தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியமும் குறளும்


Guru

Status: Offline
Posts: 1049
Date:
சங்க இலக்கியமும் குறளும்
Permalink  
 


அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் - கலி 141/3
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து - புறம் 35/14
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய - நற் 42/2
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை - பரி 13/56
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/18
அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட - கலி 39/21
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் - புறம் 9/6

அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7

# 93 ஔவையார்
திண் பிணி முரசம் இழுமென முழங்க
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
நோய்_பால் விளிந்த யாக்கை தழீஇ 5
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த
நீள் கழல் மறவர் செல்வு_உழி செல்க என 10
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய
அரும் சமம் ததைய நூறி நீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே
# 93 ஔவையார்
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட முரசம் ‘திடும்' என முழங்கப்
புறப்பட்டுப்போய் போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது? உன்னை எதிர்த்து வந்தவர்கள்
உனது முன்னணிப்படையினையும் தாங்கமாட்டாதவராய், சிதறி
ஓடத்தொடங்கிய பெருமை இல்லாத மன்னர்கள்,
நோயினால் இறக்கும் உடம்பைப் பெற்று
தமது ஆசையை மறந்து, அவர்கள் வாளால் மடியாத குற்றம் அவர்களை விட்டு நீங்குமாறு
அறத்தை விரும்பிய கொள்கைகளையுடைய நான்கு வேதங்களையுடைய அந்தணர்
நன்கு வளர்ந்த தருப்பைப்புல்லைப் பரப்பி, அதில் அவரைக் கிடத்தி,
தனது வீரமே பற்றுக்கோடாக நல்ல போரில் மடிந்த
சிறந்த வீரக்கழலை அணிந்த மறவர் செல்லும் உலகத்திற்குச் செல்க என்று
வாளால் அறுக்கப்பட்டு அடக்கம்செய்யப்படுவதிலிருந்து தப்பித்தனர்,
வரியையுடைய வண்டுகள் ஒலிக்கும் வாய்க்குள் வந்து புகுகின்ற மதத்தினையுடைய
தலைமை பொருந்திய யானை போர்க்களத்தில் மடிய
தாங்குவதற்கு அரிய போரில் சிதறி ஓடும்படி வெட்டிக்கொன்று நீ
பெருந்தகையே! விழுப்புண் பட்டு நின்றதால் - (போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது?)


அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8
64 பாட்டு 64
வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்து
பொலம் பூண் வேந்தர் பலர் தில் அம்ம
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு 5
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என 10
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி
காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் 15
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால்
பசி உடை ஒக்கலை ஒரீஇய
இசை மேம் தோன்றல் நின் பாசறையானே 20
வெற்றியுண்டாக முழங்கும் முரசினையும், குறி தப்பாமல் வாய்க்கின்ற வாளினால் பெறும் அரசாண்மையையும்
பொன்னாற் செய்த பூண்களையும் உடைய வேந்தர் பலர் இருக்கின்றனர்;
அறநூல்களை ஓதியதால் தெளிவான நாவினையுடைய, உயர்ந்த
புகழ் நிறைந்த வேள்விகள் செய்து முடித்த கேள்வியறிவையுடைய
அந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்க்க ஏற்றுக்கொள்வதால், நீர் ஒழுகி ஏற்பட்ட
மிகுந்த சேற்றினில் கால்பதித்த, மணல் நிறைந்த முற்றத்தில்,
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
அரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது, விரைந்து
வேற்படையைக் கொன்று கொணரப்பட்ட, கொய்யப்பட்ட பிடரியினைக் கொண்ட குதிரைகளையும்,
அசைகின்ற தேர்களையும், அவற்றுக்குரிய அணிகளை அணிந்து கொடுங்கள் என்று கூறும்
குறைவுபடாத கொள்கையை உடையவனாதலின், அவ்விடத்தில் -
கரிய பெரிய ஆகாயத்தில் பல விண்மீன்களின் ஒளி குன்றும்படி,
ஞாயிறு உதிப்பதைப்போல், பகைவரின்
மிகுந்த பகையைச் சிதைத்த உன் வலிய கால்களை வாழ்த்திக்
- காண்பதற்கு வந்திருக்கிறேன் - காலில் கழலையும், தோளில் தொடியையும் அணிந்திருக்கும் அண்ணலே!
கரிய நிறம் உண்டாகின்ற மலர்களையுடைய கழியில் மலர்ந்த நெய்தல் பூவின்
இதழின் வனப்பைக் கொண்ட தோற்றத்தோடு, உயர்ந்த
மழையைக் காட்டிலும் பெரிதான பயனைப் பொழிகிறாய், அதனால்
பசித்திருக்கும் சுற்றத்தாரை அப் பசி நீங்கும்படி செய்ய
புகழ் மேம்பட்ட தோன்றலே! உன் பாசறையினில் -



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8

# 24 பாட்டு 24
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ 5
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை 10
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ
குலை இழிபு அறியா சாபத்து வயவர்
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை
இடாஅ ஏணி இயல் அறை குருசில்
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் 15
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் 20
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றி
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப 25
கலிழும் கருவியொடு கை உற வணங்கி
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே 30
நீண்ட விசும்பில் ஒளிறுகின்ற மின்னல் பரந்தாற் போலப்
புலித்தோலால் செய்த உறையிலிருந்து உருவப்பட்ட புலால் நாறும் வாளை
உன் ஏவலுக்கு உட்பட்ட மறவர் வலக்கையில் உயர்த்திப் பிடித்து,
கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!
மறையோதல், வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்
ஈதல், ஏற்றுக்கொள்ளுதல் என்று ஆறினையும் செய்து ஒழுகும்
அறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
உலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று
நாடு முழுவதும் விளங்கும் நீ நாடிப்பெறாத நல்ல புகழைக் கொண்ட -
மேன்மையான இயல்புள்ள மொழியினையுடைய திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளுக்குக் கணவனே!
நாணைக் கழற்றி அறியாத வில்லைக்கொண்ட வீரர்கள்,
அம்பினைக் கீழே போடமுடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் அசைகின்ற இருக்கைகளைக் கொண்ட
அளவிடமுடியாத எல்லையைக் கொண்ட இயல்பினையுடைய பாசறையையுடைய குருசிலே!
நீர், நிலம், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐந்தனையும்
அளந்து அவற்றின் எல்லையை அறிந்தாலும், உனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றை அளக்க முடியாது; உன்
செல்வம் பெருகிய வளத்தை இனிதே கண்டறிந்தோம்;
உண்பாரும், தின்பாருமாய் கணக்கில் அடங்காதவாறு உண்டும் -
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்
இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,
வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும்
கண்டு வியக்கும் - குறையாத சோறு -
ஒளிரும் கதிர்கள் பரந்து வானகம் ஒளிபெற்றுவிளங்க,
சிறிதே வடக்குப்பக்கம் சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்மீன்
பயன் தரும் பிற கோள்களோடு நல்லநாள் காட்டி நிற்க,
ஒளிரும் இடிமின்னலோடு நாற்புறமும் கவிந்து
உலகத்து உயிர்களைக் காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும்
கீழ்க்காற்றால் கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள்
கார்காலம் எதிர்ப்படுகின்ற தன் பருவத்தை மறந்துபோனாலும் -
நீங்காத புதுமையையுடையது, வாழ்க! உன் வளம்!



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8

# 24 பாட்டு 24
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ 5
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை 10
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ
குலை இழிபு அறியா சாபத்து வயவர்
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை
இடாஅ ஏணி இயல் அறை குருசில்
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் 15
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் 20
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றி
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப 25
கலிழும் கருவியொடு கை உற வணங்கி
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே 30
நீண்ட விசும்பில் ஒளிறுகின்ற மின்னல் பரந்தாற் போலப்
புலித்தோலால் செய்த உறையிலிருந்து உருவப்பட்ட புலால் நாறும் வாளை
உன் ஏவலுக்கு உட்பட்ட மறவர் வலக்கையில் உயர்த்திப் பிடித்து,
கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!
மறையோதல், வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்
ஈதல், ஏற்றுக்கொள்ளுதல் என்று ஆறினையும் செய்து ஒழுகும்
அறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
உலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று
நாடு முழுவதும் விளங்கும் நீ நாடிப்பெறாத நல்ல புகழைக் கொண்ட -
மேன்மையான இயல்புள்ள மொழியினையுடைய திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளுக்குக் கணவனே!
நாணைக் கழற்றி அறியாத வில்லைக்கொண்ட வீரர்கள்,
அம்பினைக் கீழே போடமுடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் அசைகின்ற இருக்கைகளைக் கொண்ட
அளவிடமுடியாத எல்லையைக் கொண்ட இயல்பினையுடைய பாசறையையுடைய குருசிலே!
நீர், நிலம், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐந்தனையும்
அளந்து அவற்றின் எல்லையை அறிந்தாலும், உனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றை அளக்க முடியாது; உன்
செல்வம் பெருகிய வளத்தை இனிதே கண்டறிந்தோம்;
உண்பாரும், தின்பாருமாய் கணக்கில் அடங்காதவாறு உண்டும் -
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்
இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,
வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும்
கண்டு வியக்கும் - குறையாத சோறு -
ஒளிரும் கதிர்கள் பரந்து வானகம் ஒளிபெற்றுவிளங்க,
சிறிதே வடக்குப்பக்கம் சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்மீன்
பயன் தரும் பிற கோள்களோடு நல்லநாள் காட்டி நிற்க,
ஒளிரும் இடிமின்னலோடு நாற்புறமும் கவிந்து
உலகத்து உயிர்களைக் காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும்
கீழ்க்காற்றால் கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள்
கார்காலம் எதிர்ப்படுகின்ற தன் பருவத்தை மறந்துபோனாலும் -
நீங்காத புதுமையையுடையது, வாழ்க! உன் வளம்!



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/18
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி
திரு நய_தக்க வயல்
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி 20
அறத்தின் திரியா பதி
ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை
மண்ணுவ மணி பொன் மலைய கடல்
பண்ணியம் மாசு அறு பயம் தரு காருக
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் 25
விளைவதை வினை எவன் மென்_புல வன்_புல
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை
திரிந்துகொண்டிருப்போரும், குரவை பாடி நாற்றுநடுவோரும் எழுப்பும் ஒலியும் ஆகிய இவை ஒன்றாகச் சேர்ந்தொலிக்க
திருமகளும் விரும்பி வீற்றிருக்கும் வயல்கள்;
வேறோர் பக்கம், அறநெறியும், வேதங்களும் சேர்ந்த தவ ஒழுக்கத்தில் முதிர்வெய்தி,
மிகச் சிறந்த புகழ் நிலைத்து நிற்க, உயர்வான கேள்வித்

திறத்தால் சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிகுந்து வாழ்தலால்
அறவொழுக்கத்தில் பிறழாத நகரம்;
அந்த நகரத்தில், ஒருபக்கம், உண்ணக்குடியவை, பூசிக்கொள்பவை, அணிந்துகொள்பவை, உடுத்திக்கொள்பவை
மஞ்சனமாடுதற்குரியவை, மணி, பொன், மலையில் கிடைப்பவை, கடலில்
கிடைக்கும் பொருள்கள், குற்றமற்ற வகையில் பயன்தரக்கூடிய நெசவுப்பொருள்கள் ஆகியவற்றை வணிகம் செய்யும்
அறவுணர்வுடைய வணிகர்கள் முறையாக அமைந்த தெருக்கள்; ஒருபக்கம்
விளையும் பொருளை விளைத்துத் தரும் தொழிலையுடைய, நன்செய், புன்செய் ஆகிய நிலங்களில்
தொழில்செய்வோர், வேளாளர் ஆகியோர் வாழும் காவலையுடைய தெருக்கள்; வேறு பக்கங்களில்
அவ்வாறே; இவ்வாறு அனைவரும் வாழ்வதால் நல்லனவாக நன்றாகப் பொருந்துகின்ற இன்பம் பலவும்
இயல்பாகவே பொருந்தியிருப்பன:

அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1

# 387
அறம் புரி அரு மறை நவின்ற நாவில்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளை
இன் துணை இனிது பாராட்ட 5
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே
# 387
அறத்தைச் சொல்லும் அரிய மறைகளைப் பலமுறை ஓதிப்பயின்ற நாவினையும்,
அந்த வேத முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் உடைய அந்தணர்களே! உங்களைத் தொழுகிறேன் என்று
ஒளிரும் தோள்வளைகளை அணிந்த உன் மகள் பற்றிக் கேட்கும் பேதையாகிய பெண்ணே!
கண்டோம், வரும் வழியிடையே அவளை,
தனது இனிய துணையானவன் இனிமையுடன் பாராட்ட,
குன்றுகள் உயர்ந்துநிற்கும், வெயிலில் ஒளிவிடும் மலைகளைக் கடந்து சென்றாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

  மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி - பரி 3/2

3 திருமால்
மாஅயோயே மாஅயோயே
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மாஅயோயே
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்
ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் 5
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும்
தா_மா_இருவரும் தருமனும் மடங்கலும்
மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்

மாயோய் நின்-வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும்
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை
ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் 15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடி சேவலோய் நின்
சேவடி தொழாரும் உளரோ அவற்றுள்
திருமாலே! திருமாலே!
மீண்டும் பிறப்பதை ஒழிக்கின்ற மாசற்ற சிவந்த திருவடிகளையும்,
நீல மணி போன்ற திருமேனியையும் உடைய திருமாலே!
நெருப்பு, காற்று, வானம், நிலம், நீர் ஆகிய ஐந்தும்
ஞாயிறும், திங்களும், வேள்வி முதல்வனும், ஏனைய கோள்களான புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐவரும்,
திதியின் சிறுவர்களாகிய அசுரர்களும், விதியின் மக்களாகிய சூரியன் பன்னிருவரும்,
மாசற்ற வசுக்கள் எட்டுப்பேரும், பதினொரு கபிலர் எனப்படும் உருத்திரர்களும்,
அசுவினி, தேவர் ஆகிய இருவரும், இயமனும், கூற்றுவனும்,
மூன்று ஏழேழு உலகங்களாகிய இருபத்தியொரு உலகங்களும், அவ் உலகத்து உயிர்களும்,

மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,
அழிவற்ற வேதங்கள் சொன்னபடி விரிவாக,
வேதங்களாகிய ஓடையில் மலர்ந்த
தாமரைப் பூவினில் பிறந்தவனாகிய பிரமனும், அவனுடைய தந்தையும்,
நீயே என்று கூறுகின்றன அந்தணரின் வேதங்கள்.
அழகு விளங்கும் பூண்களைக் கொண்ட தேவரிடத்திலிருந்து கவர்ந்துகொள்ளப்பட்டு வந்த அமிழ்தத்தால்
தன்னைப் பெற்ற தாயான விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனை ஊர்தியாகக் கொண்டிருக்கிறாய்!
தன்னைப் பெற்ற தாயான விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனின்
சேவலை மிக ஓங்கி உயர்ந்த கொடியில் கொண்டுள்ளோய்! உன்
சிவந்த அடிகளைத் தொழாதவரும் இருக்கின்றாரோ? அந்தச் சேவடிக்குள்



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை 170

தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் 175
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை 180
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து 185
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று


காற்று எழுந்ததைப் போன்ற செலவினையுடையராய், காற்றிடத்தே 170
நெருப்பு எழுந்ததைப் போன்ற வலிமையினையுடையராய், நெருப்புப் பிறக்க
உருமேறு இடித்ததைப் போன்ற குரலினை உடையராய், இடும்பையாயுள்ள
தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,
வானத்தே சுழற்சியினையுடையராய், வந்து ஒருசேரக் காண -
குற்றமற்ற அறக்கற்பினையுடைய மடந்தையுடன், சில நாள் 175
திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் - அவ்வூரேயல்லாமல்,
ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,
(பெற்றோர்)இருவர் குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த,
இருபத்துநான்கின் இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை

(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும், 180
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி,
தலைமேல் கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து, 185
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,
திருவேரகம் என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் - அதுவேயன்றி


நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே 20
அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளி பூ நயந்தோயே
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை
எழீஇ பாடும் பாட்டு அமர்ந்தோயே
பிறந்த ஞான்றே நின்னை உட்கி 25
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே
அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னை

துன்னி துன்னி வழிபடுவதன் பயம் 30
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே
நறிய பொருள்களால் எழுப்பப்பட்ட நறுமணப் புகையை மிகவும் விரும்புகின்றவனே!
ஆறு முகங்களும், பன்னிரு கைகளும் உடையவனாய், மணத்தால் மற்ற மலர்களை வெற்றிகொண்ட
நறிய மலரான வள்ளியம்மை என்ற மலரினை விரும்பியவனே!
தம்மைச் சேர்ந்த கணவர் தம்மைவிட்டு நீங்காமல் இருக்க, உன்னைப் பெண்கள்
இசையெழுப்பிப் பாடும் பாட்டை விரும்புபவனே!
நீ பிறந்த அந்த நாளிலேயே உன்னைக் கண்டு அச்சங்கொண்டு
தேவர்களெல்லாம் அஞ்சிய பெருமையை உடையவனே!
இருபிறப்பும், இருபெயரும் கொண்டு அருளுடைய நெஞ்சத்தினராய்
உயர்ந்த புகழைக்கொண்ட அந்தணர்களின் அறவாழ்வில் பொருந்தியிருப்பவனே!
அப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டவனாதலால். உன்னை விரும்பி நாம் உன்னை

அடுத்தடுத்து வழிபடுவதன் பயனாக,
மேலும் மேலும் அந்த வழிபாடுகள் இருப்பதாக,
தொன்மையான முதிர்ந்த மரபினையுடைய உன் புகழினும் பலவாக -



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்/பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் - பரி 19/88,89

நின யானை சென்னி நிறம் குங்குமத்தால் 85
புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா
பொன் பவழ பூ காம்பின் பொன் குடை ஏற்றி
மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்
பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர்
உனது யானையின் நெற்றியின் நிறத்தைக் குங்குமத்தால்
கோலம் செய்து, மலருடன் நீரையும் ஊட்டி, காதுகளில் ஒப்பனை செய்வதற்குக் கவரிகளைச் சார்த்தி,
பொலிவுடைய பவளத்தால் ஆன காம்பையுடைய அழகிய பொன் குடையை ஏற்றி,
மகிழ்வுடைய நெஞ்சத்தால் அன்பர்கள் வந்து செய்கின்ற பூசையில்,
பலவகைப்பட்ட நறுமணங்களும் பொருந்திய பின்னலையுடைய கருங்கூந்தலையுடைய மகளிரும்,

# 377 உலோச்சனார்
பனி பழுநிய பல் யாமத்து
பாறு தலை மயிர் நனைய
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின்
இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி
அவி உணவினோர் புறம்காப்ப 5
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
அதன் கொண்டு வரல் ஏத்தி
கரவு இல்லா கவி வண் கையான்
வாழ்க என பெயர் பெற்றோர்
377 உலோச்சனார்
பனி மிகுந்த பல இரவுகளில்,
பரந்து கலைந்து தோன்றும் என் தலைமயிர் பனியால் நனைய,
இனிது உறங்கும் செல்வம் மிகுந்த மாளிகையின் எல்லையில்,
என் வறுமைத்துன்பத்தைப் போக்கக் கருதி என் தடாரிப்பறையை இசைத்துக்கொண்டு சென்று,
'வேள்வியில் அளிக்கப்படும் உணவை உண்ணும் தேவர்கள் புறத்தே நின்று பாதுகாக்க,
அறத்தை நெஞ்சில் உடைய வேந்தன் நெடுநாள் வாழ்வானாக!' என்று வாழ்த்த
அதைப் பார்த்து, வாழ்த்தி வந்தவர்களை வேந்தன் வரவேற்க,
'இரவலர்க்கு ஓளிவு மறைவின்றிக் கொடுக்கக் கவிந்த வளமுள்ள கையையுடையனாய்
நெடிது வாழ்க' என்று புலவர்களால் வாழ்த்தப்பட்ட பலருள்ளும்
பிற வேந்தர்க்கு, இவ்வேந்தன் உவமம் ஆவானே அன்றி
இவனுக்குப் பிற வேந்தர்கள் உவமம் இல்லை என்று சான்றோர் பலர் பாராட்ட,
அவர்கள் பாராட்டியதை நினைத்து மதிமயங்கி
அங்கே நின்ற என்னைக் கண்டு,
‘ஆதரவு அளிப்போரைத் தேடித் தொலைவில் உள்ள நாடுகளுக்குச் செல்லும் கிணைப் பொருநனே,
நீ என்னால் காக்கப்படுவாய்' என்று கூறி,



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும் - பரி 2/62
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே 50
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திரு மணி
கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல்
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த
நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும் 55
சாயல் நினது வான் நிறை என்னும்
நா வல் அந்தணர் அரு மறை பொருளே
அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும்
எ வயினோயும் நீயே

செ வாய் உவணத்து உயர் கொடியோயே 60
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி 65
பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு
வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர

மூவா மரபும் ஓவா நோன்மையும் 70
சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின்
------------------- மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும்
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் 75
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே
பகைவரை ஒருசேர அழிக்கும் கூற்றுவனைப் போன்றது அந்த சக்கரப்படை;
பொன்னைப் போல ஒளிவிடும் நெருப்பின் கொழுந்துதான் அதன் நிறம்;
உன்னுடைய பிரகாசிக்கும் ஒளி, சிறப்புடைய நீலத் திருமணியினுடையது;
கண்களோ, புகழ் பெற்ற தாமரை மலர்கள் இரண்டினைப் பிணைத்ததாகும்;
வாய்மையோ தப்பாமல் ஒளிவிட்டு வரும் விடியற்காலை; உன் சிறந்த
பொறுமையை நோக்கினால் அது இந்த பெரிய நிலவுலகம்; எல்லாருக்கும்
அருளும் உனது அருளோ நிறைந்த மேகம்; என்று கூறுகின்றது
நாவன்மை கொண்ட அந்தணர்களின் வேதத்தின் பொருள்;
இங்குக் கூறிய அந்தப் பொருள்களையும், வேறு பிற பொருள்களையும் போன்றிருக்கின்றாய்; இவைகளுக்கிடையிலும்
வேறு எந்த இடத்திலும் இருக்கிறாய் நீயே!

சிவந்த வாயையுடைய கருடனை உயர்த்திய கொடியில் வைத்திருப்பவனே!
வேதங்களில் தேர்ந்த ஆசானின் மந்திரமொழிகளும்,
படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்லும் வேள்விச்சாலையில் யாகபலிக்காக ஆடுகளைக் கொண்டுபோவதும்,
புகழ் பொருந்த இசைக்கும் வேதவிதிகளின்படி யாகத்தீயை முறையாக மூட்டி,
திகழும் ஒளியையுடைய பிரகாசமான சுடரினை மேலும் பெருக்கிக்கொள்வதும், ஆகிய இம்மூன்று செயல்களும்
முறையே, உன் உருவமும், உன் உணவும்,
பிறரும் ஏற்றுக்கொள்ளும்படியான
உனது பெருமைக்குப் பொருந்தும்படி
அந்தணர்கள் போற்றிக் காணும் உன்னுடைய தோற்றப்பொலிவின் சிறப்பும் ஆகும்.
தேவர்களின் உணவான அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே,

மூப்படையாத முறைமையும், ஒழியாத ஆற்றலும்,
இறவாத மரபையுடைய அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன;
--------------- மரபினை உடையவனே! உனது திருவடியினை,
தலை நிலத்தில் பட வணங்கினோம், பலமுறை யாமும்;
மனக்கலக்கம் இல்லாத நெஞ்சினேமாய், போற்றினோம், வாழ்த்தினோம்,
சுற்றத்தார் பலரோடும் புகழ்ந்து வேண்டுகிறோம் -
பொய்யை மெய்யெனக்கொள்ளும் மயக்கத்தை அறியாமல் போவதாக எம் அறிவு என்று-



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்/விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு - அகம் 13/11,12

#13 பாலை பெருந்தலை சாத்தனார்
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்
முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை
தெறல் அரு மரபின் கடவுள் பேணி
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் 5
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்
வள் வாய் அம்பின் கோடை பொருநன் 10
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட 15
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை
கவவு இன்புறாமை கழிக வள வயல்
#13 பாலை பெருந்தலை சாத்தனார்
தன்னுடைய தென்கடலில் உண்டான முத்தினால் ஆகிய மாலையும்,
பகைவர் திறைகொடுக்கும் வலிமையையுடய தனது மலையிலுள்ள
யாராலும் அழிக்கமுடியாத மரபையுடைய கடவுளாகிய முருகனுக்குப் பூசையிட்டுக்
குறவர்கள் தந்த சந்தனத்தின் மாலையும் ஆகிய
இரண்டு பெரிய மாலைகளையும் அழகுற அணிந்திருக்கும்,
செல்வம் விரும்புகின்ற மார்பின் பாண்டியனின் படைத்தலைவனான -
குழியில் (விழவைத்துப்) பிடித்த பழக்கப்படாத யானைகளை
விலங்கு மொழியால் புரியவைக்கும் குறுகிய பொழுதில் அன்றி,
(மற்ற நேரங்களில்)தனக்கெனக் கொள்ளும் நிலை இன்றி இரவலர்களுக்கு ஈயும்,
கூர்மையான வாயைக்கொண்ட அம்பினை உடைய கோடைமலைத் தலைவன் -
பண்ணி என்பான் செய்த பயன் மிகுந்த களவேள்வியைப் போல (க்காட்டிலும்)
சிறந்த பயன் நிகழுமாயினும் – தெற்கே ஏறிச்சென்று
மிகுந்த மழையைப் பொழிந்த ஞாயிறு கொண்ட அதிகாலைநேரத்தில்
வனப்பில் இனிய துணையாகிய இவளைப் பிரிந்துபோய்த் தங்கினால்,
எக்குறையும் இல்லாமல் இருப்பதாக நீ ஈட்டும் பொருள்! நல்ல பக்குவமாக,
குற்றமற்ற தூய்மையான மடிக்கப்பட்ட துணி விரித்த படுக்கையில்
தழுவி இன்புறுதல் இன்றிக் கழிக – வளமுடைய வயல்களில்
தீக்கொழுந்துகளைப் போன்ற தோடுகள் ஈன்ற
வயற்காட்டு நெல்லின் கவைத்த அடியைக் கொண்ட நெற்கதிர்
நிரம்பிய அகன்ற வயலில் வரப்புகளை அணைத்து அசைய,

TOP

வேள்வியும் (1)
வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை - பரி 13/57

கொடி என கொண்ட கோடா செல்வனை 40
ஏவல் இன் முதுமொழி கூறும்
சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ நன் புகழவை
கார் மலர் பூவை கடலை இருள் மணி
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் 45
அவை நான்கும் உறழும் அருள் செறல்-வயின் மொழி
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை
இருமை வினையும் இல ஏத்துமவை

ஒருமை வினை மேவும் உள்ளத்தினை 50
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை
அடியும் கையும் கண்ணும் வாயும்
தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்
தாளும் தோளும் எருத்தொடு பெரியை
மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை 55
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை
வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை
அறாஅ மைந்தின் செறாஅ செம் கண்
செரு மிகு திகிரி_செல்வ வெல் போர்
கொடியாகக் கொண்ட மனக்கோட்டமில்லாத செல்வனாவாய்!
ஓதுவதற்கு இனிய வேதங்கள் கூறுகின்ற,
கருடச் சேவல் எழுதப்பட்ட மிகவும் உயர்ந்த கொடியையுடைய செல்வனே! நல்ல புகழினை உடையவன் நீ;
கருமேகம், காயாமலர், கடல், இருள், நீலமணி
ஆகிய இவை ஐந்தும் சேர்ந்த நிறத்தினை ஒத்த அழகு விளங்கும் மேனியையுடைவன்!
வலம்புரிச் சங்கின் முழக்கமும், வேதங்கள் ஓதும் ஒலியும், மேகங்களின் அதிர்ந்த ஒலியும், இடிமுழக்கமும்
ஆகிய நான்கையும் போன்ற அருளுடைமை, சினத்தல் ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டவை உன் மொழிகள்;
முடிந்துபோனதும், இனி முடியப்போவதும், இப்போது தோன்றியிருப்பதும் ஆகிய மூன்று காலங்களும்
கடந்து, அவை பொருந்தப்பெற்ற உன் திருவடிகளின் நிழலில் உள்ளவை;
நல்வினை, தீவினையாகிய இரு வினையின் பற்றுதலும் இல்லை, உன்னைப் போற்றும் உயிர்களுக்கு;

உயிர்களைக் காக்கும் ஒரு வினையில் பொருந்திய உள்ளத்தையுடையவன் நீ!
இலைகளைவிட்டு உயர்ந்தெழுந்து மலர்ந்த பெரிய இதழ்களைக் கொண்ட தாமரையைப் போன்றவை
உன் திருவடியும், கைகளும், கண்ணும், வாயும்;
உன் கைவளையும், தொப்புளும், தோளில் அணிந்திருக்கும் வளையமும்
திருவடியும், தோளும், உன் பிடரியுடனே பெரியனவாகக் கொண்டிருக்கிறாய்;
உன் மார்பும், பின்புறமும் உன் மனத்தோடு மிக்க பருமையுடையனவாகக் கொண்டிருக்கிறாய்;
உன் கேள்வியும், அறிவும், அறப்பண்புடன் மிக்க நுண்ணிதாகக் கொண்டிருக்கிறாய்;
வேள்வியில் விருப்பமும், வீரத்தில் வெம்மையும் கொண்டிருக்கிறாய்;
குன்றாத வலிமையினையும், சினவாத சிவந்த கண்களையும்
வெல்லும் போரினில் செருக்களத்தில் மேம்பட்டுநிற்கும் சக்கரப்படையையும் கொண்டுள்ள செல்வனே!



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும் - பரி 19/43
தெய்வ பிரமம் செய்குவோரும் 40
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்
வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப
ஊழ்-உற முரசின் ஒலி செய்வோரும் 45
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்
இரதி காமன் இவள் இவன் எனாஅ
விரகியர் வினவ வினா இறுப்போரும்

இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் 50
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும்
இன்ன பல_பல எழுத்து_நிலை_மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க 55
சோபன நிலை அது துணி பரங்குன்றத்து
மாஅல் மருகன் மாட மருங்கு
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
தெய்வத்தன்மையுள்ள பிரமவீணையினை இசைப்போரும்,
விரல்களைத் துளைகளில் வைத்து இசைக்கும் வேய்ங்குழலைக் கொண்டிருப்போரும்,
யாழில் இளி, குரல், சமம் ஆகிய இசைவகைப் பண்களை மீட்டுவோரும்,
முருகனுக்காகச் செய்யப்படும் வேள்வியின் அழகுத்தன்மையைப் புகழ்வோரும்,
யாழ்நரம்புகளின் இசை 'கொம்'மென்று ஒலிக்க,
அதனுடன் பொருந்தும்படி முரசின் ஒலியை எழுப்புவோரும்,
ஞாயிறு முதலாக வரும் நாள்மீன்களையும் கோள்மீன்களையும் உடைய சுடர்ச் சக்கரத்தைப்
பொருந்திய கோள்களின் நிலையைத் தீட்டிய ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருப்போரும்,
இரதி இவள், காமன் இவன் என்று
காமவயப்பட்டிருப்போர் எழுப்பிய வினாக்களுக்கு விடையிறுப்போரும்,

இந்திரன் இந்தப் பூனை, இவள் அகலிகை , இவன்
வெளியில் சென்ற கவுதமன், இவன் சினங்கொள்ள கல்லுருவம்
அடைந்த வகை இது என்று விளக்கிச் சொல்வோரும்,
இன்னும் பற்பல ஓவியங்கள் நிலைபெற்ற மண்டபங்களை
அருகேசென்று சுட்டிக்காட்டவும், அவற்றை விளக்கி அறிவுறுத்தவும்,
செம்மையான மூங்கில்களையும், அகன்ற பாறைகளையும் உடைய அகன்ற இடங்களில் இயற்றலால்
பெரிதும் மங்கலமான நிலையை உடையதாயிற்று தெளிவான திருப்பரங்குன்றத்து
திருமால் மருகனாகிய எழுந்தருளியுள்ள மாடத்தின் பக்கம்;
தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண்                                                                                                                                                                                                              செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான்



-- Edited by ankarai krishnan on Friday 28th of October 2022 08:06:54 PM

__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி - பதி 70/18

பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ
கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் 15
புரையோள் கணவ பூண் கிளர் மார்ப
தொலையா கொள்கை சுற்றம் சுற்ற
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி
உயர்_நிலை-உலகத்து ஐயர் இன்புறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை 20
இளம் துணை புதல்வரின் முதியர் பேணி
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறை குரல் அருவி
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் 25
அயிரை நெடு வரை போல
தொலையாது ஆக நீ வாழும் நாளே
நாணம் நிறைந்து, பெருமளவு கபடமின்மை நிலைபெற்று,
கற்பு நிலையாகத் தங்கின, மணங்கமழும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய,
சிறந்தவளுக்குக் கணவனே! - பூண்கள் அணிந்த மார்பினையுடையவனே!
கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்கும் சான்றோராகிய சுற்றம் உன்னைச் சூழ இருக்க,
வேள்விகளைச் செய்து இறைவர்க்குப் பலியூட்டினாய்! முன்னோர் சொல்லக் கேள்விப்பட்ட
உயர்ந்த நிலையுள்ள உலகமான விண்ணுலகில் இருப்போரை மகிழ்வித்தாய்!
சான்றோரை வணங்கும் மென்மையான உள்ளமும், பகைவரை வணங்காத ஆண்மைத் திறமும் கொண்டு,
இளம் துணைவராகிய புதல்வரைப் பெற்று, முதியோரைப் பேணி,
தொன்றுதொட்ட உன் கடமையைத் தவறாது செய்யும், வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே!
தேவர்கள் வாழும் விண்ணுலகத்திலும் கேட்கும்படியாக
இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை
மிகப் பெரிதான உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும்
அயிரை என்னும் நெடிய மலையைப் போல
குறையாது பெருகுவதாக நீ வாழும் நாள்கள்.

வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால்/திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு - பரி 17/28,29
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல் 20
மாறு அட்டான் குன்றம் உடைத்து
பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை
கமழ் நறும் சாந்தின் அவரவர் திளைப்ப
நணி_நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து 25
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று
வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால்
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு

ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை 30
வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப
தேயா_மண்டிலம் காணுமாறு இன்று
வளை முன்கை வணங்கு இறையார்
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
தார் மார்பின் தகை இயலார் 35
இவ்வாறு ஒன்றற்கொன்று மாறுபட்டு நிற்கும் தன்மையுற்றன போன்ற மாறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதலை
பகைவரை வென்றவனாகிய முருகனின் குன்றம் உடையதாகும்;
புலவரின் பாடலால் சிறப்புப்பெற்று, பல்வேறான புகழ் முதிர்ந்து விளங்கிய
மதுரை நகருக்கும், பரங்குன்றினுக்கும் இடைப்பட்ட வெளியானது,
மணங்கமழும் நறிய சாந்தினை பூசிக்கொண்ட ஆண்களும் பெண்களும் விளையாடிக்கொண்டே வருவதால்,
மிகவும் சிறிது தொலைவினதேயாயினும், நெடுந்தொலைவுள்ளதாயிற்று;
மகிழ்ச்சி மிக்க தேன் துளிக்கும் மாலையணிந்தவரின் கூந்தலிலிருந்தும், குடுமியிலிருந்தும்
விழுந்து அவிழ்ந்துபோன மாலைகளால் நடப்பதற்குரிய வழி இல்லையாயிற்று;
குற்றமற்ற மெய்ச்சொற்களாலும், வேள்விகளாலும்
எல்லாத் திசைகளிலும் உன் புகழ் பரவிய குன்றினில் கோயில்கொண்டிருந்து, பலகாலமாய்

முருகன் ஆவியாகக் கொள்கின்ற, அகிலிட்டு எழுப்பிய மணங்கமழும் புகை
இடங்கள்தோறும் மிகவும் மேலுயர்ந்து போவதால், கண்ணிமைக்காத வானவர்கள் கண்ணிமைத்து அகல,
ஞாயிற்று மண்டிலமும் காணமுடியாததாயிற்று;
வளையலணிந்த முன்கையையுடைய, வளைவாக இறங்குகின்ற தோள்களையுடைய மகளிரும்,
அணை போன்ற அவரின் மென்மையான தோள்களில் தங்கி அவரோடு அன்பில் ஒத்தவரும்,
மாலையணிந்த மார்பினையும் இயற்கை அழகும் உடைய ஆடவரும்,
குளிர்ந்த மாலையை அணிந்த இயல்பான அழகுடையாரும்,
மனத்தில் மகிழ்ச்சி மிகுந்து பாய்ந்து ஒருசேர நீராடுதலால்
சுனைகளிலே உள்ள மலர்களில் தாதினை ஊதும் வண்டுகள் அவ்வாறு ஊதல் செய்யாமற்போகும்;
அத்தன்மையது திருப்பரங்குன்றத்தின் அழகு;



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 கேள்வி மலிந்த வேள்வி தூணத்து - புறம் 400/18

# 400 கோவூர் கிழார்
மாக விசும்பின் வெண் திங்கள்
மூ_ஐந்தால் முறை முற்ற
கடல் நடுவண் கண்டு அன்ன என்
இயம் இசையா மரபு ஏத்தி
கடை தோன்றிய கடை கங்குலான் 5
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி 10
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம்
------------- ---------
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து
போது அறியேன் பதி பழகவும் 15
தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசி பகை கடிதலும் வல்லன் மாதோ
மறவர் மலிந்த தன் -----------
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் 20
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர்
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே
உயர்ந்த ஆகாயத்தில் இருக்கும், முழுமதி
பதினைந்து நாட்கள் முறையே முதிர,
அதனைக் கடலின் நடுவே கண்டாற் போன்ற எனது
இசைக்கருவியாகிய தடாரிப்பறையை அறைந்து, முறையாக அவனுடைய புகழைப் பாடி,
வாயிலில் தோன்றிய இரவின் கடைப் பகுதியாகிய விடியற்காலையில்
உலகத்து மக்களெல்லாம் உறங்கிக் கொண்டிருக்க அவன் மட்டும் உறங்காமல்
உலகைக் காக்கும் உயர்ந்த கொள்கை உடையவனாய்,
என் தெளிவான தடாரிப்பறையின் இசையைக் கேட்டான், என் தலைவன்;
அதைக் கேட்டதனால், என் மீதுள்ள அன்பு குறையாமல்,
பழையதாகிப்போன கந்தைத் துணியை இடுப்பிலிருந்து நீக்கி,
மிகப்பெரிய சிறப்புடைய நல்ல ஒளி மிகுந்த அணிகலன்களை
------------- ---------
புத்தாடை தந்து அணிப்பித்து, பொலிவுடன் இருக்கும் என் இடுப்பை நோக்கி
நாரால் வடிகட்டப்பட்ட கள்ளை உண்டு நாள்தோறும் மகிழ்ச்சி மிகுந்ததால்
நாட்கள் கழிந்ததையே நான் அறியாதவனாய் அவன் ஊரில் இருந்தேன்;
தன் பகைவரை அழிப்பது மட்டுமல்லாமல் அவனை அடைந்தோரின்
பசிப்பகையையும் அழிக்கவும் வல்லவன்.
வீரர்கள் மிகுந்த தன் -----------
கேள்வி அறிவிற் சிறந்த மறையோர்கள் நிறைந்த வேள்விச் சாலையில் தூண்களையும்
கரிய கழி வழியாக வந்திறங்கும் கடலிற் செல்லும் ஓடங்களை,
தெளிந்த நீர் பரந்த கடலுக்குச் செல்லும் வழியாகிய ஆற்றைச் செம்மைசெய்து செலுத்தி
நீர்த்துறைகள் தோறும் பிடித்துக் கட்டும் நல்ல ஊர்களையும்,
தங்கு வாழ்தற்குரிய இனிய புது வருவாயையும் உடைய நாட்டுக்கு உரியவன்.

வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் - புறம் 224/9
224 கருங்குழல் ஆதனார்
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து
முறை நற்கு அறியுநர் முன் உற புகழ்ந்த 5
தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு
பருதி உருவின் பல் படை புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம்
அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன் 10
இறந்தோன் தானே அளித்து இ உலகம்
அருவி மாறி அஞ்சுவர கருகி
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார்
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர 15
கொய்து கட்டு அழித்த வேங்கையின்
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே
224 கருங்குழல் ஆதனார்
பகைவர்களின் அரண்களை மதியாது, அவற்றைப் போரில் அழித்ததுவும்,
துணையாகக் கூடிய இனத்துடன் சேர்ந்து, குடிப்பதற்கு மதுவைக் குடம் குடமாக அளித்து,
பாணர்களின் பெரிய சுற்றமாகிய கூட்டத்தைப் பாதுகாத்ததுவும்,
அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில்
வழிமுறைளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய
தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு
வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள்,
பருந்து விழுங்குவதுபோல் செய்யப்பட்ட இடத்து நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்து,
வேதத்தால் சொல்லப்பட்ட வேள்வியைச் செய்து முடித்ததுவுமாகிய.
இத்தகைய செயல்களின் பயனை நிச்சயமாக அறிந்த அறிவுடையோன்
இறந்தான்; ஆகவே இவ்வுலகம் இரங்கத் தக்கது;
அருவியில் நீர் குறைந்து, உலகத்தார் அஞ்சும்படி தீய்ந்து
பெரும் வறட்சி மிகுந்த வேனிற்காலத்தில்
பசியால் வாடும் பசுக்களாகிய பயன்தரும் கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக,
கூர்மையான கொடுவாளால் இடையர்கள் இலைகளும் பூக்களும் உதிரக்
கொய்து தழைச்செறிவை அழித்த வேங்கை மரத்தைப் போல்
மெல்லிய இயல்புடைய மனைவியர் தங்கள் அணிகலன்களைக் களைந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

வீயா சிறப்பின் வேள்வி முற்றி - புறம் 15/20
வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல்
நன் பனுவல் நால் வேதத்து
அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன் மாண்
வீயா சிறப்பின் வேள்வி முற்றி 20
யூபம் நட்ட வியன் களம் பல-கொல்
யா பல-கொல்லோ பெரும வார்_உற்று
விசி பிணி கொண்ட மண் கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே 25
ஆசையுடன் வரும்போது, அவர்களின் ஆசை பின்பக்கம் ஓட,
பழியுண்டாக வாழ்ந்தவர் பலரோ? குற்றமில்லாத
நல்ல அற நூலிலும், நால்வகை வேதத்திலும் சொல்லப்பட்ட
அடைவதற்கு அரிய மிக்க புகழையுடைய சமீது, பொரி ஆகிய மேலே தூவப்படும் சிறந்த பொருளுடன்
நெய் மிக்க ஓமப்புகை பொங்கி எழ, பலவாறு மாட்சிமைப்பட்ட
கெடாத சிறப்பையுடைய வேள்வியைச் செய்துமுடித்து
வேள்வித்தூண்களை நட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ?
இவற்றில் எது பல? பெருமானே! வார்களைக் கொண்டு
இழுத்துக்கட்டப்பட்ட, வாயில் கரிய சாந்து பூசப்பட்ட முழவையுடைய
பாடினி பாடும் வஞ்சிப்பாடலுக்கு ஏற்ப, வஞ்சிப்போரைப் பற்றி
நினைக்கும் வலிமையினையுடையவனே , உனக்கு.


வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே - புறம் 26/15
அடு_களம் வேட்ட அடு போர் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே 15
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே
போர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும் போரையுடைய செழியனே!
விசாலமான அறிவையும், ஐம்புலனும் அடங்கிய விரதங்களையும்
நான்கு வேதங்களையும் உடைய அந்தணர் சுற்றியிருக்க
மன்னர்கள் ஏவல் செய்ய. நிலைத்த
வேள்வியைச் செய்துமுடித்த தப்பாத வாளினையுடைய வேந்தனே!
தவம் செய்தவர் உன் பகைவர், உனக்கு
எதிரிகள் என்னும் பெயரினைப் பெற்று
உன்னுடன் போரிட இயலாதவராய் இருந்தாலும் மேலுலகத்தில் சென்று வாழ்கின்றவர் - (தவம் செய்தவர்)

உரை சால் வேள்வி முடித்த கேள்வி - பதி 64/4
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு 5
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் வல்லே
அறநூல்களை ஓதியதால் தெளிவான நாவினையுடைய, உயர்ந்த
புகழ் நிறைந்த வேள்விகள் செய்து முடித்த கேள்வியறிவையுடைய
அந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்க்க ஏற்றுக்கொள்வதால், நீர் ஒழுகி ஏற்பட்ட
மிகுந்த சேற்றினில் கால்பதித்த, மணல் நிறைந்த முற்றத்தில்,
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
அரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது, விரைந்து

வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப - பதி 74/2
மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி/பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான் - பரி 5/26,27
பிறப்பினுள் இழிபு ஆகலும் 20
ஏனோர் நின் வலத்தினதே
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து
நாகம் நாணா மலை வில் ஆக
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய 25
மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து காம வதுவையுள்
அமையா புணர்ச்சி அமைய நெற்றி

இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு 30
விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணி பூணவற்கு தான் ஈத்தது
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின்
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள 35
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து
வசித்ததை கண்டம் ஆக மாதவர்
மனைவியர் நிறை-வயின் வசி தடி சமைப்பின்

பிறப்பினில் இழிந்த நிலை அடைதலும் உடைய
உன்னை அல்லாத பிற உயிர்கள் உன் ஆணைக்குட்பட்டவை;
பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த,
வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட வையகமாகிய தேரில் ஏறி,
வாசுகி என்ற பாம்பினை நாணாகக் கொண்டு, மேரு மலையே வில்லாக,
பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று வகையான கடத்தற்கரிய திரிபுரக் கோட்டைகளை ஒரு தீக்கணையால் வேகும்படியும்,
திக்கெல்லாம் பற்றியெரியும்படியும் எய்து, அமரர்கள் எழுப்பிய வேள்வியின்
அவியுணவை உண்ட பசிய கண்ணையுடைய சிவபெருமான்
உமாதேவியோடு புணர்ந்த காமநுகர்ச்சிக்கான திருமண நாளில்
கைவிட முடியாத புணர்ச்சியை அடைய, நெற்றியில்

இமைக்காத கண்ணையுடைய சிவபெருமானிடம், இந்திரன் ஒரு வரத்தைப் பெற்று
'உன் புணர்ச்சியால் உண்டான கருவை அழிப்பாயாக' என்று வேண்ட, அந்த விண்ணவரின் வேள்வியின் முதல்வனான
விரிந்த கதிர்களையுடைய மணிகளைப் பூண்டிருக்கும் இந்திரனுக்கு, தான் கொடுத்த வரம்
செய்வதற்கு அரியது என்று எண்ணி அதனை மாற்றாதவனாய், அவன் வாய்மையைப் போற்றுபவனாதலால்
நெருப்பு கனன்று தணியாமல் கொழுந்துவிட்டு எரியும் தன் மழுப்படையைக் கொண்டு அந்தக் கருவின் உருவத்தைப்
பல கண்டங்களாகச் சிதைத்துக் கொடுத்துவிட்டான், இந்த உலகம் ஏழும் மருண்டுபோக,
இந்திரனிடமிருந்து இந்தக் கருவினைப் பெற்றுக்கொண்டோர், சிதைக்கப்பட்ட கருவாகிய குழந்தை உடலை,
எதிர்காலத்தை உணரும் ஆற்றல் பெற்ற ஏழு என்ற எண்ணை அடையாகக் கொண்ட முனிவர்கள் நன்றாகத் தெளிந்து,
பிளவுபட்டதைத் துண்டங்களாக, அம் முனிவர்களின்
மனைவியர், தம் கற்புடைமையில், அந்தப் பிளக்கப்பட்ட துண்டுகளைத் தாங்கி வளர்த்தால்

விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன் - பரி 5/31
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே - கலி 36/26
காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ 20
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது
நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின்
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி
நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து
கேள்வி அந்தணர் கடவும் 25
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே
@ இரண்டாவது குறிஞ்சிக்கலி
அவரின் காதல் இன்பத்தைக் காணக்கொடுத்து வைப்போமோ?
நம்மைவிட்டுப் பிரிந்தவர் போன இடத்திலேயே தங்கிவிடுவாரோ? எப்படியோ,
நீண்டநாள் இவ்வாறு பிரிந்திருத்தல் உலகத்துக்குவேண்டுமானால் ஒத்துவரலாம், உன்
கத்தரிக்கோலால் ஒழுங்காக வெட்டிவிடப்பட்ட, ஒளிவிடும் நெய்ப்புள்ள கூந்தல்
தன் நாள் அலங்காரத்தையும் சிதைத்துவிடுமே என்று, மிக்க விருப்பத்துடன்
கேள்விஞானமுள்ள அந்தணர் செய்யும்
வேள்விப் புகையைப் போல் பெருமூச்செறிகிறது என் நெஞ்சம்.
* இரண்டாவது குறிஞ்சிக்கலி


முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி/கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின் - அகம் 220/6,7
#220 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ
தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும்
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர்
கடாஅ யானை குழூஉ சமம் ததைய
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் 5
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின்
அரும் கடி நெடும் தூண் போல யாவரும்
காணல் ஆகா மாண் எழில் ஆகம்
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே
#220 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
நாங்கள் வசிக்கும் ஊரிலும், எமது தெருவிலும் ஒன்றாகச் சேர்ந்து பழிமொழி பிறக்கும்படி
தேரோடு வந்து திரிந்தும், பணிவான மொழிகளைப் பலமுறை கூறியும்,
என்றும் நீங்காத வேள்வித்தீயினையுடைய அழகு விளங்கும் செல்லூரின்
மதம் ஒழுகும் யானையின் கூட்டம் போர்முனையில் அழிய
அரசர் குலத்தினை வேரறுத்துத் தொலைத்த மழுவாகிய வாளையுடைய நெடுமாலின் கூறாகிய பரசுராமன்
முன்பு விடாமல் முயன்று அருமையாகச் செய்து முடித்த வேள்விக்களத்தில்
கயிற்றினை இடையிலே சுற்றிய காணத்தக்க அழகினையுடைய
அரிய காவலையுடைய நீண்ட வேள்வித்தூண் போல, எப்படிப்பட்டவரும்
காண முடியாத சிறப்புள்ள அழகினையுடைய தலைவியின் மார்பினை
நினைக்கும்போதெல்லாம் துன்பத்தால் துடிக்கின்ற நெஞ்சத்தை உடையவனாய், நீதான்
நீண்ட நேரமாய் வெளியிலே நின்று வருந்துகின்றாயாதலால்



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

  அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் - திரு 96

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே 90
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ 95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம்
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி

நெஞ்சில் பொருந்தித் தோன்றுகின்ற ஒளி மிக்க நிறத்தையுடைய திருமுகங்களில்; 90
பெரும் இருள் (சூழ்ந்த)உலகம் குற்றமில்லாததாய் விளங்க
பல ஒளிக்கீற்றுகளையும் பரப்பியது ஒரு முகம்; ஒரு முகம்
(தன்பால்)அன்புசெய்தவர்கள் வாழ்த்த, (அவர்க்கு) முகனமர்ந்து இனிதாக நடந்து,
(அவர்மேல் கொண்ட)காதலால் மகிழ்ந்து (வேண்டும்)வரங்களைக் கொடுத்தது; ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத 95
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்; ஒரு முகம்
எஞ்சிய பொருள்களைச் (சான்றோர்)காவலுறும்படி ஆராய்ந்துணர்ந்து,
திங்கள் போலத் திசைகளெல்லாவற்றையும் பொலிவுறுத்தி நிற்கும்; ஒரு முகம்
கோபமுடையோரை அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து,

வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து - திரு 156
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை 150
புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு
வல-வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் 155
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்

நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய 160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம்-தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவர் சுட்டி காண்வர 165
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு
பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய 150
கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும் - வெள்ளிய ஆனேற்றை
வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களையும்,
இறைவி பொருந்தி விளங்குகின்ற, இமையாத மூன்று கண்களையும் உடைய,
முப்புரத்தை எரித்த, மாறுபாடு மிக்க உருத்திரனும் -
நூற்றைப் பத்தாக அடுக்கிய(ஆயிரம்) கண்களையும், நூற்றுக்கணக்கான பல 155
வேள்விகளை வேட்டு முடித்ததனால் வென்று கொல்கின்ற வெற்றியினையும் உடையனாய்,
நான்கு ஏந்திய கொம்புகளையும், அழகிய நடையினையும்,
(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
புறக்கழுத்தில் ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும் -

நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள 160
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய
பலராலும் புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி,
பாதுகாவலுறுகின்ற (இம்)மண்ணுலகில் (வந்து)தோன்றி,
தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய
நான்முகன் ஒருவனை(ப் பழைய நிலையிலே நிறுத்தலை)க் கருதி, அழகுண்டாக, 165
பகுத்துக் காணுங்கால் (வேறுபடத்)தோன்றியும், தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய
நான்காகிய வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்து மூவரும்,
பதினெண்வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும் -
விண்மீன்கள் மலர்ந்ததைப் போன்ற தோற்றத்தையுடையவராய், மீன்களின்(இடத்தைச்)சேர்ந்து


வேள்வி தூணத்து அசைஇ யவனர் - பெரும் 316
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த 315
வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட
வைகுறு_மீனின் பைபய தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ்

நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த 315
வேள்விச்சாலையின் வேள்வித்தூணின்மேல் இருக்க, (அப்பறவை)யவனரி
அன்ன(த்தைப்போன்ற தொங்கு) விளக்கைப்போலவும், (மகரக்குழை, விளக்கின் தீச்சுடர்)உயர்ந்த வானில் இடங்கொண்ட
வைகறை வெள்ளிமீன் போலவும் மினுக்மினுக் என்று ஒளிவிட்டும் தோன்றும்
நீரின் பெயர்கொண்ட நீர்ப்பாயல்துறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று - பாலின் நிறமான

நல் வேள்வி துறைபோகிய - மது 760
பரந்து தோன்றா வியல் நகரால்
பல்_சாலை_முதுகுடுமியின்

நல் வேள்வி துறைபோகிய 760
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலம்தருதிருவின்நெடியோன் போல
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்_வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி 765
அரிய தந்து குடி அகற்றி
பெரிய கற்று இசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன் மீன் நடுவண் திங்கள் போலவும்

பரந்து தோன்றவும், அகன்ற (இம் மதுரை மா)நகரத்தே,
(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,

நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக, 760
தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள்
சேரும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய
நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று
இறும்பூதும், நிறைவும், செப்பமும் உடைய சான்றோர்
பலர் கூற்றுக்களிலும் களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு, 765
அரியவான பொருள்களைக் கொணர்ந்து (எல்லார்க்கும் கொடுத்து), குடிமக்களைப் பெருக்கி,
பெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து,
கடல் நடுவே ஞாயிறு போன்றும்,
பல விண்மீன்களுக்கு நடுவே திங்கள் போன்றும்,



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

பரிபாடல் திரட்டு
பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில் தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
தலைவன் கூற்று
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு.
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு. -பரிபாடல்-திரட்டு 2:50-63
அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்கியே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப்புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.

புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை
எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட
புனல் ஊடு நாடு அறிய பூ மாலை அப்பி
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்
கூடாமுன் ஊடல் கொடிய திறம் கூடினால் 55
ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து
என ஆங்கு
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என
பார்ப்பார் ஒழிந்தார் படிவு
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று 60
அந்தணர் தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு_உற்று என
ஐயர் வாய்பூசுறார் ஆறு
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல்
கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை 65
நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல்
புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை

குறையாமற் செல்கிறது வையையின் புதுநீர்;
புனலோடு போகின்ற ஒரு பூமாலை கொண்டையில்
ஊழ்வகையால் வந்து அடைந்தது என்று அதனை ஏற்றுக்கொண்டு,
நீராடியவரின் ஊரறிய அந்தப் பூமாலையை அணிந்துகொண்டாள் என்ற செய்தி,
நினைத்துப்பார்ப்பவரின் நெஞ்சிற்குத் துன்பம் விளைவிக்கும்; கொதிப்புடன்,
தலைவன் தலைவியிடம் வந்து சேர்வதற்கு முன்னரே இந்தக் கொடுந்தன்மை தலைவியை வந்து சேர்ந்தால்,
ஊடமாட்டாளோ? ஊரிலுள்ள அலர் பேச்சு ஊர்ந்துவந்து அவளைச் சேர,
என்று கூறும்படி புனலாட்டு நிகழ,
ஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று
பார்ப்பனர் தவிர்த்தார் நீராடுதலை;
ஆடவரும் பெண்டிரும் பூசியிருந்த நறுமணப் பொருட்களைத் தூவப்பெற்றதாயிற்று என்று
அந்தணர்கள் நீராடவில்லை ஆற்றில்;
வையையின் நீர் தேன் கலந்து மழுமழுவென்றானது என்று
ஐயர் வாய்கொப்பளிக்கவில்லை ஆற்றில்;
விரைவான இரைச்சலுடன் நறுமணமிக்க துறைகளின் கரைகள் அழியும்படியாக இழிந்து ஊர்ந்து ஊர்ந்து செல்லும் புனல்;
கரையோரத்திலும், கடலில் கலக்குமிடத்திலும் மலையிலிருந்து கடல்வரை வரிசை வரிசையாக நீரானது நுரையை எழுப்பும்;
மிக்க நுரையுடன் மதகுகள்தோறும் புகுந்து வெளிவரும் நீர் கரை புரண்டு ஓடும்; அலைகள் புரளும் கடலுக்குள்
சென்று புகும் வரை மிகுந்து மேலும் மேலும் வந்து ஓசையுடன் கரைகளாகிய சிறைக்குள் அடங்காதவாய் வெள்ளம் மிகும்;



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

வள்ளுவர் சமயம் நாம் நேர்மையாக உணர வள்ளுவர் ஒரு நல்ல நாட்டிற்கான இலக்கணம் என.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை.:
அந்தணர் களுடைய வேதங்களிற்கும் அதனின் சாரமான நீதி அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
இந்தக் குறட்பாவில் உள்ளவை சங்க இலக்கிய தமிழர் மரபே. பாட்டுத் தொகை நூல்களுள் ஒரே ஒரு பாடலில் மட்டுமே மூவேந்தர் இணைந்து உள்ளதாக ஔவையார் பாடி உள்ள பாடலில்
புறநானூறு 367, பாடியவர்: ஔவையார்,
பாடப்பட்டோர்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவெங்கோ, திணை: பாடாண், துறை: வாழ்த்தியல்
தமிழக மூவேந்தர்கள் சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒன்றாக் கலந்து கொண்டபோது பாடியது. பாட்டுத்தொகை நூல்களில் இந்த ஒரே பாடலில் தான் மூவேந்தர்கள் பற்றிய பாடல்
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்து

வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல காண்பதற்கினிமையாய் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும், கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே!
உரை: வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் தினமும் உலக நன்மைக்கு வளர்க்கும் வேள்வி முத்தீயைப் (ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம்) போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே!
O kings who ride in chariots with flags and own
victorious white umbrellas, beautiful to behold
like the three flames of the virtuous, twice-born
Brahmins who have subdued their senses through
their will! This is what I understand! May your
living days be splendid! (Prof: Vaidehi Lambert Translation)

இந்தப் பாடலில் மக்கள் நன்மைக்கு என வாழ்ந்த அந்தணர்கள் மற்றும் அவர்கள் தினமும் வேள்வி செய்தலும், மேலும் அவற்றில் முத்தீ அமைப்பர் என்பதும் தமிழர்கள் மெய்யியல் மரபு என பதிவு செய்துள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

ஆட்சியாளன் கொடுங்கோலராக இருந்தால் விளைவுகள் எனக் கூறி உள்ளவை.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560: கொடுங்கோன்மை.
அரசன் நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதிடாமல் மறந்துவிடுவர்.
புறநானூறு 9 Purananuru 9
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாடியவர் : நெட்டிமையார்.
தமிழ் மன்னன் படையெடுத்து சென்று எதிரி நாட்டைத் தாக்கும் முன்பு அங்கு உள்ளவர் பலரை தப்பி செல்லுமாறு போர்க்கால அறம் பின்பற்றியதைக் காட்டும் பாடல்
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை,
போர் அறம்
பசு, பசுப் போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர்,இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது என்று அறவழி கூறியபின் போரிடும் பாங்குடையவன் இந்த அரசன்.
He announces in a righteous manner, “Cows,
Brahmins with the nature of cows, women, those
who are sick, and those living in the southern
land with no gold-like sons to perform precious
last rites, take refuge! We are ready to shoot
volleys of arrows!”



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

பரிபாடல்-திரட்டு 8 30.8 எட்டாம் பாடல்
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் 5
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல 10
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே

திருமாலின் தொப்புளில் தோன்றி மலர்ந்த தாமரைப்
பூவோடு ஒத்தது அழகிய ஊர், அந்தப் பூவின்
அக இதழ்களை ஒத்தன தெருக்கள்; அந்த இதழ்களின் நடுவே உள்ள
அரிய பொகுட்டினை ஒத்ததே பாண்டியனின் அரண்மனை;
அந்தப் பூவின் பூந்தாதுக்களைப் போன்றவர் இனிய தமிழ்க்குடி மக்கள்;
அந்தத் தாதுக்களை உண்ணும் பறவைகளைப் போன்றவர் பரிசில் பெற்று வாழ்பவர்;
அந்தத் தாமரைப் பூவில் தோன்றிய பிரமதேவனுடைய நாவில் பிறந்த
நான்கு வேதங்களையும் கேள்வியால் கற்றவர்கள் ஓதுகின்ற குரலால் எழுப்ப,
மிக்க இன்பமான துயிலிலிருந்து எழுதலன்றி,
வாழ்த்துப்பெற்ற வஞ்சியும் உறைந்தையும் போல
கோழி கூவ எழாது எமது பெரிய ஊர்மக்களின் துயில்;
பூவினுள் பிறந்தோன்- பிரம்மா; நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத; வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி; கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்; கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ

பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சி வாழ்மக்களும், சோழ தலைநகர் உரையூர் வாழ்மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.

Our beautiful city is like the lotus flower
on the navel of Thirumāl. Its streets are like the
petals of the flower. Its temple built for God is
like the seed vessel that is at the center of the lotus blossom.
The cool Thamizh people are like flower pollen, and
The poets, bards and artists are like bees that eat the pollen.
The people of our city wake up from their sweet
sleep to the chants of brahmins who chant the Vēdās
that were born on the tongue of Brahman. They do
not wake up to crowing roosters like those in Vanji and Kōli.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில் தலைவன் கூற்று

மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
தலைவன் கூற்று

புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக் கொண்டை
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடா முன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து,
என ஆங்கு,

It brings sorrow to those who think about the other
woman decorating her head with the flower garland,
saying “It is my good fortune that the river brought the
garland to me,” revealing it to the whole country.
If the spreading gossip in town reaches the ears of the wife
before he comes back to her, will she not be enraged?
She will quarrel with him. This is what happens there.
Notes: இலக்கணம்: ஆங்கு – அசைநிலை, an expletive.
Meanings: புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்று – ‘accepting the flower garland that came in the flood to my hair knot as mine is my luck’ (புனலூடு – புனல் ஊடு, புனல் நீரின்கண்), கொண்டை – hair knot, புனலூடு – in the water, நாடு அறியப் பூ மாலை அப்பி – she put the garland on her head for the whole country to see, நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் – hurts those who think about it, கனல்புடன் – with rage, கூடாமுன்– before he comes backs to her, ஊடல் – sulking with rage, கொடிய திறம் – harsh nature, கூடினால் – if it reaches her ears, ஊடாளோ – will she not sulk, ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து – if she hears from the spreading gossip in town, என ஆங்கு – thus

பார்ப்பார் நீராடார்

“ஈப் பாய் அடு நறாக் கொண்டது இவ் யாறு” எனப்
பார்ப்பார் ஒழிந்தார் படிவு.
“மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று” என்று, 60
அந்தணர் தோயலர் ஆறு.
வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென,
ஐயர் வாய் பூசுறார் ஆறு.

The Brahmins Refuse to Bathe
The Brahmins refused to do their ritual bathing
stating, “This river has liquor that was heated and
made and flies are swarming on it.”
They do not do their ritual bathing in Vaiyai saying,
“The aromatic pastes from men and women are in
the water which is now unpure.”
The wise men also refuse to wash their mouths in the
water saying, “The water is slushy with honey from
flowers.”

Notes: இலக்கணம்: தேம் தேன் என்றதன் திரிபு. வாய் பூசுறார் (63) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாயும் பூசுதல் உறார் எனற்பால உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

Meanings: ஈப் பாய் – flies are swarming, அடு நறாக் கொண்டது இவ் யாறு– this river has alcohol that has been heated and made, எனப் பார்ப்பார் ஒழிந்தார்– Brahmins left from there, படிவு – ritual bathing, மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று அந்தணர் தோயலர்– they Brahmins did not bathe saying the fragrant materials from men and women are in the water which is now impure, ஆறு வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென ஐயர் வாய் பூசுறார் ஆறு – the wise men do not wash their mouths with the river water saying that it has honey from flowers and it is slushy

வையை நுரை முதலியவற்றோடு சென்ற வகை
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர
ஊர்தரும் புனல்,
கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரை நிரை
நீர்தரு நுரை, 65
நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல் கரை புரளிய
செலும் மறி கடல்,
புகும் அளவு அளவு இயலி இசை சிறை தணிவின்று
வெள்ள மிகை.
Vaiyai Floods with Foam
The river roars and flows rapidly, hitting
and eroding the banks. It flows down in the spaces
between the sea and the mountain, carrying rows
and rows of foam as it rushes toward the ocean. It
flows through all the sluice gates. Brimming with
abundant water near the ocean, the flooding river is
not confined by its banks.
Notes: அளவு அளவு இயலி (66) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவ்வளவு அவ்வளவு வந்து புகுந்த என்றவாறு.
Meanings: விரைபு – rapidly, இரை – loud, விரை துறை – water on the shores, கரை அழிபு – ruining the banks, இழிபு – flowing down, ஊர ஊர்தரும் புனல் – flowing water, கரையொடு – up to the shores, கடலிடை வரையொடு – in the space between the sea and the mountain, கடலிடை – to the ocean, நிரை நிரை நீர்தரு நுரை நுரையுடன் – with foam from rows of waves brought by the river, மதகுதொறு இழிதரு – flows through all the sluice gates, புனல் கரை புரளிய செலும் – hitting the shores and moving (செலும் – செல்லும் என்பதன் இடைக்குறை விகாரம்), மறி கடல் புகும் அளவு– when water enters the rolling ocean (மறி – புரளும்), அளவு அளவு இயலி இசை – more and more flowing with great sounds, சிறை – river banks, தணிவின்று – not getting reduced, வெள்ள மிகை – abundant flood waters



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard