன்படாதது போல, தம்மை அண்டினோர்க்கு நிழலைத் தரமுடியாமல்,
யாரையும் மதியாமல் நடந்து தன் நல்ல பெயரைக் கெடுத்துக்கொண்டவனின் இறுதிக்காலம் போல,
வேரோடு மரம் வாடிப்போகுமாறு ஞாயிற்றின் விரிந்த கதிர்கள் சுடுதலால்,
வருத்தமுற்றுக் குடிமக்கள் கூக்குரலிட, அறநெறி கெட்டுப் பொருளின்மேல் ஆசைகொண்டு,
கொலைக்கு அஞ்சாத கொடிய அமைச்சரால் தனது நல்லாட்சியில் பிறழ்ந்த அரசனின் ஆட்சியின் கீழ் வாழும்
நாட்டு மக்களின் உள்ளங்களைப் போல் வற்றிக் காய்ந்துபோன உயர்ந்த மரங்களைக் கொண்ட கொடிய பாலை வழியில்
ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடும்
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்
நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும் 10
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்
சான்றோரின் அடக்கத்தைப் போன்று, அரும்புகளை மலரவிடாமல் அடக்கிவைத்திருக்கும் கிளைகளோடும்,
இசைவல்லார் இசைக்கும் இனிய யாழிசை போன்று வண்டுகள் ஒலிக்கும் புதர்களோடும்,
நல்ல கூத்தாடுபவரின் ஆட்டம் போன்று நயமாக ஆடும் மலர்க்கொடிகளோடும்,
செல்வம் நிலையாது என்று உணர்ந்தவரின் ஈகையைப் போன்று பூங்கொத்துக்களைச் சொரியும் மரங்களோடும்,
# 120
அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான்
வெருவு_உற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய
இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி 5
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக
நால் திசையும் நடுக்கு_உறூஉம் மடங்கல் காலை
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை
அருள் முற்றிலும் அற்றுப்போன தோற்றமுடையவன், அறநெறியைப் பாராதவன், நல்லவற்றைச் செய்யாதவன்,
பலரும் கண்டு அஞ்சுமாறு செயல்களைச் செய்தவன் ஆகிய ஒருவனின் நெஞ்சத்தைப் போல, மெல்ல மெல்ல
இருள் வந்து நிறைந்து, தனிமைத் துயர் மேலிட, தகிக்கின்ற கதிர்களைக் கொண்ட ஞாயிறு மலையில் மறைய,
தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை
இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து தோற்றத்தில் தொய்வுபட்டு,
இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக,
சிறப்பு மிகுந்த தோற்றமுள்ள செக்கர் வானத்தில் தோன்றும் கூர்மையான நுனியையுடைய பிறையே பல்லாக,
நான்கு திசைகளும் நடுக்கமுறும் ஊழியின் முடிவுக்காலத்தில்
கூற்றுவன் சிரிப்பது போன்று அச்சத்தை வருவித்துக் கொடுமை செய்யும் மாலைக்காலமே!
# 148
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப 5
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப
38 அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு 20
அறநெறியைக் கைவிட்டவன் முதுமையில் சீரழிவது போல், மனம் அழிந்துபோய்க் கிடந்தவள், விடியற்காலையில்
நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள், அந்தச் சீரினால்
அயலார் கூறும் இழிப்புரைகளை மாற்றத்தக்க ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக,
3 மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும்
கானம் தகைப்ப செலவு 21 22
உனக்கு மேலாய் நின்று உண்மைகளை இடித்துக்கூறும் நண்பர்களைப் போல, நீ செல்லும்
காட்டு வழியே தடுத்துநிறுத்தும் உன் பயணத்தை.
45 எஞ்சாது எல்லா கொடுமை நுவலாதி 25
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்
"ஓயாமல் தோழியே! அவனதுகொடுமையைப் பற்றிப் பேசாதே!
அஞ்சவேண்டியதற்கு அஞ்சாத அறங்கெட்டவன் அல்லன் என்
நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டவன்!
43 மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று
புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட 20
தன் மீது பகை கொண்டு, தன்னைப் பொறுக்காதவரெனினும், அவரின் குற்றத்தைப்
பிறர்க்குக் கூறுவதை அறியாதவனின் குன்று!"
"பெண்யானையுடன் சேர்ந்து, வளகுத்தழையைத் தின்ற,
43 கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால் 25
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா_கால்
தன் மெய் துறப்பான் மலை
என ஆங்கு
வளைந்த காய்கள் குலைதோறும் தொங்குகின்றன, வறுமைத் துன்பத்தால்
இல்லையென்று சொல்வார்க்கு, அதனைப் போக்கமாட்டாத நிலை வரும்போது
தன் உடலைவிட்டு உயிர் துறப்பவனின் மலையில்!"
"என்று
#47
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்
நல்லார்_கண் தோன்றும் அடக்கமும் உடையன்
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க 5
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்
#47
ஒருவன் என்னிடம் ஏதோ ஒரு பொருளை இரந்து கேட்பவன் போல் பணிந்து சிலவற்றைச் சொன்னான், இந்த உலகத்தைக்
காக்கின்றவன் போல் ஓர் அறிவாற்றல் உள்ளவனாய்த் தோன்றுகிறான்,
சிறந்த அறிவுள்ளவர்களை வழிபட்டு உண்மைகளை அறிந்தவன் போல்
நல்லவர்களிடத்தே காணப்படும் அடக்கமும் உடையவனாயிருக்கிறான்,
இல்லாதவர்களின் வறுமைத் துன்பத்தைத் தன் ஈகைக் குணத்தினால் துடைக்க
வல்லவன் போன்ற பொருளாற்றலும் உள்ளவனாய்த் தோன்றுகிறான்,
133 ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் 10
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல்
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி 15
இல்லறம் ஆற்றுதல் என்பது வறுமைப்பட்டவர்க்கு உதவுதல்,
பேணிப் பாதுகாத்தல் என்பது கூடினவரைப் பிரியாதிருத்தல்,
பண்பு எனப்படுவது உலக நடப்பு அறிந்து அதன்படி நடத்தல்,
அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரைக் கோபிக்காதிருத்தல்,
அறிவு எனப்படுவது பேதைகளின் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்,
செறிவு எனப்படுவது கூறிய எதனையும் மறக்காதிருத்தல்,
நிறை எனப்படுவது மறைத்துக் காக்கவேண்டிவற்றைப் பிறர் அறியாமல் காத்தல்,
முறை எனப்படுவது வேண்டியவர் என்று பார்க்காமல் குற்றத்திற்கேற்ற தண்டனை கொடுத்தல்,
பொறை எனப்படுவது தம்மைப் போற்றாதவரையும் பொறுத்துக்கொள்ளுதல்,
இவ்வாறு சொன்னவற்றை அறிந்து அதன்படி நடப்பவரென்றால், என் தோழியின்
149 கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை_கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால் 5
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் 10
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
ஆங்கு
கற்பித்த ஆசிரியனின் நெஞ்சம் நோகும்படி, அவன் வறுமையில் அவனோடு பகிர்ந்து உண்ணாமல், தான் கற்ற கல்விக்குக்
கேடுசெய்தவனுடைய பொருளைப் போல் தானாகவே அழிந்து போவான்,
தனது வறுமைக் காலத்தில் தனக்கு உதவியோருக்கு, அவரது வறுமைக் காலத்தில் அவருக்கு உதவாதவன், அவனது
பிற்காலத்திலும் அது அவனைப் பழிதீர்க்காமல் விடாது;
உறவினர்களின் நெஞ்சம் நோகும்படி, தேடிக் குவித்த செல்வங்கள்
முயற்சியற்ற ஒருவனின் குலத்தைப் போல் தானாகவே அழிந்துபோகும்,
சூள் உரைத்து ஒன்றை உறுதி செய்த ஒருவன், பின் செயலில் அதனைப் பொய்த்துவிட்டால், அவன்
வாட்போரில் வெற்றிபெற்றாலும் அது அவனைப் பழிதீர்க்காமல் விடாது;
எனவே,
14 செம்மையின் இகந்து ஒரீஇ பொருள் செய்வார்க்கு அ பொருள்
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ 15
அறநெறியைக் கைவிட்டு, அதினின்று அகன்று பொருள் ஈட்டுவார்க்கு, அந்தப் பொருளே
இம்மையிலும், மறுமையிலும் பகையாக விளங்கும் என்பதை அறியாயோ?