பகவன் முதற்றே உலகு
உலகத்தில் உள்ள சகல அறிவும் அவனிடம் இருந்து வந்தது என்பதை சொல்ல வாலறிவன் சர்வக்ஞர் என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
மற்றீண்டு வாரா நெறி. (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:356)
இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339)
இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:362)
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358:மெய்யுணர்தல்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38:அறன்வலியுறுத்தல்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை குறள் 36:அறன்வலியுறுத்தல்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். குறள் 362: அவாவறுத்தல்
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். குறள் 370:அவாவறுத்தல்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. குறள் 331:நிலையாமை
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338:நிலையாமை
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339:நிலையாமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். குறள் 140: ஒழுக்கமுடைமை
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். குறள் 850: புல்லறிவாண்மை
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல்
மணக்குடவர் உரை:முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று