தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "சூத்திரன்" என்றால் யார்? யாரை குறிக்கிறது இந்த சொல்?


Guru

Status: Offline
Posts: 1049
Date:
"சூத்திரன்" என்றால் யார்? யாரை குறிக்கிறது இந்த சொல்?
Permalink  
 


"சூத்திரன்" என்றால் யார்? யாரை குறிக்கிறது இந்த சொல்?

இது ஈன சொல்லா? முதலில் இது தமிழ் வார்த்தையா? தெரிந்து கொள்ள வேண்டாமா? அலசுவோம் ....
பிராம்மணஸ்ய முகம் ஆஸீத் ! (பிராம்மணன் கடவுளின் முகம் போன்றவர்கள்)
பாஹு ராஜன்ய க்ருத: ! (நாட்டை காக்கும் வீரன், அதாவது க்ஷத்ரியன் கடவுளின் தோள் போன்றவர்கள்)
ஊரு ததஸ்ய யத் வைஸ்ய: ! (வியாபாரம் செய்யும் வைஷ்யன், கடவுளின் தொடை போன்றவர்கள்)
பத்ப்யாம் சூத்ரோ அஜாயத: ! (விவசாயம் செய்யும், அனைவருக்கும் உழைக்கும் சூத்திரன்
(Sudhra), கடவுளின் கால் போன்றவர்கள்) Purusha Suktam - Rig Vida
பொதுவாக இன்றைய தமிழனுக்கு எது தமிழ்? எது சமஸ்க்ரிதம்? எது ஆங்கிலச் சொல்? என்பது தெரியவில்லை என்பது உண்மை. இந்த அறியாமை தவறல்ல.ஆனால், இந்த அறியாமையை பயன்படுத்திக்கொண்டு, நம் புத்தியை குழப்பி விட ஒரு கூட்டம் 1940ல் இருந்து வருகிறது. இது நமக்கு அவமானம்.
Jail, apple, rose போன்ற ஆங்கிலச் சொல்லை, இன்றைய தமிழன், தமிழ் சொல்லாக நினைக்கிறான்.
அதேபோல, கருணாநிதி, கோபாலஸாமி, ராமசாமி, திராவிடம், சூத்திரன் போன்ற சமஸ்க்ரித சொல்லை, இன்றைய தமிழன், தமிழ் சொல்லாக நினைக்கிறான்.
தமிழனின் இந்த கேளிகூத்தான புலமையை, கடந்த 60 ஆண்டுகளாக தமிழன் என்ற போர்வையில் ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர், போலி தமிழர்கள்.
திராவிடம் என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு, தமிழில் "மூன்று கடல் சூழ்ந்த நிலபரப்பு" என்று பொருள். இந்த சொல்லை கர்வபட்டு சொல்வதால், தமிழனுக்கு மட்டும் என்ன பெருமை வந்துவிட போகிறது?
'திராவிடம்' என்ற சமஸ்கிருத சொல்லை பயன்படுத்தி கொண்டு, சமஸ்கிருத மொழியை எதிர்க்கும் போலி தமிழர்களை என்ன சொல்வது?
'திராவிடம்' சமஸ்கிருத சொல், இது இடத்தை குறிக்கும் சொல் என்பதை அறிந்துள்ள, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் "நான் திராவிடன்" "நான் திராவிடன்" என்று புலம்புவது இல்லை.
அதே போல,
பிராம்மணன் - பகவானின் முகம் போன்றவன்.
க்ஷத்ரியன் -பகவானின் தோள் போன்றவன்.
வைஷ்யன் - பகவானின் தொடை போன்றவன்.
சூத்திரன் - பகவானின் கால் போன்றவன்.
என்ற ஸ்லோகமும் இந்த போலி தமிழ் கூட்டத்தால் தவறாக திரித்து பேசப்படுகிறது.
பகவானின் அங்கங்கள் தான், "நாம் அனைவருமே" என்பதில் என்ன இழிவு இருக்க முடியும்?
பிராம்மணனின் (Spritual Person) தொழில் வேதம் ஓதுவது. அவன் பலம் வாக்கில்
இருப்பதால், பகவானின் அங்கத்தில் முகம் போன்றவன் என்று சொல்கிறோம்.
க்ஷத்ரியன் (Protection force) தொழில் நாட்டை காப்பதிலும், உதவி செய்வதிலும்
இருப்பதால், பகவானின் தோள் போன்றவன் என்று சொல்கிறோம்.
வைஸ்யன் (Business people) தொழில், அமர்ந்தபடி பல வியாபாரங்கள் செய்து, வேலை ஆட்கள் கொண்டு வேலையை முடித்து பொருள் திரட்டுவதால், ஆதலால், பகவானின் தொடை போன்றவர்கள் என்று சொல்கிறோம்.
சூத்திரன் (Employee, Farmer) தொழில், தானே விவசாயமோ, அல்லது பொதுவாக வைஸ்யன்,
பிராம்மணன், க்ஷத்ரியன் என்று அனைவருக்கும் உழைத்து, அதில் அவர்கள் சம்பளமாக கொடுக்கும் பணத்தை கொண்டு தானும் வாழ்ந்து, அவர்களுக்கும் உதவியாக இருப்பது.
ஆதலால், பகவானின் கால் போன்றவர்கள் என்று சொல்கிறோம்.
ஒரு மனித சமுதாயத்தை ஒழுங்காக நடத்த,
1. நாட்டை காக்க, சட்ட ஒழுங்கை காக்க கொஞ்சம் க்ஷத்ரியன் (protection force) தேவை.
2. அனைத்து மக்களும் நியாயம் அநியாயம், நல்லது கெட்டது, ஆன்மீகம், கடவுள் சிந்தனை பெற, கொஞ்சம் ப்ராம்மணர்கள் (spiritual inclined people) தேவை.
3. பொருளாதாரம் வளர, கொஞ்சம் வியாபாரிகள் (businessman) தேவை.
4. வியாபாரியின் நோக்கத்தை புரிந்து கொண்டு, நியாயமாக உழைக்க அதிகமாக சூத்திரர்கள் (Employee) தேவை.
இப்படி மனித சமுதாயம் அமைக்கப்படும் போது, அந்த நாடு "பாதுகாப்புடன், தர்மத்துடன், முன்னேற்றம்" என்ற பாதையில் வீறு நடை போடும்.
ஒரு நாட்டில்,
க்ஷத்ரியன் குறைவாக இருந்தாலும்,
பிராம்மணன் குறைவாக இருந்தாலும்,
வைஷ்யன் குறைவாக இருந்தாலும் கூட,
மனித சமுதாயம் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் சமாளிக்க முடியலாம்.
ஆனால், சூத்திரன் (Employee, Farmer) எண்ணிக்கை குறைந்தாலோ, அல்லது அவர்கள்
வைஸ்யனையோ (Businessman), க்ஷத்ரியனையோ (protection force),
பிராம்மணனையோ (Spiritual) ஆதரிக்க மறுத்தாலோ,
அவனால் மற்ற மூன்று தொழில் செய்பவர்களும் சேர்ந்து கஷ்டப்படுவார்கள்.
பிற நாட்டினர் உள்ளே நுழைந்து பெரும் நாசத்திற்கு வித்திட்டு விடும்.
இப்படி மனித சமுதாயத்துக்கு ஆதாரமாக இருப்பதால், 'சூத்திரன்' கால் போன்றவன் என்று சொல்லப்படுகிறது.
'கால்' இல்லாத முடவன், மற்ற உறுப்புகள் இருந்தும் முடங்கி விடுவானல்லவா?.
"கால்" உள்ளவன் மற்ற உறுப்புகள் ஆசைப்படும் இடத்திற்கு அழைத்து செல்வது போல,
சூத்திரன் (farmer, employee) தன் உழைப்பால், மற்ற தொழில் செய்பவர்கள் செய்ய
ஆசைப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல உதவி செய்கிறான்.
போருக்கு செல்லும் படையை ஒரு வண்டியில் அழைத்து செல்லும் ஒரு சூத்திரன் (employee) எல்லையில் இறக்கி விட உதவி செய்கிறான்.
இப்படி சூத்திரன் செய்யும் உதவிக்கு, க்ஷத்ரியன் (Army) இவனுக்கு ஆபத்து நேராமல் பார்த்து கொள்கிறான்.
"சூத்திரன்" என்ற சொல்லை பற்றி மேலும் அலசுவோம்....
பிராம்மணன் மட்டும் என்ன உயர்வா? நாங்கள் மட்டும் என்ன தாழ்வா?
நாம் அனைவரும் அந்த கடவுளின் பிள்ளைகள் தானே?
ஏன் நாங்கள் மட்டும் தலையாக இருக்க கூடாது?
என்று இந்த போலி தமிழர்கள் கூட்டம், நம் ஹிந்து மதத்தை கேள்வி கேட்பதாக நினைத்து, சூத்திரனுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்து, இந்த கேள்வியை கேட்கின்றனர்.
இதே மடத்தனமான கேள்வியை, சரித்திரத்திலும் சிலர் கேட்டு இருப்பதை நாம் காணலாம்.
கஸ்யபருக்கு பிறந்தவர்கள் அசுரர்கள், தேவர்கள்.
ஒரு அப்பனுக்கு ஒரு நல்ல பிள்ளை, ஒரு திருட்டு பிள்ளை இன்று வரை பிறக்க தான் செய்கிறது.கஸ்யபர் மட்டும் விதி விலக்கா?
ஒரே தந்தை என்றாலும், அசுரர்களும், தேவர்களும் குணத்தால் வேறுபட்டார்கள்.
ஒரு சமயம் பாற்கடலில் அம்ருதம் கிடைக்க வாசுகி என்ற பாம்பை மலையில் சுற்றி கடைந்து அம்ருதம் எடுக்க தயார் ஆனார்கள்.
அசுரர்களுக்கு வால் பகுதியை பிடிக்க சொல்லி, தேவர்கள் பாம்பின் தலை பக்கம் சென்றார்கள்.
ப்ராம்மணன் மட்டும் முகத்தில் வந்தான், சூத்திரன் காலில் வந்தானா? என்று இன்று கிளப்பி விடும் கூட்டம், இதே போன்ற கேள்வியை அன்றே கேட்டனர் என்று படித்து தெரிந்து கொள்ளலாம்.
அசுரர்கள் இப்படி பாம்பின் வாலை பிடித்து இழுக்க வேண்டும் என்றவனுடன், முரண்டு பிடித்தனர்.
"ஏன் நாங்கள் பாம்பின் கால் பக்கம் இருக்க வேண்டும்?
அது என்ன தேவர்கள் மட்டும் தலை பக்கம்?
நாங்கள் என்ன தேவர்களை விட தாழ்ந்தவர்களா?
இருவருமே கஸ்யபருக்கு தானே பிறந்தோம்?
நாங்கள் தலை பக்கம் நின்று தான் கடைவோம்" என்று வேலை நிறுத்தம் செய்தனர்.
முட்டாள் தனமாக இப்படி பேசுவார்கள் என்று எதிர்பார்த்து தான், தேவர்கள் இவர்களை வால் பக்கம் நிற்க சொன்னர்கள். எதிர்பார்த்தது போலவே, அசுரர்கள் பிடிவாதம் செய்ய, பாம்பின் தலை பக்கம் நிற்க சொல்லி, தாங்கள் அனைவரும் வால் பக்கம் சென்றனர்.
முட்டாள் அசுரர்கள், பாம்பை வைத்து மலையை கடைய, ஒவ்வொரு இழுப்புக்கும் அது விஷத்தை கக்கியது. வீம்பு செய்து வாங்கியதால், மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல், அசுரர்கள் நிலை ஆனது.
இது போன்ற காழ்ப்புணர்ச்சி அசுர ஸ்வபாவம் தான், இந்த போலி தமிழர்கள் நம்மிடையே விதைக்கிறார்கள். உண்மையான அர்த்தம் மகத்துவம் வாய்ந்தது.
"சூத்திரம்" என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு, தமிழில் சொல்ல வேண்டுமென்றால், "அடிப்படை விதிமுறை" என்று அர்த்தம் வருகிறது.
ஆங்கிலத்தில் "Formula" என்று சொல்வார்கள்.
FORMULA: e=mc2 என்பதை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சூத்திரம் (formula) என்பார்கள்.
சூத்திரத்தை கொண்டுதான், உலகம் இயங்குகிறது.
e=mc2 என்ற சூத்திரம் தன் பணியை ஒழுங்காக செய்யவில்லையென்றால், உலகம் அழிந்து விடும். திடீரென்று,சக்தி (e) தன் சூத்திரத்தை மாற்றிக்கொண்டு mc4 என்று ஆனால், உலகம் அழிந்து விடும்.
இப்படி அடிப்படையாக இருக்கும் இதையே, சூத்திரம் என்று சொல்கிறோம். Formula என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். இந்த வார்த்தையை கொச்சை படுத்திய கூட்டம், இன்று உள்ள 'போலி தமிழர்கள்'.
இவர்களுக்கு எது தமிழ்? எது ஆங்கிலம்? எது சமஸ்கரிதம்? என்று தெரியாது.
இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி, "நம் அறிவை வளர்த்து கொள்வது" ஒன்றே தான்.
அடிப்படை விதிமுறையாக (formula), "மனித சமுதாயத்தில்" விவசாயம் (farmer) மற்றும் மற்றவர்களுக்காக உழைக்கும் (employee) மனிதர்களை, மனித சமுதாயத்துக்கு "சூத்திரம்" போன்றவர்கள் என்று சொல்கிறோம்.
விவசாயம் செய்யாமல், வேலைக்கு செல்லாமல், "மனித சமுதாயம்" செயல் படவே முடியாது என்பது, கொஞ்சம் அறிவு உள்ளவனுக்கு புரியும்.
90% சதவீத மக்கள், ஒரு வைஸ்யனுக்கோ (businessman), ஒரு ஆன்மீகவாதிக்கோ (spiritual), ஒரு தேசப்பற்று உள்ளவனுக்கோ (protection force), வேலை செய்து, அதற்கு கூலியாக சம்பளம் பெற்று, தன் குடும்பத்தையும் காப்பாற்றி, சமுதாயமும் ஒரு சீராக நடக்க உதவி செய்கின்றனர்.
சிலர் அதற்கும் மேல் போய், அனைவருக்கும் உயிர் வாழ, "விவசாயம்" செய்து உணவு படைக்கின்றனர்.
"வேலைக்கு செல்லும் அனைவரும்", "விவசாயம் செய்யும் அனைவரும்" இந்த மனித சமுதாயத்துக்கு "சூத்திரம்" போன்றவர்கள். இதில் என்ன சந்தேகம் நமக்கு வர போகிறது?
சூத்திரன் என்ற சமஸ்கிருத சொல்லை, இந்த போலி தமிழர்கள் விட்டு விட்டு, "அடிப்படை விதிமுறை" என்று சொல்லட்டுமே?
இந்த போலி தமிழர்களுக்கு அப்படி என்ன சமஸ்கரித சொல்லில் பற்று?
திராவிடம், சூத்திரன், கருணாநிதி என்ற சமஸ்கிருத சொல்லை மாற்றி, அதற்கு ஈடான தமிழ் சொல்லை பயன்படுத்தலாமே ?
இப்படி ஆதாரமாக உள்ள இந்த விவசாயிகள் (farmer), வேலைக்கு போகுபவர்களை (employee), மனித சமுதாயத்தின் சூத்திரன் என்று சொல்வதை, எந்த புத்திசாலி குறையாக சொல்வான்?
கடவுளுக்கே "சூத்ரதாரி" என்று பெயர் உண்டு.
நம்முடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்ற சூத்திரம் அவர் கையில் உள்ளது என்பதால், அவருக்கு சூத்ரதாரி என்றும் பெயர் கூட உண்டு.
"உன் குடுமி என் கையில்" என்று சொல்வதும் உண்டு.
சூத்திரன் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு பதிலாக, "மனித சமுதாயத்தின் குடுமி", என்று கூட சொல்லலாமே? போலி தமிழர்கள்.
இனியாவது இந்த சமஸ்கிருத மோகத்தை விடுவார்களா?
எது தமிழ், எது சமஸ்கிருத சொல் என்று புரிந்து கொள்வார்களா போலி தமிழர்கள்?
கடவுளுக்கே "சூத்ரதாரி" என்று பெயர் உண்டு என்று சொல்லும் போது, சூத்திரன் என்ற சொல் தமிழ் சொல்லா? ஆங்கில சொல்லா? சமஸ்கிருத சொல்லா? என்று கூட புரியாத இந்த போலி தமிழர்கள், ஊரில் உள்ள தமிழர்களை ஏமாற்ற பார்க்கின்றனர்.
இவர்களின் புத்தி மழுங்கிய பேச்சில் இருந்து தப்பிக்க, நம் அறிவை வளர்த்து கொள்வதே சிறந்த வழி.
உண்மை அர்த்தத்தை மற்ற ஹிந்துக்களுக்கு சொல்வதே சிறந்த வழி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard