திருவள்ளுவரின் சமயம் -அருள் நெறி
எழுபிறப்பு: மனிதன் மீண்டும் பிறந்து எழுந்து வாழ்வதே மிகப்பெறும் துன்பமாகும்
குறள் 339:உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. மரணம் எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
குறள் 38:வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். வீணாகும் நாளே இல்லை என எல்லா நாளும் ஒருவன் செய்வான் ஆயின், அது அவன் மீண்டும் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
குறள் 358:பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
குறள் 356:கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர், திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர்.
குறள் 361:அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து ஆசை.
குறள் 362: வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். ஒருவன் ஒன்றை விரும்புவதனால் மீண்டும் மீண்டும் பிறக்கும்படி இல்லாது பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது ஆசை அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
குறள் 370:ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு பிறவா நிலையில் வாழும் இயல்பைக் கொடுக்கும்.
குறள் 357:ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
திருக்குறளின் மனிதன் தன் ஆன்மாவின் வினை துரத்த மீண்டும் மீண்டும் பிறக்கிறான் என்பது பல முறை கூறப்பட்டதில் சில காட்டியுள்ளோம்.
கிறிஸ்துவர் மக்களிடையே தூண்டிய கட்டுக்கதை ஆரிய - திராவிடர். அடுத்தது மதசார்பின்மை.
அது போலே வள்ளுவர் படம் மாறியது.
“நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்’ என்றார்.திரு.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”. – கருணாநிதி
திருவள்ளுவர் 25க்கும் மேற்பட்ட குறளில் கடவுள் பெயர்களை சொல்லியும் உள்ளார்
இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar
மனிதன் ஆன்மாவின் பாவம் தொடர் மீண்டும் பிறத்டல் என்பது பல சங்கப் பாடல்களிலும் உண்டு. ஆனால் திராவிடர் இயக்கத்தோடு தொடர்பு கொண்ட திரு.இலக்குவனார், திரு.அப்பாதுரை, திரு.குழந்தை போன்றோர் திருக்குறளின் தமிழர் மெய்யியலை பிரிக்க, பிறப்பு எனில் மனித வாழ்வின் பல நிலைகள், பரம்பரை என பல்வேறு விதமாக வள்ளுவர் உள்ளத்திற்கு மாறாக தன்னிச்சையாய் உரை புனைந்தனர்.
சாந்தோம் கிறிஸ்துவப் பேராயர் அருளப்பா
ஜி.யு.போப் திருவள்ளுவர் பைபிள் அறிந்தால் மட்டுமே திருக்குறள் எழுதியிருக்க முடியும் என பைத்தியக்காரத்தனமாய் சொன்னதை வைத்து சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் அருளப்பா போலி ஓலைச்சுவடி செப்பு தகடு தயாரிக்க ஆசார்யா பால் கணேஷ் ஐயர் என்பவருக்கு 1970களில் லட்சக்கணக்கில் பணம் தந்து ஏற்பாடு செய்தார். தன்னுடைய பேராயர் முகவரியிலேயே ஆசார்யா பால் உள்ளவர் என பாஸ்போர்ட் எடுத்து உலக சுற்றுலா, மற்றும் போப் அரசரை சந்திக்கவும் செய்தார். தன் காரை இலவசமாகத் தந்தார்.
திருக்குறள் கிருத்துவ நூல் என புத்தகம் தயாரிக்க ஆய்வுக் குழு தயார் செய்தார். இதன் பின்னணி தேவநேயப் பாவாணர். முகம் தெய்வநாயகம்.
கலைஞர் வாழ்த்துரையோடு வந்த நூல். கத்தோலிக்கம் மற்றும் பல சிஎஸ் ஐ சர்ச் பாதிர்கள் கலந்து கொள்ள அன்பழகன் தலைமையில் வெளியிடப்பட்டது.
“‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்-
“வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧31
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧௭3 -நன்றி- தகவல், படங்கள் தேவப்ரியா சாலமன்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் துவக்கி, கிறிஸ்துவப் புராணக்கதை நாயகர் ஏசுவின் இரட்டையர் தம்பி தாமஸ் இந்தியா வந்து சொல்லித் தர உருவானதே திருக்குறள் - சைவ சித்தாந்தம் எனும் உளறல். ஏசு தோமோ யார் வாழ்ந்தார் என்பதற்கும் ஆதாரம் கிடையாது.
பேராயர் துணைவர்கள் சர்ச்சின் செயல்பாடு ஆதாரம் இல்லா கட்டுக்கதை என உணர்ந்து, ஆசார்யா பால் காணேஷ் மீது காவல் துறையில் புகார் செய்ய, வழக்கு நீதிமன்றத்தில் நடக்க, சிறை தண்டனை உறுதியானது.
ஆசார்யா பால் சர்ச் தூண்டி செய்தது தான் என இல்லஸ்ட்ரேடட் வீக்லீ பத்திரிக்கை பேட்டியில் சொல்லி மேலும் ஆதாரம் வெளியிடுவேன் என்றிட பேரம் பேசி வங்கியில் பணமாக் இருந்தவை, கார் போன்றவை திருப்பித்தர வேண்டும், சர்ச் பணத்தில் வாங்கிய வீடு, சிறு நகைகள் வைத்துக்க் கொளலாம் என உடன்பாட்டில் வழக்கு -நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துகொண்டனர்.
பேராயர் அருளப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார்.
சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் சின்னப்பா சாந்தோம் "புனித தோமையார்" 100 கோடி செலவில் சினிமா படம் அறிவித்து கலைஞர் தலைமையில் விழா நடந்தது
“`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதியஅவதாரம் குறித்துபுனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி - கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும்.அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா? `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது.
பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார்.
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.
இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. pages92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar
தெய்வநாயகம், தமிழ் தேசியம் பேசும் பெங்களுர் குணாவோடு இணைய திருச்சி கிறிஸ்துவப் பள்ளிக்குடத்தில் திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களின் நற்கைகளால் திறப்புவிழா செய்த திருவள்ளுவர் சிலை மேலே
திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் ஜோசப் கொலங்கோடன்-இவர் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் புத்தகங்கள் எழுதியுள்ளவர். இவர் புத்தகம்–“The Historicity of Apostle Thomas”– 1993
தோமா கதைக்கு ஆதாரம் காட்ட, சிரியாவில் வாழ்ந்தவர்கள் தான் மணிமேகலை- ஆசிரியராம். கதை கட்ட அளவே இல்லையா?
//Any way Manimekhalai Gathai 27 describes the ‘Isanuvadigal ‘ of Vanchimanagar with strict monotheism, most likely a reference to the nascent Christian community.// Page -32.
நாம் கீழே அந்த மணிமேகலை வரிகளைக் காண்போம்.
27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
என்றவன் தன்னை விட்டு ‘இறைவன் ஈசன்’ என
நின்ற சைவ வாதி நேர்படுதலும்
‘பரசும் நின் தெய்வம் எப்படித்து?’ என்ன
‘இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கை... 27-090
தோமா இந்தியாவில் மோசடிகள்- சுவிசேஷம் புனைந்த வழியிலேயே
நாம் கீழே அந்த மணிமேகலை வரிகளைக் காண்போம்.
27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
என்றவன் தன்னை விட்டு ‘இறைவன் ஈசன்’ என
நின்ற சைவ வாதி நேர்படுதலும்
‘பரசும் நின் தெய்வம் எப்படித்து?’ என்ன
‘இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கை... 27-090
தோமா இந்தியாவில் மோசடிகள்- சுவிசேஷம் புனைந்த வழியிலேயே
தமிழரை கேவலப் படுத்தும் சர்ச் தரும் பட்டமும் அதோடு அதன் பின்பலமுள்ள பள்ளி -கல்லூரி- பல்கலை கழகங்கள் நூலகன்கள் என்பதால் தமிழ் புலவர்கள் வாய் திறப்பதில்லை.
பெங்களூர் குணா - சாமுவேல் குணசீலன் - அறிஞர் குணா என்று அழைக்கப்படும் திரு சாமுவேல் குணசீலன், கோலார் தங்கவயலில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்தவர். தந்தையார் திரு அ.மா.து. சாமுவேல் அவர்கள். தாயார் திருமதி மனோன்மணி அவர்கள்.http://namvaergall.blogspot.in/2013/04/blog-post_2.html
திருவள்ளுவர் தமிழரா? இல்லை தமிழ் மெய்யியல் விரோதக் கிறிஸ்துவரா? - சொல்லுங்கள்