22, அறம்நான்கு; அறிபொருள் ஏழ்; ஒன்று காமத் திறம்மூன்று; எனப்பகுதி செய்து - பெறல்அரிய நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்கு உணர்வார் போலும் ஒழிந்த பொருள். (தொடித்தலை விழுத்தண்டினார்) (கு-௨) அறம் நான்கு- அறத்துப்பால் பாயிரம், இல்லறவியல், துறவியல், ஊழ் இயல் என்ற நான்கு பகுதியை உடையது. அறிபொருள்- அறியத்தக்க பொருட்பால் ஏழ்- அரசியல், அமைச்சியல், அரண் இயல், கூழியல், படையியல், நட்பியல், ஓழிபியல் என ஏழு பகுதிகளையுடையது. காமத்திறம் மூன்று- காமத்துப் பாலின் வகை மூன்று. அவை, ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று, இருபால்கூற்று என்பன. நாலும்- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும்.
25. பாயிரம் நான்கு; இல் லறம் இருபான்; பன்மூன்றே தூயதுறவறம்; ஒன்றுனழ்; ஆக- ஆய அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்து உரைத்தார் நூலின் திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து. (எறிச்சலூர் மலாடனார்) (கு-௨) இது அறத்துப்பாலின் பிரிவைப்பற்றிக் கூறுகின்றது. வள்ளுவனார் நூலில் திறத்து- திருவள்ளுவர் தமது நூலின்கண். பால் தேர்ந்து- பகுக்கவேண்டிய முறையை ஆராய்ந்து. பாயிரம் நான்கு- பாயிரம் நான்கு அதிகாரம். இல்லறம் இருபான்- இல்லறவியல் இருபது அதிகாரம். துறவறம் பன்மூன்று - துறவறவியல் பதின்மூன்று அதிகாரம். ஊழ்ஓன்று- ஊழ்இயல் ஒரு அதிகாரம்.
26. அரசியல் ஐஜந்து; அமைச்சியல் ஈர்ஐந்து: உருவல் அரண் இரண்டு; ஒன்றுஒண்கூழ் - இருவியல் திண்படை; நட்புப் பதினேழ்; குடிபதின்மூன்று எண்பொருள் ஏழாம் இவை. (போக்கியார்) (கு-௨) இது பொருட்பாலின் பிரிவை உணர்த்துகின்றது. அரசியல் ஐஜந்து- அரசியல் இருபத்தைந்து அதிகாரம். அமைச்சியல் ஈர்ஐந்து- அமைச்சியல் பத்து அதிகாரம். உருவல் அரண் இரண்டு- சிறந்த வலிய அரண் இயல் இரண்ட திகாரம். ஒன்று ஓண்கூழ்- கூழ் இயல் ஓரு அதிகாரம். இருஇயல் திண்படை- படை இயல் இரண்டு அதிகாரம். நட்பு பதினேழ்- நட்பியல் பதினேழு அதிகாரம். குடி. பதின்மூன்று- ஓழிபுஇயல் பதின்மூன்று அதிகாரம். எண்பொருள் ஏழாம் இவை- எண்ணப் பட்ட பொருட்பாலின் பகுதி ஏழாகிய இவைகள்.
27. கூண்பால் ஏழ் கறு இரண்டு பென்பால்: குடுத்து பூண்பால் இருபால்ஓர் ஆறாக; - மாண்பாய காமத்தின் பக்கம் ஒரு மூன்றுகக் கட்டுரைத்தார் நாமத்தின் வள்ளுவனார் நன்கு. (மோசிகீரனார்) (கு-௨) இது காமத்துப்பாலின் பகுதிகளைக் கூறுகின்றது. ஆண்பால் ஏழ்- ஆண்பால் இயல் ஏழு அதிகாரம். ஆறு இரண்டு பெண்பால்- பெண்பால் இயல் பன்னிரண்டு அதிகாரம். அடுத்து அன்பு பூண்பால்- ஓருவரை ஒருவர் நெருங்கி அன்பு கொள்வ தாகிய. இருபால் ஓர்ஆறு- இருபால் இயல் ஆறு அதிகாரம். நாமத்தின்- பெயரில் சிறந்த. (22 - வது வெண்பாவில் உள்ள பொருள் 25, 26, 2727 ஆகிய மூன்று வெண்பாக்களில் விரித்துரைக்கப்பட்டது).
28 ஐஜறும், நூறும் அதிகாரம் மூன்றும் ஆம், மெய்ஆய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது தந்தான் உலகிற்குத் தான், வள்ளுவன் ஆகி அம்தா மரைமேல் அயன். (காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்) (கு-௨) ஐஆறும், நூறும் அதிகாரம் மூன்றுமாய்- நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்களாய். “அம்தா மரைமேல் அயன் வள்ளுவன் ஆகி என்பதை முதலில் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். இது திருக்குறளின் அதிகார எண்ணிக்கை யைக் கூறிற்று. வள்ளுவர் நான்முகன் அவதாரம்
இல்லாத எப்பொருளும் இல்லை; ஆல் - சொல்லால் பரந்த பாவால் என்பயன்? வள்ளுவனார் சுரந்தபா வையத் துணை, (மதுரைத் தமிழ் நாகனார்) (கு-௨) எல்லாப்பொருளும்- பலவகை நூல்களில் சொல்லப் படும் எல்லாப் பொருள்களும். வள்ளுவனார் சுரந்தபா- திருக்குறளே. வையத் துணை- உலகினர்க்குத் துணையாகும்.
33, இன்பம்,பொருள், அறம்வீடு என்னும் இந்நான்கும் முன்புஅறியச் சொன்ன முதுமொழிநூல்- மன்பதை கட்கு உள்ள அரிது; என்று அவை, வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள். (நரிவெரூஉத்தலையார்) (கு-௨) முதுமொழி நூல்- வேதம். மன்பதை- மக்கள். உள்ள அரிது- ஓதி உணர்வதற்கு அரிதானது. அவை- அவ்வேதப் பொருள்களை. “அவை உலகம் கொள்ள வள்ளுவர் குறள் மொழிந்தார்” என்று மாற்றிப் பொருள் கொள்ளுக.
34. புலவர் திருவள் ளுவர் அன்றிப் பூமேல் சிலவர் புலவர் எனச் செப்பல், நிலவு பிறங்குஓளி மாலைக்கும் பெயர்மாலை; மற்றும் கறங்குஇருள் மாலைக்கும் பெயர். (மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க்கிறார்) (கு-௨) நிலவுஓளி வீசும் மாலைக் காலத்தையும், மாலை என்று கூறுவர்; நிலவு இல்லாத இருட்டுள்ள மாலைக் காலத்தையும் மாலையென்று கூறுவர். இது போன்றதே திருவள்ளுவரையும் புலவர் என்று சொல்லி, வேறு சிலரையும் புலவர் என்று கூறுவது.
35. இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும், மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ - அன்புஒழியாது உள்ளி உணர உரைத்தாரே; ஓதுசீர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து. (மதுரை அறுவை வாணிகன் இனவேட்டனார்.) (கு-௨) “ஓதுசீர் வள்ளுவர் இன்பமும். . . உள்ளி உணர, வாயுறை வாழ்த்து உரைத்தாரே' என்று மாற்றிப் பொருள் கொள்க. திருக்குறளை வாயுறை வாழ்த்தாகக் கூறினார். வாயுறை வாழ்த்து என்பதுநன்மை - தீமைகளை எடுத்துக்கூறி அறிவுறுத்துவது.
37. அறம்முப்பத் தெட்டுப், பொருள்எழுபது, இன்பத் திறம்இருபத்து ஐந்தால் தெளிய- முறைமையால் வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார் ஒத வருக்கற்றது உலகு. (கு-௨) அறம் முப்பத்தெட்டு- அறத்துப்பால் முப்பத்தெட்டு அதிகாரம். பொருள் எழுபது- பொருட்பால் எழுபது அதிகாரம். இன்பத் திறம் இருபத்தைந்து- இன்பத்துப்பால் இருபத்தைந்து அதிகாரம். உலகு வழுக்குஅற்றது- உலகம் குற்றத்திலிருந்து தப்பியது. இச்செய்யுள் திருக்குறள் அதிகார எண்ணிக்கையைக் கூறியது.
38, அறம்முதல் நான்கும் அகல்இடத்தோர் எல்லாம் 'திறம்உறத் தேர்ந்து தெளியக் குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே முன்னை முதுவோர் மொழி. (கோஷர்கிறார்) (கு-௨) அகல் இடத்தோர்- பெரிய இவ்வுலகில் உள்ளோர். திறம்உற- வகைப்பட. வள்ளுவனார் பால் முறை நேர்- வள்ளுவரின் முப்பால் நீதிக்கு எதிரில். முன்னை முதுவோர் மொழி ஓவ்வாதுஏ- பழம்புலவர்கள் மொழிந்த நூல்களும் ஓப்பாகாது.
39, தேவிற் சிறந்த திருவள்ளுவர், குறள்வெண் பாவில் சிறந்திடும் முப்பால்பகரார்- நாவிற்கு உயல்இல்லை; சொற்சுவை ஓர்வுஇல்லை; மற்றும் செயல்இல்லை என்னும் திரு. (உறையூர் முதுகூற்றனார்) (கு-௨) திருவள்ளுவர்- திருவள்ளுவரது. குறள் வெண்பாவில் சிறந்திடும்- குறள் வெண்பாக்களால் அமைந்து சிறந்திருக்கின்ற. முப்பால்- முப்பால் நூலை. பகரார்- சொல்லாதவர்களின். உயல் இல்லை- வாழ்வில்லை. ஓர்வு- உணர்ச்சி. என்னும் திரு- என்று நினைத்து இலக்குமி சேரமாட்டாள்.
40. இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும் செம்மை நெறியில் தெளிவுபெற மும்மையின், வீடுஅவற்றின் நான்கின் விதிவழங்க, வள்ளுவனார் பாடினர் இன்குறள்வெண் பா. (இழிகட்பெரும்கண்ணனார்) (கு-௨) இம்மை மறுமை இரண்டும்- இம்மை மறுமை இரண்டின் பயனையும். எழுமைக்கும்- ஏழுபிறப்பினும். செம்மை நெறியில்- நல்ல முறையிலே. தெளிவு பெற- அறிந்து தெளியும்படி. மும்மையின்- முப்பால்களில். வீடு அவற்றின் நான்கின் விதிவழங்க - வீடோடு கூடிய அவைகள் நான்கின் விதிகளையும் கூற; “வள்ளுவர் இக்குறள் வெண்பா பாடினர்.”
41. ஆவனவும் ஆகா தனவும் அறிவுடையார் யாவரும் வல்லார்எடுத்து இயம்பத் தேவர் திருவள் ளுவர்தாமும் செப்பியவே செய்வார்; பொருவில் ஒழுக்கம்பூண் டார். (செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார்! (கு-௨) “அறிவுடையார் யாவரும் எடுத்து இயம்ப வல்லார்”, “பொருவில் ஓழுக்கம் பூண்டார் தேவர் திருவள்ளுவர் தாம் செப்பியவே செய்வார்”. அறிவுள்ளவர்கள் இிருக்குறளிலிருந்தே செய்யக்கூடியன இவை, செய்யக்கூடாதன இவை என்பதை எடுத்துக்கூற வல்லவர் ஆவார்- ஓழுக்கம் உள்ளவர் திருவள்ளுவர் கூறியபடியே நடப்பார்கள். தேவர் இிருவள்ளுவர்- தேவராகிய திருவள்ளுவர்.
42, வேதப் பொருளை விரகால் விரித்து, உலகோர் ஓதத் தமிழால் உரைசெய்தார்; ஆதலால், உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம் உண்டுஎன்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு, (செயலூர்க் கொடும் செங்கண்ணனார்) (கு-௨) விரகால் விரித்து - அறிந்துகொள்ளும் உபாயத்தால் விரிவாக. உள்ளுநர் - நினைக்கின்றவர். “வள்ளுவர் வாய்மொழி மாட்டு உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம் உண்டு என்ப” என்று பொருள் கொள்க.
43. ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து, இதனின்இது
சீரியது என்றுஒன்றைச் செப்பரிதுஆல்; ஆரியம், வேதம் உடைத்துத் தமிழ், திரு வள்ளுவனார் ஓது குறட்பா உடைத்து. (வண்ணக்கம் சாத்தனார்)
(கு-௨) இதனின் இது சீரியது- இதைவிட இது சிறந்தது. செப்ப அரிது- சொல்லமுடியாது. ஆரியம்- வடமொழி.
44. ஒருவர் இருகுறளே முப்பாலின் ஒதும் தருமம் முதல்நான்கும் சாலும்;- அருமறைகள் ஐந்தும், சமயநூல் ஆறும், நம் வள்ளுவனார் புந்தி மொழிந்த பொருள். (களத்தூர்கிளார்) (கு-௨) ஒருவர்- ஒருவர்க்கு. இருகுறளே- சிறந்த குறளிலே. முப்பாலின் ஓதும்- மூன்று பகுதியிலும் கூறப்படும். சாலும்- போதுமானதாகும். அருமறைகள் ஐந்து- இருக்கு, எசுர், சாமம், அதர்வணம், பாரதம் என்பன. சமயநூல் ஆறும்- அறுவகைச் சமயங்களுக்குரிய ஆறு நூல்கள். (சமயம் ஆறு 9-ஆம் வெண்பா பார்க்க.)
45, எழுத்து, அசை, சீர், அடி, சொல், பொருள், யாப்பு, வழுக்குஇல் வனப்புஅணி, வண்ணம், இருக்கின்றி என்றுஎவர் செய்தன எல்லாம் இயம்பின இன்றுஇவர் இன்குறள்வெண் பா, (நச்சமனார்) (க-௨) எழுத்துமுதல் வண்ணம்வரை உள்ளவை செய்யுளின் இயல்பு. இழுக்குஇன்றி - குற்றம் இல்லாமல் குறள் வெண்பாவில் எழுத்து முதல் வண்ணம் வரையுள்ள இயல்புகள் அமைந்துள்ளன.
46, கலைநிரம்பிக் காண்டற்கு இனிதுஆகிக் கண்ணின் நிலைநிரம்பு நீர்மைத்து எனினும் தொலைவுஇலா வான்ஊர் மதியம் தனக்கு உண்டோ, வள்ளுவர்முப் பால்நூல் நயத்தின் பயன் (அக்காரக்கனி நச்சமனார்) (கு-௨) கலைநிரம்பி- கதிர்நிறைந்து. கண்ணின் நிலை- கண்ணால்பார்க்கும் நிலையில். நிரம்பும் நீர்மைத்து- நிறைந்திருக்கும் தன்மையுடையது. தொலைவுஇலா- அழிவில்லாத. வான்- வானம். “வள்ளுவர் முப்பால் நூல் நயத்தினால் வரும் வயன் தொலைவுஇலா வான்களர் மதியம் தனச்கு உண்டோ” என்று மாற்றிப் பொருள் கொள்க.
47. அறம்தகளி, ஆன்ற பொருள்திரி, இன்பு சிறந்தநெய், செஞ்சொல்தீத் தண்டு குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்இருள் நீக்கும் விளக்கு. (நப்பாலத்தனார்) (கு-௨) திருக்குறள் மக்கள் மன இருட்டை நீக்கும் விளக்காகும். அறம் அகல்; பொருள்திரி; இன்பம் நெய்; செஞ்சொல் தண்டு; குறள்வெண்பா தீ. இவ்வாறு அமைந்தது திருக்குறள் விளக்கு. ஆன்ற- சிறந்த. “செம்சொல் தண்டு; த குறும்பாவா” என்று மாற்றிப் பொருள் கொள்ளுக.
48. உள்ளக் கமலம் மலர்த்தி, உளத்துள்ள தள்ளற்கு அரியஇருள் தள்ளுதலால், வள்ளுவனார் வெள்ளைக் குறட்பாவும் வெம்கதிரும் ஒக்கும்எனக் கொள்ளத் தகும் குணத்தைக் கொண்டு. (குலபதி நாயனார்! (கு-௨) குறளும் சூரியனும் ஓரு தன்மையுடையன என்று கூறுகிறது இச்செய்யுள். தன்ளற்கு அரிய இருள்- நீக்க முடியாத அறியாமை என்னும் இருட்டை. வெள்ளைக்குறட்பா- குறள்வெண்பா.
50. றன் அறிந்தேம்; ஆன்ற பொருள் அறிந்தேம்; இன்பின் திறன் அறிந்தேம்; வீடு தெளிந்தேம்; மறன் எறிந்த வாள்ஆர் நெடுமாற! வள்ளுவனார் தம் வாயால் கேளா தனவெல்லாம் சேட்டு. (கொடிஞாழன் மாணிபூதனார்) (கு-௨) “மறன் எறிந்த... கேட்டு, அறன் அறிந்தேம்... தெளிந்தேம்” என்று மாற்றிப் பொருள் கொள்க. ஆன்ற- சிறந்த. மறன் எறிந்த- பகைவரைக்கொன்ற. வாள்ஆர்- வாளாயும் ஏந்திய. 51. சிந்தைக்கு இனிய; செவிக்கு இனிய; வாய்க்குஇனி௰; வந்த இருவிளைக்கு மாமருந்து; முந்திய நன்னெறி நாம் அறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய இன்குறள்வெண் பா. (கவுணியனார்) (கு-௨) முந்திய பழமையான. வந்த- தொடர்ந்து வந்த. இருவினை- நல்வினை, தீவினை. நல்நெறி- நல்லொழுக்கங்களை. நாப்புலமை- நாவன்மையும் புலமையும் நிறைந்த.
52. வெள்ளி, வியாழம், விளங்கு இரவி, வெண்திங்கள் பொள்என நீக்கும் புறஇருளை; - தெள்ளிய வள்ளுவர் இன்குறள் வெண்பா, அகிலத்தோர் உள்இருள் நீக்கும் ஒளி. (மதுரைப்பாலாசிரியனார்) (கு-௨) இரவி- சூரியன். பொள்என- விரைவில். உள் இருள்- மன இருள். வெள்ளி முதலியன மனத்திருளை நீக்கமாட்டா. வெள்ளி, வியாழம் இரண்டும் பிரகாசம் உள்ள நட்சத்திரங்கள்.
53. வள்ளுவர் பாட்டின் வளம் உரைக்கின், வாய்மடுக்கும் தெள் அழுதின் தீம்சவையும் ஒவ்வாதுஆல்:-தெள்துமுதம் உண்டுஅறுவார் தேவர்; உலகு அடைய உண்ணும்ஆல் வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து, (ஆலங்குடி வங்களார்) (கு-௨) வாய்மடுக்கும்- உண்ணப்படுகின்ற. தீம் சுவையும்- இனிய சுவையும். “வண்தமிழின் முப்பால் மகிழ்ந்த உலகு அடைய உண்ணும் ஆல்”. முப்பால்- திருக்குறளாகிய அமுதத்தை. மகிழ்ந்து- மகிழ்ச்சியுடன். உலகுஅடைய- உலகம் முழுவதும்.