தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள்-ஜாதி-வேதம்


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருக்குறள்-ஜாதி-வேதம்
Permalink  
 


திருக்குறள்-ஜாதி-வேதம்
வள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குறள்கள் மூலம் வலியுறுத்துகிறார். அதோடு நற்குடியிலும் அரிதாக குடி ஒழுக்கத்துக்கு கேடாக நடப்பவரும் பிறப்பது இயல்பேன்பதையும் சுட்டுகிறார்.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
சாலமன் பாப்பையா  ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.
கலைஞர்  குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
மு.வரதராசன் ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
சாலமன் பாப்பையா  நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
கலைஞர் பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.
மு.வரதராசன் உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
சாலமன் பாப்பையா   தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
கலைஞர்  சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.
மு.வரதராசன்  சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
சாலமன் பாப்பையா குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர் மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.
மு.வரதராசன்  மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்
சாலமன் பாப்பையா மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.
கலைஞர்  ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.
மு.வரதராசன்  மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
சாலமன் பாப்பையா அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.
கலைஞர் ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.
மு.வரதராசன் ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நேக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
சாலமன் பாப்பையா நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசம் சொல் காட்டும்.
கலைஞர்  விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மு.வரதராசன்  இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
சாலமன் பாப்பையா   மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.
கலைஞர்  ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.
மு.வரதராசன்   மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
சாலமன் பாப்பையா   நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
கலைஞர்  மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.
மு.வரதராசன் மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்க்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
சாலமன் பாப்பையா  நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.
கலைஞர்  என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மு.வரதராசன் ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
சாலமன் பாப்பையா  ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்ததைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
கலைஞர்    நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.
மு.வரதராசன்  நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
சாலமன் பாப்பையா  கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர்   பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.
மு.வரதராசன்  பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

இதைப்போன்ற ஏராளமான குறள்களைக் காட்டலாம். மேலே சொன்னவை உதாரணங்களுக்கு மட்டும். இதன்மூலம் சொல்லவருவது, பண்டைய பாரதம் ஜாதிகளை சமூக அமைப்பாக அங்கீகரித்தது என்பதையும், அந்த ஜாதிகள் அனைவருக்கும் ஒழுக்கத்தையும், நன்மையையும் ஏற்படுத்தியது என்பதையுமே. மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்லொழுக்கங்களையும் எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு உரைத்து தமிழ் வேதம் என்ற பெயர் பெற்ற வள்ளுவர் ஜாதிகள், குடி, குலம் போன்றவற்றை அங்கீகரித்துள்ளார் என்றால் அதில் நன்மை இல்லாமலா, என்பது சிந்திக்க வேண்டியதாகும். ஜாதி அமைப்பால் பாரதம் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக, இயற்கை பாதுகாப்பு ரீதியாக ஏராளமான நன்மைகளை அடைந்துள்ளது. அன்நன்மைகளை ஒழித்து பாரதத்தை சுரண்டிக் கொழுக்க நினைக்கும் அந்நிய மதமாற்ற மற்றும் சூழ்ச்சிக்கார சக்திகள் கடந்த நூற்றாண்டு முழுக்கவே பல்வேறு துரோகிகளை வளர்த்து விட்டு அவர்கள் மூலம் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து சிந்தனா ரீதியாக தேசத்தை தவறான பாதைக்கு திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு விசிமுங்க, வள்ளுவரு வேதத்த எதுத்தவரு... அவரு சமண மதத்துக்காரரு னு நெறையா பேரு புளுகுரானுங்க.. திருக்குறளு ல இருக்கற வேத-வேதாந்த செய்திகள இந்த லிங்க் ல இருக்கற கட்டுரைகள் ல படிச்சிக்கோங்க மாப்ளைகளா...

இறுதியாக, ஜாதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் திருவள்ளுரின் குறள்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருக்குறள் காட்டும் ஷத்திரியர்களுக்கு மட்டுமான அறம்

தமிழர் பொது வாழ்வின் தொழில் அடிப்படையில் கல்வியாளர்(பிராமணர்-அந்தணர்- பார்ப்பானர்), அரசுப் பணி (ஷத்திரியர்), உற்பத்தியாளர் (உற்பத்தி, உழவு, வியாபாரி) உதவியாளர் (மூவர்க்கும் உதவியாளர்) எனப் பிரித்தனர் 

                          AVvXsEgvKUUZANZXSFNyrlK3Yuc-8YzWTCZnyEBY

பிரித்து   கெடுத்தல்  அனைவரையும்

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. குறள் 633: அமைச்சு.

பகைவர்க்குத் துணையானவரைப்  பிரித்தல், தம்மிடம் உள்ளவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல்,  முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல்; எனும் செயல்களில் வல்லவரே அமைச்சர்.  

அனைவரையும் ஒற்றிதல்  

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.  குறள் 582: 
 ஒற்றாடல்.

பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும்  நிகழ்கின்றவை எல்லாவற்றையும் , எக்காலத்திலும் ஒற்றரைக்கொண்டு  விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசுக்குரிய கடமையாகும்.

பகைவரை அடியோடு அழிக்க வேண்டும்

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.  குறள் 879: பகைத்திறந்தெரிதல். 
முள்மரத்தை சிறிய கன்றாக இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும். பகைவர் வலியராவதன்முன்னே களைய வேண்டும்

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். குறள் 880: பகைத்திறந்தெரிதல். 
நம் பகைவரின் தலைமையைக் கெடுக்க முடியாதவர்  சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது. -நிச்சயம் அழிக்கப்பவர்.
 
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.  குறள் 674: வினைசெயல்வகை.

செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் ,  அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
AVvXsEh-S_C4yHizZZurXvifWIfWISVezyozd39c

 தினமும் போரை நோக்கி மரணம் தேடணும் 

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. குறள் 776: படைச்செருக்கு. 
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களை எண்ணி எடுத்து அந்த நாட்களில் போரின் போது தன்  முகத்திலும் மார்பிலும்  விழுப்புண்படாத நாட்களையெல்லாம்  பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.
 
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.  குறள் 780: படைச்செருக்கு. 
வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு காத்த அரசர் க நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் வீரனின் சாவு, பிறரிடம் யாசித்தாவது கேட்டுப் பெறத்தக்க பெருமை உடையதாகும்

தண்டனை தருதல் - களை பிடுங்கல் போலே 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. குறள் 561: வெருவந்தசெய்யாமை.
செய்த குற்றத்தைத் தக்கவாறு நடுநிலை தவறாமல் ஆராய்ந்து, மீண்டும் அக்குற்றம்  செய்யாதபடி; குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.
 
 
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.         குறள் 549: செங்கோன்மை.
குடிமக்களை அயலவர் அழிக்காமல் பாதுகாத்துத் துணை நிற்பதும், அவர்களில் குற்றம் செய்தவர்கள் யாராயினும் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.
 
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.  குறள் 550: செங்கோன்மை.
கொலை முதலிய கொடுமைகள் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் பயிரைக் காப்பாற்றக் களையைக் பிடுங்கி அழித்து பயிரைக் காப்பதற்குச் சமம்

தூது. செல்பவர் உயிரையும் தரத் தயாரகணும் 

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.        குறள் 690: தூது.
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே  அழிவே தருவதாக இருந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.அரசன் தகுதி பார்க்கணும் அனைவரும் சமம் இல்லை
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.  குறள் 528: சுற்றந்தழால். 
 அரசன் எல்லாரையும்  ஒன்று போல சமம் என எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப   பயன்படுத்திக் கொண்டால்,    அந்த அரசை  சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்

அரசர் தூதரை உயர்ந்த குடியில் பிறந்தவராய் அழகானவராகத் தேர்ந்து எடுக்கணும்

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.           குறள் 681: தூது.

அன்பான குணமும், உயர்ந்த குடிப்பிறப்பும், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடைmai enRa muunRum udaiyavaree தூது உரைப்பவனுடைய தகுதிகள்

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று.  குறள் 682: தூது

அன்பு உடையவராய் நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு,  பிறர் ஏற்கும்படி ஆராய்ந்து கூறும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

தூதர் தேர்வில்  தொகாப்பியம் கூறும் "ஓதலும், தூதும் உயர்ந்தோர் மேலேன " என்பதை வள்ளுவர் உறுதி செய்கிறார். உயர்ந்தோர் என்பது அரச/அந்தணர் குலம் என்பது உரை, அகநானூறில் 337 வயிறு ஒட்டிய ஒல்லியான பார்ப்பன தூதரை கயவர் கொலை செய்தது நடைமுறையை உறுதி செய்யும்

 

அரசர்தேர்வுசெய்யும்போதுஅனைவரும்சமம்இல்லை. தகுதியேஅவசியம் பொதுநோக்கான்வேந்தன்வரிசையாநோக்கின்

அதுநோக்கிவாழ்வார்பலர்.  குறள் 528: சுற்றந்தழால்
 அரசன் எல்லாரையும்  ஒன்று போல சமம் என எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப   பயன்படுத்திக் கொண்டால்,    அந்த அரசை  சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்

 

அந்தணர்சமூகம்பற்றிவள்ளுவம்

திருவள்ளுவர் இதே போல கல்வி இறைப்பணி என்பதனை மூன்று குறட்பாக்களில் அந்தணர், அறு தொழிலோர் மற்றும் பார்ப்பான் (பிறப்பொழுக்கம்) என்று பயன் படுத்தி உள்ளார்.

உலகின் இறுதிப் பொருள்(அந்தம்) இறைவன் -வேதாந்தத்தை ராய்பவர் என்பதால் அந்தணர். அறுதொழிலோர் என்பது "ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல், ஈதர் ஏற்றல் அறு தொழிலாகுமே" என அந்தணரைக் குறிப்பது, இதை ஏற்றுள்ளார்; பார்ப்பானர்  எனில் தாய் வயிற்றில் ஒருமுறை தாய் இருபிறப்பாளர் (பார்ப்பு எனில் முட்டை) வயிற்றில் ஒருமுறை- கல்வியில் சேறுமுன்பு உபநயனம் என்ற சடங்கினால் ஒருமுறை; அரசன் போரிற்கு செல்ல உகந்த காலம் எனப் பலவிதங்களில் பின்னால் நடப்பதை முன்பே பார்த்தவர்(கணித்து கூறல்- வேதங்களில் ஆறு அங்கங்களில் ஜோதிடம் மற்றும் வானியல் பஞ்சாங்கம் மற்றும் ஆயுர்வேதமும் அடக்கம், இதனால் இந்த வருடம் என்ன பயிர் செய்யலாம்?, தொலை தூரபிராயாணம் செய்யலாமா?) என்பதாலும், முன்னோக்கிப் பார்ப்பவர்- வழிகாட்டி எனும் பொருளும் தரும்

 

வைசியப் பிரிவினருக்கான அறம்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி

  பிறவும் தம போல் செயின் - குறள் 120

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்

  சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 45:9

ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை

  ஊக்கார் அறிவுடையார் - குறள் 47:3

நான்காவது வர்ணம் உதவியாளர், மேலுள்ள மூவரில் யாருக்கு உதவிக்கு உள்ளாரோ அவரைப் பின்பற்ற வேண்டும்

வள்ளுவமும் வர்ணாசிரமமும்

சமூகப் பிரிவுகள் வர்ணம் என்றும் தனி மனித வாழ்க்கை பருவம் ஆசிரம் என்பது மெய்யியல் மரபு.

வள்ளுவத்தில் அடக்கமுடைமை அதிகாரத்தில் அனைவரும் " நிலையில் திரியாது அடங்கி" என்பது குறள் யாத்த அடுத்த நூற்றாண்டு எழுந்த மணக்குடவர் உரை - அவரவர் வர்ண நிலைக்கு ஏற்ப என தமிழர் மரபில் பொருள் தந்துள்ளார்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.  குறள் 124: அடக்கமுடைமை.

மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே அடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வர்ணாச்சிரம தர்மம்.

வள்ளுவமும் ஆசிரம நிலைகளும்

https://valluvamvazi.blogspot.com/search?q=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D



-- Edited by ankarai krishnan on Saturday 29th of October 2022 08:17:19 PM

__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா 
இனனும் அறிந்தியாக்க நட்பு.                   (அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:793)
குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறையில்லாத கூட்டாளி ஆகியவற்றை அறிந்து நட்புச் செய்க என்பது இக்குறட்கருத்து.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. (அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:794)
நற்குடியில் பிறந்து தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை எது கொடுத்தும் நட்புக் கொள்க என்பது இக்குறட்கருத்து.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு
நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மை உடைத்தாவது போல, மக்கட்கு அறிவு தாம் சேர்ந்த இனத்தின் தன்மையதாய் வேறுபடும் என்பது இக்குறட்கருத்து.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். (அதிகாரம்:குடிமை குறள் எண்:956)
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார். 
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னான் எனப்படுஞ் சொல் (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:453)
மக்களுக்கு உணர்ச்சி மனத்தினாலே உண்டாகும். இவன் இன்னான் என்று உலகத்தினரால் கூறப்படும் சொல் அவன் இணைத்துக் கொண்ட கூட்டம் காரணமாக உண்டாகும். 
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு. (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:454)
ஒருவர்க்கு அறிவு மனத்திலே உள்ளது போலத் தோற்றுவித்தாலும் அது அவன் பழகும் கூட்டத்திற்கேற்பவே உண்டாகும்.  ஒருவர்க்கு அறிவு மனத்திலே உள்ளது போலத் தோற்றுவித்தாலும் அது அவன் பழகும் கூட்டத்திற்கேற்பவே உண்டாகும்.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். (அதிகாரம்:குடிமை குறள் எண்:959)
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
இனந்தூய்மை தூவா வரும் (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:455)
ஒருவர்க்கு அறிவு மனத்திலே உள்ளது போலத் தோற்றுவித்தாலும் அது அவன் பழகும் கூட்டத்திற்கேற்பவே உண்டாகும்.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.  (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:457)
நல்ல மனம் நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லவர் கூட்டு எல்லாப் புகழையும் கொடுக்கும்  
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.  (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:460)  
நல்லினச் சேர்க்கையினும் சிறந்த துணையில்லை; சிற்றினம் சேர்தலினும் கேடு யாதும் இல்லை.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். (அதிகாரம்:குடிமை குறள் எண்:954)
 பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் நற்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. 
 ஜாதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் திருவள்ளுரின் குறள்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் (அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:462)
 ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை. 

நாட்டார் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும் -குறள் 826

நண்பரைப் போல பகைவர் நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும், அவை தீயனவென்று விரைவில் அறிந்து கொள்ளலாம்

 



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை
பரிமேலழகர் உரை:மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409:
கலைஞர் மு.கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.
மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.
(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
Translation:Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.
Explanation:The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையார்-கண்ணே உள - குறள் 23:3

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

ஸ்ரீ மஹாபாரதம்-வர்ணங்கள் பற்றி மஹரிஷி ப்ருகு கூறுவது:

ஸ்ரீ மஹாபாரதத்தின்,ஶாந்திபர்வத்தின் 188ஆவது அத்யாயத்தில் மஹரிஷி ப்ருகு வர்ணங்கள் பற்றி மஹரிஷி பரத்வாஜருக்குக் கூறுகிறார். நால்வர்ணத்தவர்களுக்கும் தர்மகார்யங்களைச் செய்யவும்,யஜ்ஞங்களைச் செய்யவும் உரிமை உண்டு என்று அவர் கூறுவது கவனிக்கத்தக்கது.

ப்ருகு கூறினார்,

வர்ணங்களுக்கு இடையில் உண்மையில் எந்தவிதமான பேதங்களும் இல்லை. இந்த முழு உலகமும் முதலில் ப்ராஹ்மணர்களையே கொண்டிருந்தது.ப்ரஹ்மாவால் சமமானவர்களாகப் படைக்கப்பட்டவர்களான மனிதர்கள் தங்களுடைய செயல்களின் விளைவாக பல்வேறு வர்ணத்தவர்களாக ஆனார்கள். ஆசைகள் கொள்வதிலும்,இன்பங்களை அனுபவிப்பதிலும் விருப்பமுள்ளவர்களாக,கடுமையும்,கோபமும் கொண்டவர்களாக,தைரியம் உடையவர்களாக,பக்தி மற்றும் வழிபாடு முதலியவற்றில் சிரத்தை இல்லாதவர்களாக,உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவர்களாக இருந்த ப்ராஹ்மணர்கள் க்ஷத்ரியர்கள் ஆயினர். தங்களுக்கு உரிய கடமைகளைச் செய்யாமல்,நல்ல குணங்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு ஆட்படுதல் முதலானவற்றை உடையவர்களாக,ஆநிரை மேய்த்தல்,விவசாயம் முதலான தொழில்களைச் செய்பவர்களாக இருந்த ப்ராஹ்மணர்கள் வைஶ்யர்கள் ஆயினர்.பொய்மை,மற்றவர்களுக்குத் தீங்கு செய்தல் ஆகியவற்றை விரும்பியவர்களாக,காமத்தை உடையவர்களாக,வாழ்வதற்காக எந்தவிதமான செயல்களையும் செய்பவர்களாக,நல்ல நடத்தையிலிருந்து நழுவியவர்களாக,தாமஸ குணத்தை உடையவர்களாக இருந்த ப்ராஹ்மணர்கள் ஶூத்ரர்கள் ஆயினர்.இவ்வாறு தொழில்களால் பிரிவுபட்ட ப்ராஹ்மணர்கள்,தங்கள் நிலையிலிருந்து நழுவி,ஏனைய மூன்று வர்ணத்தவர்களாக ஆயினர். எனவே நான்கு வர்ணத்தவர்களுக்கும் அனைத்து தர்ம கார்யங்களையும்,யஜ்ஞங்களையும் செய்வதற்கான உரிமைகள் உண்டு.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard