தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் கடவுள் தெய்வங்கள்


Guru

Status: Offline
Posts: 1049
Date:
திருக்குறளில் கடவுள் தெய்வங்கள்
Permalink  
 


அறக்கடவுள்

என்பிலதனைவெயில்போலக்காயுமே
அன்பிலதனைஅறம்குறள் 77: அன்புடைமை.

மணக்குடவர்உரை:என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

சாலமன்பாப்பையாஉரை:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்

கதங்காத்துக்கற்றடங்கல்ஆற்றுவான்செவ்வி
அறம்பார்க்கும்ஆற்றின்நுழைந்து. குறள் 130: அடக்கமுடைமை

மணக்குடவர்உரை:வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது. 

மறந்தும்பிறன்கேடுசூழற்கசூழின்
அறஞ்சூழம்சூழ்ந்தவன்கேடு. தீவினையச்சம். குறள் 204:

மணக்குடவர் உரை:பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.

சாலமன் பாப்பையா உரை:றந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. குறள் 1018: நாணுடைமை.
மணக்குடவர் உரை:உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.
பரிமேலழகர் உரை: பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடைத்து. ('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின், 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.).
மு. வரதராசன் உரை: ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
மு. கருணாநிதி உரை: வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை: மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.
Translation: Though know'st no shame, while all around asha med must be: Virtue will shrink away ashamed of thee!.
Explanation: Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

உலகியற்றியான்
இரந்தும்உயிர்வாழ்தல்வேண்டின்பரந்து
கெடுகஉலகியற்றியான். இரவச்சம். குறள் 1062:
மணக்குடவர் உரை:துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.
சாலமன் பாப்பையா உரை:பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

இந்திரன்
ஐந்தவித்தான்ஆற்றல்அகல்விசும்புளார் கோமான்
இந்திரனேசாலுங்கரி. குறள் 25: நீத்தார் பெருமை.
மணக்குடவர்உரை:நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.
சாலமன்பாப்பையாஉரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

தாமரையினாள்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். ஆள்வினையுடைமை. குறள் 617:
மணக்குடவர் உரை:வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர். இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.
மு. கருணாநிதி உரை:திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.
சாலமன் பாப்பையா உரை:சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

முகடி
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். சூது. குறள் 936:
மணக்குடவர் உரை: தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார். மறைத்தல்- நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.
சாலமன் பாப்பையா உரை:சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.

செய்யவள் தவ்வை
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். அழுக்காறாமை. குறள் 167:
மணக்குடவர் உரை:அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.
மு. கருணாநிதிஉரை:செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
சாலமன்பாப்பையாஉரை:பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

திரு
இருமனப்பெண்டிரும்கள்ளும்கவறும்
திருநீக்கப்பட்டார்தொடர்பு. வரைவின்மகளிர். குறள் 920:
மணக்குடவர் உரை:கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும் திருமகளால் கடியப்பட்டாரது நட்பு. இது நல்குரவாவார் சார்வரென்றது.
சாலமன் பாப்பையா உரை:உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.

செய்யாள்
அகனமர்ந்துசெய்யாள்உறையும்முகனமர்ந்து
நல்விருந்துஓம்புவான்இல். குறள் 84: விருந்தோம்பல்.
மணக்குடவர்உரை:திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது. சாலமன்பாப்பையாஉரை: இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

நிலமென்னும் நல்லாள்
இலமென்றுஅசைஇஇருப்பாரைக்காணின்
நிலமென்னும்நல்லாள்நகும். குறள் 1040: உழவு.
மணக்குடவர் உரை:பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால் நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும். இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.
மு. கருணாநிதி உரை: வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.
சாலமன் பாப்பையா உரை:நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

நாண்என்னும் நல்லாள்
நாண்என்னும்நல்லாள்புறங்கொடுக்கும்கள்ளென்னும்
பேணாப்பெருங்குற்றத்தார்க்கு. குறள் 924: கள்ளுண்ணாமை.
மணக்குடவர் உரை:நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு. இது நாணம் போமென்றது.
மு. வரதராசன் உரை:நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள்.

அடியளந்தான்
மடியிலாமன்னவன்எய்தும்அடியளந்தான்
தாஅயதெல்லாம்ஒருங்கு. மடியின்மை. குறள் 610:
மணக்குடவர் உரை:மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
சாலமன் பாப்பையா உரை:தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

நஞ்சுண் டமைவர்
பெயக்கண்டும்நஞ்சுண்டமைவர்நயத்தக்க
நாகரிகம்வேண்டுபவர். குறள் 580: கண்ணோட்டம்
மு. வரதராசன் உரை:யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. குறள் 72: அன்புடைமை.
மணக்குடவர் உரை:அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர். அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று

காமன்
பருவரலும்பைதலும்காணான்கொல்காமன்
ஒருவர்கண்நின்றொழுகுவான் . குறள் 1197: . தனிப்படர்மிகுதி
மணக்குடவர் உரை: தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.
மு. கருணாநிதி உரை:காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.
சாலமன் பாப்பையா உரை:ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?

தாமரைக் கண்ணான் உலகு.
தாம்வீழ்வார்மென்றோள்துயிலின்இனிதுகொல்
தாமரைக்கண்ணான்உலகு.புணர்ச்சிமகிழ்தல். குறள் 1103:
மணக்குடவர் உரை:தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.
சாலமன் பாப்பையா உரை: தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

ராகு கேது பாம்புகள் கிரகணம்
கண்டதுமன்னும்ஒருநாள்அலர்மன்னும்
திங்களைப்பாம்புகொண்டற்று. அலரறிவுறுத்தல். குறள் 1146:
மணக்குடவர் உரை:யான் கண்ணுற்றது ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.
மு. கருணாநிதி உரை:காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம்(( எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.
சாலமன் பாப்பையா உரை:நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 பா இந்துவன் திருக்குறள் கூறும் #அகர_முதலோனும்& #ஆதிபகவனும்:

நாம் திருக்குறள் வழி நடக்கிறோமோ இல்லையோ ஆளாளுக்கு திருக்குறளை சொந்தம் கொண்டாடுகிறோம். அவ்வகையில் திருவள்ளுவமாலையில் வள்ளுவனை #திருமாலாகவும், #பிரம்ம_தேவராகவும், #கற்பக விரிட்சமகாவும் புகழ் மாலைகள் சூடி இருந்தாலும்🤒.....,
முத்தமிழ் மூதாட்டியான #ஔவையரே திருக்குறளை திருவாசகத்துடனும், திருமந்திரத்துடனும் ஒப்பிட்டிருந்தாலும் திருவள்ளுவர் ஓர் #சமணர் என்றும், அவர் #கிறிஸ்தவர் என்றும் அவர் தோமாவின் சீடர் என்றும் இல்லை இல்லை அவர் #இஸ்லாமியர் என்றும் கூட ஆளாளுக்கு உரிமை கொண்டாடுகின்றனர்....!
அவ்வகையில் திருக்குறளின் முதல் குறளில் வரும் #அகர முதலோன் யார்? #ஆதிபகவன் யார் என்பதை எனது பார்வையில் எழுதுகிறேன். அதற்கு முன்பு #திவாகர_நிகண்டு, #பிங்கல_நிகண்டின் அடிப்படையில் "பகவன்" என்ற சொல்லாடலுக்கு என்னென்ன பொருள் வருகிறது என்பதையும், இங்கு பெரும்பான்மை வாதங்களின் ஒன்றான திருவள்ளுவர் ஓர் சமணரே என்ற வாதத்திற்கான எனது பார்வையை குறிப்பிடுகிறேன்...!
நிகண்டுகளில் காலத்தால் முந்தைய #திவாகர நிகண்டின் முதல் நூற்பாவில் "அருக தேவனின்" பெயர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட பல்வேறு பெயர்களில் "பகவன்" என்ற பெயரும் இடம் பெறுகிறது. அதேப்போல் இரண்டாவது நூற்பாவில் #சிவனின் பெயர்களை குறிக்க பயன்படுத்தப்பட்ட பல்வேறு பெயர்களில் "பகவன்" என்ற பெயரும் உள்ளது.....!
அதோடு 12ஆவது நூற்பாவில் #புத்தரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பெயர்களில் பகவன் என்ற பெயரும் உள்ளது. அதாவது திவாகர முனிவர் ஓர் சமணர். ஆக சமண முனிவரே "பகவன்" என்ற பெயரை அருக தேவனுக்கு மட்டுமே உரியதாகக் குறிப்பிடவில்லை...!
அடுத்து பிங்கல நிகண்டில் பகவன் என்ற சொல்லாடல் #ஏழு கடவுளரைக் குறிப்பதாக பயன்படுத்தப் பட்டுள்ளது....!
“பட்டா ரகன்மால் பங்கயன் பரமன்
இரவி அருகன் புத்தனும் பகவன்“
இதில் நாம் கவனிக்க வேண்டியது திவாகரம் குறிப்பிடாத, #திருமாலும், #பிரமனும், #சூரியனும் #குருவும் பகவன் என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறார்கள்...!
ஆக பகவன் என்ற சொல்லாடல் சமண முனிவர்களால் எழுதப்பட்ட நிகண்டுகளிலேயே சிவன் திருமால் பிரம்மன் என்று பரவி வருவதால் பகவன் என்ற சொல்லாடல் அருக தேவனுக்கு மட்டுமே உடையது என்ற சமணர்களின் வாதம் இங்கு ஏற்றுக்கொள்ளப்படாது...!
ஆக எனது பார்வையில் திருவள்ளுவர் ஓர் சமணர் என்பது பொருந்தத்தகாத வாதமாகும். அதற்கான சில காரணங்களை குறிப்பிடுகிறேன்🤒🚶🚶
"இருள்சேர் இருவினையும் சேரா
இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”
இந்த குறளானது வினைப்பயனே இல்லை என்பவர்களுக்கும், வினைப்பயனை வகுத்து வழங்க இறைவன் வேண்டாம் என்போருக்கும்(சமணம்) மாறானது....!
குறிப்பிட்டு சொல்லணும்னா இறைவனே நமது செயல்களின் பயனை தொகுத்து வழங்குகிறார் என்ற கருத்தை இப்பாடலில் திருவள்ளுவர் கூறுகிறார். இது சமணத்திற்கு மாறானது...!
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்"
இக்குறளில் திருவள்ளுவர் மிகத்தெளிவாகக் கூறுகின்றார், அதாவது #இறைவனின்_அடியினைச் சேராதவர்களால் பிறவிப் பெருங்கடலை கடக்கவே முடியாது என்று. இதுவும் சமண கோட்பாட்டிற்கு முற்றிலும் மாறானது...!
எத்தனை செல்வத்தைச் சேர்த்தாலும் அதை அனுபவிக்க உனது ஊழ்வினைப்பயனைத் தொகுத்து வழங்க இறைவன் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஊழ்வினை என்பதை திருவள்ளுவர் கூறுவதுபோல் இந்துக்களைத் தவிர வேறு யாரும் ஏற்பதில்லை...!
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”
ஊழ்வினையைவிட வலிமையானது வேறெதுவும் இல்லை. ஊழை விலக்கும் பொருட்டு இன்னொரு வழியைத் தேடினால் அங்கும் ஊழே முன்நிற்கும்
என்பதே இப்பாடலின் பொருள். அதாவது ஒருவன் தான் தேடிய செல்வத்தை அனுபவிக்கவும் இறைவனின் அருள் வேண்டும் என்ற திருவள்ளுவரின் கருத்து புத்தம், சமணம் போன்ற சமயங்களுக்கு மாறுபட்டது....!
அதோடு இங்கு சிலர் ஆதி பகவன் என்பதை ஆதி பகலவன் என்று மாற்றி திருவள்ளுவர் ஆதி பகவன் என்பதாக சூரியனைத் தான் சொல்கிறார் என்கிறார்கள்....!
ஒருவேளை இறைவனாக வள்ளுவர் சூரியனைத்தான் சொல்கிறார் என்பவர்கள் நான் மேலே குறிப்பிட்ட குறள் எண் -10ல் வரும் "பிறவிப் பெருங்கடல்" என்பது என்ன என்பதையும், "இறைவன் அடி சேரா தார்" என்ற வரியின் அடிப்படையில் சூரியனின் அடியினைச் சேர்வதன் மூலம் மட்டுமே பிறவிப் பெருங்கடலை கடக்க முடியும் என்று வள்ளுவர் கூறியிருப்பது எதனைக் குறிக்கும் என்பதனையும் விளக்கி கூறினால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் 🤒🚶🚶🚶
வள்ளுவர் சூரியனைத் தான் கடவுள் என்று கூறி இருந்தார் என்றால் மற்ற குறள்களிலும் அதற்குரிய சான்றுகளோ அல்லது குறிப்புகளோ நிச்சயம் காணப்பட வேண்டும். ஆனால் மற்ற 9 குறள்களில் அதன் அம்சமே இல்லை என்பதுதான் நிதர்சனம். உதாரணமாக,
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
இக்குறளில் திருவள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இங்கே வள்ளுவர் சூரியனைத் தான் கடவுளாக கூறினார் என்று கூறுபவர்கள், வள்ளுவர் கூறும் இரு வினைகள் யாது, அவை எவ்வாறு ஒரு மனிதனை இருளில் சேர்த்து விடுகின்றன என்பதையும் அவ்வினைகள் எவ்வாறு சூரியனின் அடியினை சேர்ந்தால் விலகி விடுகின்றன என்பதையும் இப்பதிவின் பின்னூட்டத்தில் சுட்டுக...!
சரி பதிவுக்கு வருவோம். ரொம்ப தூரம் போய்ட்டோம்😌🚶🚶
குறள் எண்- 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
இக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் #ஆதி,#பகவன் என்பதும், #அகர_முதலோன் என்பதும் சிவனையே குறிக்கும் என்பது எனது பார்வை. இதற்கு சான்றாக முதலில் திருமந்திரத்தை நோக்குவோம்....!

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

#திருமந்திரம்:

"அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகார வுகாரம் இரண்டு மறியில்
அகார வுகாரம் இலிங்கம தாமே"
உலகுடல் உயிர்கட்குத் தாங்கும்நிலைக்களனாக நிற்பவன் சிவன். அவ் அடையாளம் அகரத்தால் குறிக்கப்பெறும். அதனால் அகரமுதலாய் அனைத்துமாய் நிற்கும் என்றருளினர். அவை இயங்குமாறு இயைந்தியக்கும் திருவருளாற்றல் சிவை. அவ் வியக்கத்தை உயிர்ப்பு என அருளினர். இவ் வடையாளம் உகரமாகும். அகர உகரமாகிய இவ்விரண்டுமே 'சத்தியும் சிவமுமாய தன்மையில் வுலகமெல்லாம்' என்னும் செம்பொருட்டுணிவின் மெய்ம்மையாகும். இவற்றை உணரின் அகரவுகரமே சிவலிங்கம் என்க....!
அதாவது இங்கு திருமூலர் அகர முதல்வனாக சிவபெருமானை குறிப்பிடுகிறார் என்பது கவனிக்கப்படவேண்டியதே....!
"தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
#அகர_முதலானை யணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே"
பொருள்:
தகரம் எனப்படும் மணப்பொருளும் மணிகளும் கலந்து விழும் அருவிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாக வளைத்து, அசுரர்களின் நகரங்களாக விளங்கிய முப்புரங்களும் பொடிபடச் செய்து மகிழ்ந்தவனும், எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம் போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான் புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினைமாசுகளினின்று நீங்கப் பெறுவர்.
இங்கும் சிவபெருமான் அகரமுதலோன் என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு,
"பிணக்கோலம் ஆதுஆம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றா அடியேன்உய்யப் போவதுஓர் சூழல் சொல்லே" என்று சிவபெருமானை அப்பர் பெருமான் பாடி உள்ளார்‌....!
"அகர வுயிர்போ லறிவாகி வெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து"
அதாவது அகரமாகியவுயிர் எழுத்துக்களெல்லாவற்றினும் பொருந்தி வேறற நின்றாற் போலத் தனக்கோர் உவமனில்லாத் தலைவன், உலகுயிர் முழுவதும் ஒழிவற நிரம்பி ஞான வுருவாய் அழிவின்றி நிலைபெறும் என்க என்று அகரத்தை உவமையாக்குகிறார்...!
#சிவஞான_சித்தியார்:
"ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி
நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னை யென்னின்
அன்றவை பதிதான் ஒன்றென் றறையும்அக் கரங்கள் தோறும்
சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே"
அதாவது வேதத்துள் ஆன்மா ஏகனேயென்பதற்குப் பரமான்மா ஒருவனே யென்பது தாற்பரியமாகலான் அதுபற்றி முரணுத லின்மையான், மேலைச் செய்யுளின் வேறாயென்றதூஉம், ஒன்றாகிய அகரம் பலவெழுத்துக்களின் விரவி நிற்றல் காணப்படுதலின், ஒருவனாகிய பரமான்மாப் பலவுயிர்களின் விரவி நிற்றல் யாங்ஙனமென்னும் ஆசங்கைக்கு இடமின்மையான், உடனுமாயென்றதூஉம் அமைவுடையன.
உம்மை சிறப்பின் கண் வந்தது என்று அகரம்போல நின்றவன் என்று சிவபெருமானை நினைவுகூர்கிறார்...!
குறிப்பாக டாக்டர் மா.இராசமாணிக்கனார் M.A.,L.T.,M.O.L.,Ph.D அவர்கள் எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலின் அடிப்படையில் #திருநாவுக்கரசரின் காலம் கி.பி. 575 – 656 என்றும், #திருஞானசம்பந்தர் காலம் 638 – 654 என்றும் எடுத்துக்கொண்டு நான் மேலே குறிப்பிட்ட திவாகரம் மற்றும் பிங்கல நிகண்டுகளுக்கு முன்பே சிவபெருமானை திருவள்ளுவர் அழைத்ததுபோல் #அகரமுதலோன் என்று அழைத்துள்ளனர் என்பது தெளிவு....!
#சித்தாந்த_சிகாமணி:
"வகைபெற விரண்டாமென்பர் மாதவ ரவற்று னாதி பகவனென் பெயர்ப்புனைந்த பரமசிவ"
என்ற வரிகளில் நேரடியாக ஆதிபகவன் என்பது சிவபெருமானை குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது....!
அதோடு "ஆதி" மற்றும் "பகவன்" என்ற சொல்லாடல் திருமந்திரத்தில் #ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளன....!
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
இக்குறளில் வரும், #ஆதிபகவன், எனும் சொல், திருமந்திரத்தில் ‘ஆதி’ என்றும், ‘பகவன்’ என்றும் தனித்தனியாகவும், ‘#ஆதி பகவான், #ஆதிப்பிரான், #வேதப் பகவனார்’ எனச் சிறு மாற்றங்களோடும் காணப்படுகின்றன.
“ஆதிப்பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்
ஓதி உணர வல்லோம் என்பர், உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வு அறியாரே.” (திருமந்திரம்)
“அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடையார் நெஞ்சத் தங்கு நின்றானே”
(திருமந்திரம்)
“ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்தார்த் திருந்தான்”
“படமாடக்கோயிற் பகவற் கொள் நீயில் ”
“பகவற்கே தாகிலும் பண்பில ராகில்”
இங்கு மிக முக்கியமாக 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் அவரின் #நெஞ்சுவிடு_தூதில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்...!
"நிலைத் தமிழின் தெய்வப்புலமைத் திருவள்ளுவருரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல் ஐவர்க்கு மாதுவே செய்தங் கவர் வழியைத் தப்பாமல் பாவமெனும்"
அதாவது இங்கு உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் திருவள்ளுவரின் அறத்தை சுட்டுகையில் திருவள்ளுவரையே ஏந்தி பாடி இருப்பது அவர் ஓர் சைவ சித்தாந்தவாதியாகவே பார்க்கப்பட்டிருக்கிறார் என்பதாகவே பொருள் கொள்ள வேண்டும்...!
அதோடு 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருக்குறளை ஏந்திப் பாடி இருப்பது அவர் ஓர் சைவ சித்தாந்தி என்பதை உணர்த்துவதாகவே உள்ளது....!
"மற்றேல் ஒருபற் றிலனம் பெருமாள் வண்டார் குழலான் மங்கைபங் கினனே அற்றார் பிறவிக் கடல் நீந்தி யேறி அடியேனுய் யப்போவ தோர்குழல் சொல்லே"
இங்கு சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவள்ளுவரின் 10 ஆவது குறளை சுட்டிக்காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது...!
ஆக இதிலிருந்து திருவள்ளுவர் கூறும் அகர முதலோன் என்பதும், ஆதிபகவன் என்பதும் சிவபெருமானையும் குறிக்கும் என்பதை தெள்ளத்தெளிவாக அறியலாம். இங்கு வள்ளுவன் ஆதி பகவன் முதற்றே உலகு என்பதன் மூலம் ஆதிபகவனாகிய சிவனே உலகக்காரணன் என்று சுட்டுகிறார். அதாவது உலகத்தின் ஆதியான முழுமுதற் கடவுள் பற்றி சொல்கிறார்...!
இதை சங்க இலக்கியங்களில் ஒன்றான நற்றிணையில் இந்த உலகைப் படைத்தவன் என்னைப் போலத் துன்புறக் கடவது. என்று காதலியைப் பெறுவதில் உள்ள துன்பத்தை உள்ளத்தில் கொண்டு காதலன் கடவுளை இவ்வாறு ஏசுகிறான்....!
"ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்"
இன்றும் கூட இந்நிகழ்வை நாமும் செய்வோம் அதாவது நாம் நினைத்த ஒரா காரியம் கைகூடவில்லை எனில் நாம் இறைவனை பழிக்கும் நிகழ்வு சங்க காலத்திலேயே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....!
எமக்கு ஈத்தனையே!
பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
இதுபோல் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக எண்ணி அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் ஒரு பாடல் பாடி உள்ளார்...!
புறநானூறு:
"பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே"
நெடுநாள் வாழக்கூடிய நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்தபோது அதை தான் உண்ணாமல் ஔவையாருக்கு கொடுத்தபோது ஔவையார் அதியமானை நோக்கி, நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க! என்று சிவபெருமானை உவமையாக்கி வாழ்த்துகிறார்....!
ஆக இங்கே திருவள்ளுவர் சிவனை முழுமுதற் கடவுளாக பாவித்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை ஏனெனால் திருக்குறளுக்கு முன்பே இங்கு சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ஏந்தி பாடும் வழக்கம் இருந்தது என்பதை நற்றிணை , புறநானூறு போன்ற இலக்கியங்கள் மூலம் அறியலாம்....!
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard