உடம்பின் (3) உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10 காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என் நோனா உடம்பின் அகத்து - குறள் 117:3 உடம்பினுள் (1) புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - குறள் 34:10 உடம்பு (4) அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு - குறள் 8:10 இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை கையாறா கொள்ளாதாம் மேல் - குறள் 63:7 அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு - குறள் 95:3 இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை குற்றம் மறைப்பான் உடம்பு - குறள் 103:9 உடம்பும் (2) மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5 நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் நாணினை நீக்கி நிறுத்து - குறள் 114:2 உடம்பொடு (2) குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே உடம்பொடு உயிர்-இடை நட்பு - குறள் 34:8 உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன மடந்தையொடு எம்-இடை நட்பு - குறள் 113:2 உடல் (1) படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் - குறள் 26:3 உடற்கு (1) மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு - குறள் 7:5 உயிர் (34) அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண் வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8 புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3 ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4 மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4 அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9 தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8 பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 33:2 கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6 தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7 உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10 நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளாது உணர்வார் பெறின் - குறள் 34:4 அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - குறள் 51:1 உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர் குன்றல் இலர் - குறள் 78:8 ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர் போஒம் அளவும் ஓர் நோய் - குறள் 85:8 இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் உழ-தொறூஉம் காது அற்று உயிர் - குறள் 94:10 மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் - குறள் 97:9 ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும் நன்மை குறித்தது சால்பு - குறள் 102:3 நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால் நாண் துறவார் நாண் ஆள்பவர் - குறள் 102:7 நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை நாணால் உயிர் மருட்டி அற்று - குறள் 102:10 இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான் - குறள் 107:2 கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர் சொல்லாட போஒம் உயிர் - குறள் 107:10 கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை பேதைக்கு அமர்த்தன கண் - குறள் 109:4 உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6 அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1 காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என் நோனா உடம்பின் அகத்து - குறள் 117:3 மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா என் அல்லது இல்லை துணை - குறள் 117:8 விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார் அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள் 121:9 நனவினான் நல்காதவரை கனவினான் காண்டலின் உண்டு என் உயிர் - குறள் 122:3 மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும் வேலை நீ வாழி பொழுது - குறள் 123:1 பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் என் மாயா உயிர் - குறள் 123:10 எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம் உள்ளும் உயிர் காதல் நெஞ்சு - குறள் 130:8
உயிர்-இடை (2) குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே உடம்பொடு உயிர்-இடை நட்பு - குறள் 34:8 உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன மடந்தையொடு எம்-இடை நட்பு - குறள் 113:2 உயிர்க்கு (17) சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள் 4:1 தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8 அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு என்பொடு இயைந்த தொடர்பு - குறள் 8:3 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு - குறள் 13:2 ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள் 19:10 ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு - குறள் 24:1 உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு - குறள் 27:1 தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8 புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - குறள் 34:10 எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள் 40:2 மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லா புகழும் தரும் - குறள் 46:7 நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - குறள் 48:6 துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன் அளி இன்மை வாழும் உயிர்க்கு - குறள் 56:7 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள் 95:5 ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல நாண் உடைமை மாந்தர் சிறப்பு - குறள் 102:2 வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் அதற்கு அன்னள் நீங்கும் இடத்து - குறள் 113:4
உயிர்க்கும் (4) அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும் செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10 அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1 இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1 பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2
உயிர்த்து (1) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்_தொடி கண்ணே உள - குறள் 111:1
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. குறள் 73: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர். என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். குறள் 77: எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும். புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. குறள் 79: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்? அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. குறள் 80: மணக்குடவர் உரை: உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. குறள் 1122: காதற்சிறப்புரைத்தல். மு. வரதராசன் உரை:இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338: நிலையாமை. மு. வரதராசன் உரை:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. மு. கருணாநிதி உரை:உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான். சாலமன் பாப்பையா உரை:உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
மணக்குடவர் உரை:எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்குக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்: பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ. இது பிணத்தை யொப்பரென்றது. சாலமன் பாப்பையா உரை: இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். குறள் 330: கொல்லாமை சாலமன் பாப்பையா உரை: நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். குறள் 258: புலான்மறுத்தல் மணக்குடவர் உரை: குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை. இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது. பிழையற்ற அறிவினை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை இறைச்சியை உண்ணமாட்டார்.
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. குறள் 1132: நாணுத்துறவுரைத்தல் மணக்குடவர் உரை:பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது. மு. வரதராசன் உரைகாதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. குறள் 1122: காதற்சிறப்புரைத்தல் மணக்குடவர் உரை: உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து, மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு. நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது. மு. வரதராசன் உரை: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
உடம்பு உயிர் வாழ்கின்ற கூட்டுக்கு உடல் என்று பெயர். உயிரை ஆடையாக உடுத்திக் கொண்டு இருப்பதால் அதற்கு உடல் என்று பெயர் வந்தது. இந்த உடலுக்கு எத்தனை, எத்தனை பெயர்கள் இருக்கின்றன. சரீரம், உடம்பு, மெய், காயம், தேசம், யாக்கை, மேனி, பொன். 'உடல் என்றாலே 'மாறுபாடு என்பது அர்த்தம். இந்தச் சொல் காக்கின்ற இரகசியம் என்னவென்றால், உலகத்திலே நடமாடுகின்ற உடலானது, இயற்கைக்கு ஏற்ப மாறுபடும், இயற்கையைப் போல மாறுபடும். இயற்கைக்காக மாறுபடும் என்பதுதான். ஒரேநிலையில் உடல் எப்பொழுதும் இருக்காது. அது பிநாடிக்கு நொடி, நிமிடத்திற்கு நிமிடம், பொழுதுக்குப் பொழுது மாறிக் கொண்டே வரும். மருகிக் கொண்டே குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338: நிலையாமை மணக்குடவர் உரை:கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார். பரிமேலழகர் உரை:குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. ('தனித்துஒழிய' என்றதனான் முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும், புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு'என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின் , வினைவயத்தால்கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடம்பை' என்பதற்குக்கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.). மு. வரதராசன் உரை:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. மு. கருணாநிதி உரை:உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான். சாலமன் பாப்பையா உரை:உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே. உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை மணக்குடவர் உரை:உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று. பரிமேலழகர் உரை:சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.). மு. வரதராசன் உரை:இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. மு. கருணாநிதி உரை: நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு. சாலமன் பாப்பையா உரை:உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. குறள் 340: நிலையாமை மணக்குடவர் உரை: தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று. பரிமேலழகர் உரை: உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று,இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.). மு. வரதராசன் உரை: (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ. மு. கருணாநிதி உரை: உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது. சாலமன் பாப்பையா உரை: உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. குறள் 73: அன்புடைமை மணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை. பரிமேலழகர் உரை: ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.). மு. வரதராசன் உரை: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
மு. கருணாநிதி உரை:உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும். சாலமன் பாப்பையா உரை:பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர். என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். குறள் 77: அன்புடைமை மணக்குடவர் உரை: என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம். பரிமேலழகர் உரை: என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.). மு. வரதராசன் உரை: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். மு. கருணாநிதி உரை: அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும். சாலமன் பாப்பையா உரை: எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும். அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. குறள் 80: அன்புடைமை மணக்குடவர் உரை:உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்? பரிமேலழகர் உரை:அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.). மு. வரதராசன் உரை:அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும். மு. கருணாநிதி உரை: அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும். சாலமன் பாப்பையா உரை:அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.
தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு இருக்கும்போது என் உயிர் இருத்தல் போன்றவள்; பிரியுமிடத்து என் உடம்பிலிருந்து உயிர் நீங்கிப் போவதை ஒத்தவள் என்பது, அவளைப் பிரிந்திருப்பதும் சாதலை ஒக்கும் என்கிறது.
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல் மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது. சாலமன் பாப்பையா உரை: எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். குறள் 362: அவாவறுத்தல் மணக்குடவர் உரை: வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது. மு. வரதராசன் உரை: ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
மணக்குடவர் உரை:அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும். இஃது இன்பமும் இதனாலே வருமென்றது. சாலமன் பாப்பையா உரை: ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும். ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். குறள் 370: மணக்குடவர் உரை:நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது. மு. வரதராசன் உரை:ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும். சாலமன் பாப்பையா உரை:ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும். பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல் மணக்குடவர் உரை: பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது. சாலமன் பாப்பையா உரை: பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும். இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. குறள் 352: மெய்யுணர்தல் மணக்குடவர் உரை: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து. குறள் 353: மெய்யுணர்தல் மணக்குடவர் உரை: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மணக்குடவர் உரை: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு. சாலமன் பாப்பையா உரை: பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. குறள் 357: மணக்குடவர் உரை: உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு. சாலமன் பாப்பையா உரை: பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று. மு. வரதராசன் உரை: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. குறள் 345: துறவு மணக்குடவர் உரை:பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ? சாலமன் பாப்பையா உரை:இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு? யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். குறள் 346: துறவு மணக்குடவர் உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும். சாலமன் பாப்பையா உரை: உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் குறள் 349: துறவு மணக்குடவர் உரை:ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது. சாலமன் பாப்பையா உரை: ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.’ (குறள் எண் 62)
பண்புடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவிகளிலும் தீவினைப் பயனால் வரும் துன்பங்கள் சென்று சேரா.
‘சிறுமையின் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.’(குறள் எண் 98)
இனிய சொல்லானது இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் இன்பம் தரும், எனவே இனிய சொற்களையே பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
‘எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள் விழுமம் துடைத்தவர் நட்பு.’ (குறள் எண் 107)
தங்களுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கியவருடைய நட்பை ஏழேழு பிறவியளவும் நன்றியுடையோர் நினைப்பார்கள்.
‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 126)
ஒரு பிறப்பில் ஆமை கூட்டுக்குள் ஒடுங்குவதுபோல் ஐம்புலன்களையும் ஒருவன் அடக்குவானாகில் அது அவனுக்கு ஏழு பிறப்புகளிலும் சிறப்பு சேர்க்கும்.
‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 398)
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுக்கு அந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் ஏழு பிறவிகளிலும் உதவும் தன்மை உடையது.
‘மனநலத்தி னாகும் மறுமை மற்றஃதும் இன நலத்தின் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 459)
ஒருவனுக்கு மன நலத்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் இனநலத்தால் மேலும் சிறப்புப் பெறும்.
‘ஒருமை செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு.’ (குறள் எண் 835)
அறிவற்றவன் தனக்குக் கிடைத்த இந்தப் பிறவியிலேயே அடுத்துவரும் பிறவிகள் தோறும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்!
‘இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.’ (குறள் எண் 1042)
இல்லாமை என்கிற பாவி ஒருவனை வந்து சேர்ந்தால் அவன் பிறர்க்குக் கொடுக்க எதுவும் இல்லாதவன் என்பதால் அவனுக்கு மறுமை இன்பம் கிட்டாது. இல்லாமை காரணமாக அவனுக்கு இம்மை இன்பமும் கிட்டாது.
‘இந்தப் பிறப்பில் உன்னை நான் பிரியேன் என்று என் காதலியிடம் காதல் மிகுதியால் சொன்னேன். அப்படியானால் அடுத்த பிறவியில் பிரிவேன் என்றெண்ணி அவள் கண் கலங்கினாள்!’ என்கிறான், குறள் காட்டும் தலைவன். இவ்விதம் இம்மையைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் மறுபிறவி பற்றியும் நம் சிந்தனையைத் தூண்டுகிறது வள்ளுவம். மானுட உடலுடன் உயிரோடு யாரும் சொர்க்கத்திற்குப் போகமுடியாது. ஆனால், திரிசங்கு என்ற மன்னன் தன் மானிட உடலோடு சொர்க்கத்திற்குப் போகவேண்டும் எனஆசைப்பட்டான்.
என்று அகநானூறு (66 ஆம் பாடல்) மறுமை பற்றிப் பேசுகிறது.
‘இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என் கணவனை யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே ...’
என குறுந்தொகையின் 49ஆம் பாடல் ‘இந்த வாழ்வு முடிந்து மறுமையிலும் கூட நீதான் என் கணவன், நான்தான் உன் மனைவி!’ என்று சொல்லும் தலைவியைச் சித்தரிக்கிறது. ‘மறு உலகத்தைப் பற்றிப் பேசாமல் இம்மையில் எல்லாச் சுகங்களையும் அனுபவியுங்கள் என்று சொல்பவர்கள் நறுமணம் கொண்ட நெய்யில் செய்து பாகில் ஊறிய அடையை உண்ணக் கொடுக்காமல், செங்கல்லை உண்ணக் கொடுப்பவர்களைப் போன்றவர்கள்!’ என்கிறார் மூன்றுறையரையனார் தம் பழமொழி நானூறு என்ற நூலில்.
பிறர் தங்களைப் பழித்துப் பேசியதைப் பொறுத்துக் கொள்வதோடு, இதன் காரணமாக மறுமையில் எரியும் நரகத்தில் இவர்கள் வீழ்ந்து துன்புறுவார்களே என்று இரங்குவதும் சான்றோர் இயல்பு என்கிறது நாலடியாரில் வரும் இன்னொரு வெண்பா.
‘தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பதன்றி மற்று எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர் கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்!’ (நாலடியார் 58)
சிலப்பதிகாரத்தில் உடலோடு கண்ணகி சொர்க்கம் போனதாகச் சொல்லப்படுகிறது. தன் மார்பகத்தைத் திருகி எறிந்து மதுரையை எரித்த கண்ணகி பின்னர், ஒருமுலை இழந்த திருமா பத்தினியாக ஒரு வேங்கை மரத்தின் அடியில் வந்து நிற்கிறாள். தேவேந்திரனும் தேவர்களும் அவள்மீது பூமாரி பொழிகின்றனர். வான ஊர்தியில் கோவலன் வருகிறான். கண்ணகியை அவன் வானவூர்தியில் ஏற்றிக் கொள்ள அது விண்ணகம் செல்கிறது.
என்பன சிலப்பதிகார வரிகள். ஏழேழ் பிறவிகளிலும் கண்ணனையே அடைய வேண்டும் என்று திருப்பாவையில் வேண்டுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. குறள் 244: அருளுடைமை கலைஞர் மு.கருணாநிதி உரை: எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள். மு.வரதராசனார் உரை: தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை. சாலமன் பாப்பையா உரை: நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது. பரிமேலழகர் உரை: மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.). மணக்குடவர் உரை: நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார். இது தீமை வாராதென்றது. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நிலையான உயிர்களைப் போற்றி அவற்றினிடம் அருளுடையவனுக்குத் தன உயிர் அஞ்சக் கூடிய தீவினைகள் உண்டாகா என்று அறிந்தோர் சொல்லுவர். தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும். குறள் 268: தவம் கலைஞர் மு.கருணாநிதி உரை:தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும். மு.வரதராசனார் உரை:தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். சாலமன் பாப்பையா உரை:தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும். பரிமேலழகர் உரை:தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.). மணக்குடவர் உரை: தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும். உயிரென்றது சலிப்பற்ற அறிவை; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. குறள் 68:மக்கட்பேறு கலைஞர் மு.கருணாநிதி உரை:பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். மு.வரதராசனார் உரை:தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும். சாலமன் பாப்பையா உரை:தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது. பரிமேலழகர் உரை:தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம். (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.). மணக்குடவர் உரை:தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம். திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தமது மக்களுடைய அறிவுடைமையானது தமக்கு உண்டாக்கும் இன்பத்தினைவிட உலகத்து உயிர்களுக்கெல்லாம் இனிமையானதாக இருக்கும்.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். சிற்றினஞ்சேராமை குறள் 457: கலைஞர் மு.கருணாநிதி உரை:மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும். மு.வரதராசனார் உரை:மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும். சாலமன் பாப்பையா உரை:நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும். பரிமேலழகர் உரை:மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம்(தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும். ('மன், உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும் , புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார்.மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு , அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என , அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.). மணக்குடவர் உரை:மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும். இஃது எல்லாப் புகழுந் தருமென்றது. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நிலைபெற்ற மக்களுயிர்க்கு மனம் நன்றாக இருப்பது செல்வத்தினைத் தரும். இனமானது நன்றாக இருப்பதானது எல்லாப் புகழினையும் கொடுக்கும்.
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். இன்னாசெய்யாமை குறள் 318: கலைஞர் மு.கருணாநிதி உரை:பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?. மு.வரதராசனார் உரை:தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ. சாலமன் பாப்பையா உரை:அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?. பரிமேலழகர் உரை:தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்: மன் உயிர்க்கு இன்னா செயல்என் கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்? (இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின்,'இன்னாதான் யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.). மணக்குடவர் உரை:தன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பிறர் செய்யும் துன்பம் தன உயிர்க்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிந்தவன், நிலைபேறுடைய பிற உயிர்க்குத் துன்பம் செய்வது என்ன காரணத்தால்?.
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். இனியவைகூறல் குறள் 98: கலைஞர் மு.கருணாநிதி உரை: சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும். மு.வரதராசனார் உரை:பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும். சாலமன் பாப்பையா உரை:பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும். பரிமேலழகர் உரை:சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.). மணக்குடவர் உரை:புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும். திருக்குறளார் வீ. முனிசாமி உரை:பிறர்க்குத் துன்பம் செய்யாத இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் இன்பத்தினைக் கொடுப்பதாகும். மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. சிற்றினஞ்சேராமை குறள் 459: கலைஞர் மு.கருணாநிதி உரை: நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும். மு.வரதராசனார் உரை: மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும். சாலமன் பாப்பையா உரை: ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும். பரிமேலழகர் உரை: மனநலத்தின் மறுமை ஆகும்-ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்று அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து-அதற்கு அச்சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து, (மனநலத்தின் ஆகும் மறுமை என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று, என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று-வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும் நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.). மணக்குடவர் உரை: மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவனுக்கு மனம் நன்றாக இருந்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதற்கு அந்தச் சிறப்புத் தானும் இனம் நன்றாக இருந்தால் பாதுகாப்பான வலிமையினை உடையதாகும். மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. பெண்வழிச்சேறல் குறள் 904: கலைஞர் மு.கருணாநிதி உரை:மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை. மு.வரதராசனார் உரை:மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை. சாலமன் பாப்பையா உரை:தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது. பரிமேலழகர் உரை:மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.). மணக்குடவர் உரை: மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது. இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். நல்குரவு குறள் 1042: கலைஞர் மு.கருணாநிதி உரை: பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது. மு.வரதராசனார் உரை:வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும். சாலமன் பாப்பையா உரை:இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை. பரிமேலழகர் உரை:இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். ('இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர். மணக்குடவர் உரை:நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது குறள் 1315: இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். ஆருயிர் 73, 1141 இன்னுயிர் 327 1209 மாயா உயிர் 1230 1122 73 1132 1070 334 16 1020
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. குறள் 1101: மு.வரதராசனார் உரை: கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: மு.வரதராசனார் உரை:அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.
அகர முதல எழுத்தெல்லாம ஆதி பகவன் முதற்றே உலகு (குறள்.1)
என்றார் அதாவது, எழுத்துகளுக்கெல்லாம் அகரம் முதன்மையாகவும் காரணமாகவும் இருத்தல் போல, கடவுள் உலகிற்கு முதன்மையாகவும் அடிப்படையாகவும் உள்ளார் என்கிறார். ஓர் அதிகாரம் முழுமையும் கடவுளின் பண்பையும், அவனை வழிபடுவதால் அடையும் பயனையும் வள்ளுவம் முனைப்புடன் அறிவுறுத்துகிறது. கடவுளைச் சிறிதும் ஏற்காத பௌத்தத்திற்கு இது முற்றிலும் மாறானது. மேலும், தொடக்கக் காலப் பௌத்தமான ஈனயானம் புலாலை மறுக்கவில்லை. தாமே ஓர் உயிரைக் கொன்று உண்ணக் கூடாதேயன்றிப் பிறர் கொன்ற விலங்கின் இறைச்சியை உண்ணலாம் என்பது அதன் கொள்கை. ஆனால் வள்ளுவமோ இதற்கு மாறானது. உயிர்களுக்குக் கன்ம பலன்களைப் (வினைகளை) புசிக்க வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. ஆனால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், விளைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கன்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம். இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் ‘வகுத்தான் வகுத்த வகையல்லர்” என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான்| என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும், இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும், அறவாழி அந்தணன் தாள் சோந்தார்க் கல்லால் – 8 என்றும், பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும், பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும், திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் எனறே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளுவம் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இ•து அடிப்படை மாறுபடன்றோ! மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லை என்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். ஆனால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உலையா உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ஆள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ஆள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும். தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும், ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும் வள்ளுவம் பெரிதும் வலியுறுத்துவது, சமணத்துக்கு முற்றிலும் மாறானது.இக்கூற்று இந்தியத் தத்துவ மரபுக்கே சிறப்புத் தருவது.