தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் போற்றும் முன்னோர் மரபு முந்து நூல்


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருக்குறள் போற்றும் முன்னோர் மரபு முந்து நூல்
Permalink  
 


மருத்துவம் சம்பந்தமானவை
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941

அரசியல் நூல்களை 636, 683, 743, 581, 727
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள் 743

பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 727

ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் - குறள் 581
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை - குறள் 636

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 683

ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் - குறள் 581

பொதுவாக நூல்களை 533, 401, 726, 783, 373
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் - குறள் 373
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு - குறள் 783

வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள் 726

அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றி கோட்டி கொளல் - குறள் 401

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரொடு ஏனையவர் - குறள் 410

மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியுள் திகழ்வது ஒன்று உண்டு - குறள் 128:3

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. குறள் 725: அவையஞ்சாமை
மணக்குடவர் உரை: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்

வேத தர்ம சாஸ்திரங்களைக் குறிப்பவை 543,560, 21, 28, 134, 183, 322,37
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் - குறள் 560 கொடுங்கோன்மை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை.
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். குறள் 28:
மணக்குடவர் உரை:நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் - குறள் 543

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். குறள் 134: ஒழுக்கமுடைமை
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. குறள் 37: அறன்வலியுறுத்தல்.
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322 கொல்லாமை
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். குறள் 183: புறங்கூறாமை.
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்..

வேத தர்ம சாஸ்திரங்களைக் குறிப்பவை 543,560, 21, 28, 134, 183, 322,37
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் - குறள் 543
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். குறள் 134: ஒழுக்கமுடைமை
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. குறள் 37: அறன்வலியுறுத்தல்.
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். குறள் 183: புறங்கூறாமை.
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322 கொல்லாமை
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். குறள் 28:
மணக்குடவர் உரை:நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை.
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. குறள் 865: பகைமாட்சி.
சாலமன் பாப்பையா உரை:நீதி நூல்கள் சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. குறள் 870: பகைமாட்சி.
மணக்குடவர் உரை:கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.
பரிமேலழகர் உரை:கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது. (சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.).

கலித்தொகை 99
மருதன் இளநாகனார், மருதம், மன்னனிடம் அவன் மனைவியின் தோழி சொன்னது
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
கள்ளை நீக்கின தேவர்க்கும், அதனை நீக்காத அசுரர்க்கும், அவ்விரண்டையும் கைக்கொண்டு அறத்தொழிலாக இன்புறுத்தும் அந்தணராகிய வியாழன், வெள்ளி ஆகிய இருவரும் வெவ்வேறு வகையாகச் செய்த அரசியலைக் கூறும் நூல் நெறியிலிருந்து பிறழாது,
like the two Brahmins who do not stray from righteousness protecting both groups,those who do not drink liquor and those who drink it!



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருக்குறளில் அமைச்சியலில் வள்ளுவர் கூறியது
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. குறள் 725: அவை அஞ்சாமை.
மணக்குடவர் உரை: அவை அஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்.நூல் கற்றலாவது
(1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும்
(2) வேதமும் ஆகமமும் கற்றலும்
(3) உழவும் வாணிகமும் கற்றலும்
(4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.


நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. குறள் 683: தூது.
மணக்குடவர் உரை: எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். குறள் 441: பெரியாரைத் துணைக்கோடல்.
அற நூல்கள் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். புறங்கூறாமை. குறள் 183:
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

மு. வரதராசன் உரை:ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய வேண்டும்.
மு. கருணாநிதி உரை:நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை.
ஒழுக்கத்தில் நிலைத்து உறுதியான துறவிகளின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

திருவள்ளுவர் பாயிரம் எனும் முன்னுரை அமைப்பில், கடவுள் வணக்கத்தின் பயன் என கடவுள் வாழ்த்து பின்னர், இயற்கையை இறைவன் வெளிப்பாடாக காணும் மரபில் வான் சிறப்பு எனவும், இந்திய ஞான தத்துவ மரபில் அளவையியலில் மிக முக்கியமான அளவைகள் - காணல், கருதல் மற்றும் உரை அளவை.
வான் சிறப்பு கருதல் அளவை முறை, மெய்யியல் மரபில் ஆன்றோர்/மெய்ஞான நூல் கருத்து அளவையே உச்சம் என நீத்தார் பெருமையை வள்ளுவர் வைத்து உள்ளார்.

வள்ளுவர் நீதி நூல்களை அறத்தாறு, ஆற்றின் என பயன்படுத்தி உள்ளார்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. குறள் 37: அறன்வலியுறுத்தல்.
நீதி நூல்கள் காட்டும் அறவழியின் பயன் என்ன என்பதை பல்லக்கில் அமர்ந்து செல்பவரையும், அதை சுமந்து செல்பவரை காணின் கண்டு கொள்ளலாம்; வேறு விளக்கம் தேவை இல்லை

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன். குறள் 46: இல்வாழ்க்கை.
நீதி நூல்கள் காட்டும் அறவழியில் குடும்ப வாழ்க்கை நடதுதுபவர் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயனில்லை.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. குறள் 48: இல்வாழ்க்கை.
நீதி நூல்கள் காட்டும் அறவழியில் நடந்து, மற்றவர்களையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் வலியுடைத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள்
1. ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் - குறள் 560 கொடுங்கோன்மை
2. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322 கொல்லாமை
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
மணக்குடவர் உரை: பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.
3. விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரொடு ஏனையவர் - குறள் 410 கல்லாமை
அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
4. நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் - குறள் 373 ஊழ்
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
5. நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3 தூது
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
6. பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 727 அவையஞ்சாமை
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
7. உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள் 743 அரண்
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
8. நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு - குறள் 783 நட்பு
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
9. நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 683 தூது
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.
10. ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் குறள் 581 ஒற்றாடல்
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.
மணக்குடவர் உரை: ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக.
அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.
11.மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை - குறள் 636 அமைச்சு
இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.
மணக்குடவர் உரை: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.
12. வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள் 726 அவையஞ்சாமை
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?.
13. அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றி கோட்டி கொளல் குறள் எண்:401 கல்லாமை
அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.
14.மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941 மருந்து
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
15.பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எபால் நூலோர்க்கும் துணிவு - குறள் 533 பொச்சாவாமை
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

வள்ளுவத்தில் அறநூல்கள் கூறும் அறம் என்பதைக் காட்ட "என்ப" "என்பர்" எனவும் காட்டியுள்ளவற்றில் சில காண்போம்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல்.
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்தை உண்டாக்கும் விதைதான் ஆசை என (அறநூல்கள் காட்டுகிறது) பெரியோர் கூறுவர்.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. குறள் 73: அன்புடைமை
பெறுவ‌தற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் முந்தைய பிற‌வி வாழ்க்கையின் பயன் என (அறநூல்கள் காட்டுகிறது) பெரியோர் கூறுவர்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல்.
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் மீண்டும் மீண்டும் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று அறநூல் வழி பெரியோர் கூறுவர்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். குறள் 617: ஆள்வினையுடைமை.
சோம்பலாக உள்ள ஒருவரிடம் கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் (லட்சுமி) வாழ்கின்றாள் என்பர் அறநூல் வழி பெரியோர்

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. குறள் 918: வரைவின்மகளிர்.
வஞ்சக எண்ணங்கொண்ட பொதுமகள் ஒருத்தியிடம் மயங்குவதை ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடையரல்லாதார்க்கு ஏற்பட்ட மோகினி மயக்கம் என்பர் அறநூல் வழி பெரியோர்

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. குறள் 953: குடிமை
நல்ல உயர்ந்த குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கு உயரிய நல்ல குணங்கள் காண இயலும் (அறநூல்கள் காட்டுகிறது) என்பர்.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு குறள் 288: கள்ளாமை
மணக்குடவர் உரை:நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும். இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது.
பரிமேலழகர் உரை: அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
மு. கருணாநிதி உரை:நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.
சாலமன் பாப்பையா உரை:உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
தன்னைப் பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற (என அறநூல்கள் காட்டும்) செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல், வள்ளுவர் தான் முந்தைய மெய்யியல் ஞான மரபைப் பின்பற்றுவதைக் காட்ட முந்தைய நீதி நூல்களை - நேரடியாக நூல் என பல குறட்பாக்களில் காட்டி உள்ளார். இதைத் தவிர மேலும் பல சொற்களாலும் கூறி உள்ளார்.
திருவள்ளுவர் மேலும் பல‌ வழிகளில் முன்னோர் மரபின்படி என்பதைக் காட்டி உள்ளார். அவற்றில் சில‌ "என்ப" எனப் பயன்படுத்தல், உலகின் மேல் ஏற்றிச் சொல்லுதல், மற்றும் அறவழி சான்றோர் மேல், காட்சியவர், கோள் எனக் கூறுதல் எனப் பலமுறைகளில் பல்வேறு குறட்பாக்களில் கூற் உள்ளார்.
திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல், திருவள்ளுவர் கல்வி கற்பதன் பயனே இறைவன் திருவடிகளைத் தொழுவதற்கே என்றும், இறைவனைத் தன் தலையால் வணங்காதவர் ஐம்பொறிகளால் (கண், காது, மூக்கு, வாய், தோல்) பயன் இல்லை என்கிறார். ஆதிபகவன் முதற்றே உலகு என்கையில் அது பரம்பொருள் அல்லது பிரம்மத்திலிருந்து இவ்வுலகம் எனும் அடிப்படையை வள்ளவர் ஏற்றவர்.இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் என்கையில் வள்ளுவர் போற்றும் முந்தைய மரபில் நூல்களை நேர்மையாக கற்றல் அவசியம்.
கடந்த 70 ஆண்டுகளாக வள்ளுவம் பற்றி, அது போற்றும் மெய்யியல் மரபைப் பற்றி பல தவறான பரப்பல்கள் ஆரவாரத்தோடு நடக்கிறது
திருக்குறளை ஆய்வு செய்பவர், பொருள் செய்பவர் இந்த அடிப்படைகளின் அடிப்படையில் செய்வதே நேர்மையான ஆய்வு.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். குறள் 28: நீத்தார் பெருமை.
செம்மையான மொழி முனிவர்கள் பெருமையை அவர்கள் இவ்வுலகில் சொன்ன எழுதாக் கற்பு எனும் மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை.
சீரிய ஒழுக்கத்தில் நின்று துறந்த தவ முனிவர்களது பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் துணிவாக சொல்கின்றன.

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322 கொல்லாமை
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எபால் நூலோர்க்கும் துணிவு - குறள் 533 பொச்சாவாமை
மறதியால் உடையவர்களுக்கு புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிபாகும்.

நாம் நூல் எனக் குறிப்பிட்டே குறள் கூறியதைப் பார்த்தோம், தற்போது
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். பிறனில் விழையாமை. குறள் 141:
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அற வழி நூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இருப்பது இல்லை.

மேலுள்ள குறளில் அறம் என நீதி நூல்களையும் பொருள் என பொருள் நூல்களையும் கூறி உள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவர் தான் சுட்டும் அறத்தை வலியுறுத்த சான்றோர் ஏற்ப‌வை என இங்கே அற்நூல்களைக் கற்று அதன்படி நடுநிலையோடு வாழ்பவரையே சான்றோர் என வள்ளுவர் குறட்பாக்களில் காட்டி உள்ளார்.
ஈன்றாள் பசி காண்பான்-ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை - குறள் 656 வினைத்திட்பம்.
தன்னைப் பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், அறவழி சான்றோர் பழிக்கும்படியான‌ இழிவான‌ செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. குறள் 923: கள்ளுண்ணாமை.
மது சாராயம் குடித்து மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது அறவழிச் சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. குறள் 118:நடுவு நிலைமை.
முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பொருளின் நிறையை காட்டும் தராசு போல, அற்வழியில் ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்..

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். குறள் 1078:கயமை.
குறைகளைச் சொன்னவுடனே அறவழிச் சான்றோர் இரங்கி உதவி செய்வர். ஆனால் கீழ்க் குடியில் பிறந்தவர்களிடம் கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், பிழிந்தால்தான் கொடுப்பர்.

சான்றோர் என்பதற்கு விளக்கம் தரும் வள்ளுவர்
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 441 பெரியாரைத் துணைக்கோடல்.
அற நூல்கள் காட்டும் வழியை உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

நாம் இங்கே வள்ளுவர் அறம் அறிந்து என்பதை நீதி(நூல் காட்டும் வழி) எனப் பொருள் கொள்ள வள்ளுவரே வழி காட்டுகிறார்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். குறள் 183:புறங்கூறாமை.
ஒருவர் இல்லதா போது அவரைப் பற்றிப் பொய்யாக‌ புறம்பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற(நீதி) நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். குறள் 141: பிறனில் விழையாமை.
அடுத்தவர் மனைவி மீது விருப்பம் வைக்கும் திய வழி உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவர் சான்றோர் என அறநூல் வழி நின்றவர்களைக் காட்டினார் எனில், அறநூல் காட்டும் வழியின் பெருமைக் (தரிசனம் பெற்றவர்) காட்சியவர் எனவும் பயன்படுத்தி உள்ளார்.
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். குறள் 174: வெஃகாமை.
ஐம்புலன்களையும் வென்ற அறநூல்கள் காட்டும் குற்றமில்லாத அறவழி அற்ந்த‌வர், தான் வறுமையில் உள்ள போதும் பிறர் பொருளை விரும்பார்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். குறள் 199:பயனில சொல்லாமை.
மயக்கத்திலிருந்து தெளிந்த அழுக்கு இல்லாத் அறிவை உடையவர், மறந்தும்கூடப் பயன் இல்லாத சொற்களை சொல்லமாட்டார்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். குறள் 218: ஒப்புரவறிதல்.
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் மற்றவர்க்கு உதவ தயங்க‌ மாட்டார்.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். குறள் 654: வினைத்தூய்மை.
தடுமாற்றம் இல்லாது அறநூல்கள் காட்டும் அறவழியை தெளிவாக‌ அறிந்தவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். குறள் 699: மன்னரைச் சேர்ந்தொழுதல்.
அறநூல்கள் கூறும் தெளிந்த அறிவுடையவர்கள் ஆட்சிக்கு நெருக்கமானவர் என எண்ணி, அரசு விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. குறள் 352: மெய்யுணர்தல்.
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற வகையில் அறநூல்கள் வழியிலான‌ மெய்யுணர்வை அடைந்தவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி நிலையான(வீடுபேறு) இன்பம் தரும்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். குறள் 258: புலான்மறுத்தல்.
குற்றத்திலிருந்து நீங்கியபடியாக அறநூல் காட்டும் வழியை உணர்ந்த‌வர், மிருக உயிர் தலையை வெட்டிக் கொன்ற‌திலிருந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். குறள் 311: இன்னாசெய்யாமை.
சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் அறநூல் காட்டும் வழியிலான‌ குற்றமற்றவரின் கொள்கையாம்.

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். குறள் 312: இன்னாசெய்யாமை.
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே அறநூல் காட்டும் வழியிலான‌ குற்றமற்றவரின் கொள்கையாகும்.

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். குறள் 646: சொல்வன்மை
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படி கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர் சொல்லும் போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறநூல் காட்டும் வழியிலான‌ குற்றமற்றவரின் கொள்கையாகும்.

ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள். குறள் 662: வினைத்திட்பம்.
ஒரு செயலைச் செய்யும்போது இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. குறள் 725: அவையஞ்சாமை.
மணக்குடவர் உரை: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 441 பெரியாரைத் துணைக்கோடல்.
அற நூல்கள் காட்டும் வழியை உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. குறள் 635: அமைச்சு.
அற நூல்கள் காட்டும் வழியை உணர்ந்தவராகவும், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். குறள் 141: பிறனில் விழையாமை.
அடுத்தவர் மனைவி மீது விருப்பம் வைக்கும் திய வழி உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். குறள் 899: புல்லறிவாண்மை.
அற நூல்கள் காட்டும் உயர்ந்த கொள்கையுடைய பெரியார் சீறினால், நாட்டை ஆளும் அரசனும் இடைநடுவே முரிந்து அரசு இழந்து கெடுவான்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. குறள் 37: அறன்வலியுறுத்தல்.
நற்செயல்(புண்ணியம்) செய்வதால் வரும் பயன் இது நீதி நூல்களில் தேட வேண்டாம்; பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன். குறள் 46: இல்வாழ்க்கை.
இல்வாழ்க்கையாகிய நிலையில் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அற நூல்கள் கூறும் வழியில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போவதனால் பயன் இல்லை.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. குறள் 48:இல்வாழ்க்கை
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அற நூல்கள் கூறும் வழியில் தானும் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல்.
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன் நிலையான உயிர் மீது பாவவினைக்கு அஞ்சுபவனாக இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

அரசன் நீதி நூல்கள் காட்டும் வ்ழியில் என்பதை "முறை" என்ற சொல்லால் கூறி உள்ளார்.
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. குறள் 541: செங்கோன்மை.
மக்களில் சிலர் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நீதி நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். குறள் 91: இனியவைகூறல்.
அறநூல் காட்டும் வழி அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. குறள் 865: பகைமாட்சி.
நீதி நூல்கள் சொல்லும் வழியை நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். குறள் 914: வரைவின்மகளிர்.
அறநூல்கள் கூறும் அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. குறள் 179: வெஃகாமை.
நீதி நூல்கள் காட்டும் அறவழி அறிந்து பிறர் பொருளை கைப்பற்ற விரும்பாத அறிவுடையாரைத் லட்சுமி தேவி தானே அவரிடம் போய் இருப்பாள்.

 செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். குறள் 91: இனியவைகூறல்.

ஒழுக்க முடையார்வாய்ச் சொல். குறள் 415: கேள்வி.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

உலகின் மேல் ஏற்றி சொல்வது

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் - குறள் 280:கூடாவொழுக்கம்.
உலகத்தின் (அறநூல் வழி வாழும்) உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது எனும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் துறவிக்கு மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் அவசியம் இல்லை.


கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. குறள் 117: நடுவு நிலைமை. 
அறநூல்கள் காட்டும் நீதியான வழியில் வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உலகத்தார் (உயர்ந்தோர் ) எண்ணவேமாட்டார்.

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. குறள் 809: பழைமை
நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம்(உயர்ந்தோர்) விரும்பிப் போற்றும்.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. குறள் 670: வினைத்திட்பம்.
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு. குறள் 470: தெரிந்துசெயல்வகை.
தன் நிலைக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் உலக உயர்ந்த மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட'

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். குறள் 140: ஒழுக்கமுடைமை.
மணக்குடவர் உரை:அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. குறள் 425: அறிவுடைமை
மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.
மு. கருணாநிதி உரை:உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. குறள் 426: அறிவுடைமை
மணக்குடவர் உரை: யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் - குறள் 637:அமைச்சு.
செயலாற்றல் பற்றிய நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்ய வேண்டும்



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

வள்ளுவா உலகத்தார்‌ எனறு கூறுவது உயர்ந்‌தோர்களையே குறிப்பதாகும்‌.
உயர்ந்தோர்‌. கிளவி வழக்கொடு புணர்தலின்‌.
வழக்கு. வழிப்படுதல்‌ செய்யுட்குக்‌ கடனே. (தொல்‌, பொருள்‌, பொருளி, 21)
வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான. (தொல்‌. பொருள்‌; மரபு 94)
இத்‌ தொல்காப்பியச்‌ சூத்திரங்கள்‌ உயர்ந்தோர்‌ கூற்றே கொள்ளத் தக்கது என்று அறிவுறுத்துகின்றன. இப்‌ பழமையான கருத்தினை விளக்குவது போல,
உலகம்‌ என்பது உயர்ந்தோர்‌ மாட்டே. (திவா. மக்கட்பெயர்‌) -

என்னும்‌ திவாகர சூத்திரம்‌ அமைந்துள்ளது. மேலும்‌, ' உலகம் என்னும்‌ சொல்லிற்கு இத்திவாகர நிகண்டு தரும்‌ பொருளும்‌ நாம் இங்குக்‌ கருதத்‌ தகும்‌. அறிவுடையோர்‌ பெயர்களுள்‌ ஒன்றாக உலகம்‌ என்பதனையும்‌ இந்நிகண்டு குறிப்பிடுகிறது.

சான்றோர்‌ மிக்கோர் ந‌ல்லவர்‌ மேலவர்‌
ஆய்ந்தோர்‌ உயர்ந்தோர்‌ ஆரியர்‌ உலகு என:
வாய்ந்த ஆன்றோர் அறிவுடையோரே.. (திவா. மக்கட்‌ பெயர்‌)



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் - குறள் 10:1
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் - குறள் 16:9
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் - குறள் 42:5

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. குறள் 288: கள்ளாமை
மணக்குடவர் உரை:நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும். இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது.
பரிமேலழகர் உரை:அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
மு. கருணாநிதி உரை:நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.
சாலமன் பாப்பையா உரை:உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.
Translation:As virtue dwells in heart that 'measured wisdom' gains; Deceit in hearts of fraudful men established reigns.
Explanation: Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். குறள் 1047: நல்குரவு
மணக்குடவர் உரை:-----------
பரிமேலழகர் உரை:அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.).
மு. வரதராசன் உரை:அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலனைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
மு. கருணாநிதி உரை:வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.
சாலமன் பாப்பையா உரை:நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
Translation:From indigence devoid of virtue's grace,The mother e'en that bare, estranged, will turn her face.
Explanation:He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர். குறள் 1009: நன்றியில்செல்வம்.
மணக்குடவர் உரை:பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி, அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி அறத்தையுஞ் செய்யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர்.
பரிமேலழகர் உரை:அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று- வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர். (பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.).
மு. வரதராசன் உரை:பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்த பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.
மு. கருணாநிதி உரை:அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.
சாலமன் பாப்பையா உரை:பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.
Translation:Who love abandon, self-afflict, and virtue's way forsake To heap up glittering wealth, their hoards shall others take.
Explanation:Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. குறள் 179: வெஃகாமை.
மணக்குடவர் உரை:அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
மு. கருணாநிதி உரை:பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
சாலமன் பாப்பையா உரை:பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.
Translation:Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.
Explanation:Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். குறள் 441: பெரியாரைத் துணைக்கோடல்.
மணக்குடவர் உரை:அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.
பரிமேலழகர் உரை:அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறன்அறிந்து தேர்ந்து கொளல். அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க. (அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.).
மு. வரதராசன் உரை:அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
மு. கருணாநிதி உரை:அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.
Translation:As friends the men who virtue know, and riper wisdom share,Their worth weighed well, the king should choose with care.
Explanation:Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

"ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே” என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது என்பதே இதன் பொருளாகும்.
நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் வைக்கும் முறையைப் பற்றி பேசுவது பாயிராமாகும். பாயிரத்திற்குரிய ஏழு பெயர்கள்:

முகவுரை-நூலுக்கு முன் சொல்லப்படுவது.
பதிகம்-ஐந்து பொதுவாகவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருட்களையும் தொகுத்து சொல்வது.
அணிந்துரை
புனைந்துரை - நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரிக்கும் சொல்வது.
நூன்முகம்-நூலுக்கு முகம் போல முற்பட்டிருப்பது.
புறவுரை-நூலில் சொல்லியப் பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது.
தந்துரை- நூலில் சொல்லியும் பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே தந்து சொல்வது.
சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு. நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் பாயிரம் வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்ய வேண்டும். நூலைச் சொல்லும் ஆசிரியர், மாணாக்கர் ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம் மரபியல் இறுதியில் இவை உள்ளன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard